உங்கள் வருகைக்கு நன்றி

குழந்தைக்கு தந்தை யார்?:சோதனை நடத்த வீதியில் உலாவரும் வேன்

திங்கள், 3 ஜூன், 2013


  

குழந்தைக்கு தந்தை யார்?: மரபணு சோதனை நடத்த வீதியில் உலாவரும் வேன்
அமெரிக்காவில் ஆண்களும் சரி, பெண்களும் சரி, திருமண உறவுக்கு அப்பால் வேறு நபர்களுடனும் செக்ஸ் உறவு வைத்து கொள்வது அதிகம். இதனால் மனைவிக்கு பிறக்கும் குழந்தை உண்மையிலேயே தனக்கு பிறந்தது தானா? என்ற சந்தேகம் பல ஆண்களுக்கு ஏற்படுவது உண்டு. 

இதை கண்டுபிடிக்க பல ஆண்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து சென்று மரபணு சோதனை நடத்துகிறார்கள். இப்போது இந்த சோதனை நடத்த நடமாடும் வேன்கள் வந்து விட்டன. 

நியூயார்க் நகரில் இந்த வேன் வீதி வீதியாக உலா வருகிறது. தெருவில் ஏதாவது ஒரு இடத்தில் வேனை நிறுத்துகிறார்கள். அப்போது ஆண்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து சென்று சோதனை நடத்துகிறார்கள். இந்த சோதனைக்கு ரூ35 ஆயிரம் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. 

சோதனை நடந்த சில தினங்களில் சோதனை முடிவை இ-மெயில் மூலம் தெரிவிக்கிறார்கள். ஆனால் மரபணு சோதனைக்கு அமெரிக்காவில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. குறிப்பாக பெண்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

ஏற்கனவே அமெரிக்காவில் விவாகரத்து அதிகம். இந்த சோதனையால் கணவன்-மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டு மேலும் விவாகரத்து அதிகரிக்கலாம்.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets