மாணவர்களே யோசித்து நல்ல கல்லூரி எது என்று தேர்வு செய்உங்கள்,
செவ்வாய், 4 ஜூன், 2013
மாணவர்கள் எந்த கல்லூரியை
தேர்ந்தெடுப்பது,
அவ்வாறு
தேர்ந்தெடுக்கப்பட்ட கல்லூரியில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் இருக்குமா என்று
குழப்பத்தில் ஆழ்ந்துள்ள நேரமிது. மாணவர்கள் பதறாமல் நிதானமாக யோசித்து நல்ல
கல்லூரி எது என்று தேர்வு செய்து, அதன்
பிறகு சேரலாம்.
கல்லூரியை
தேர்ந்தெடுக்கும் போது முக்கியமாக கவனிக்க வேண்டிய சில..........
* கல்லூரியைத்
தேர்ந்தெடுப்பதற்கு முன்பு அங்குள்ள ஆசிரியர்கள், வகுப்பறைகள், ஆய்வகங்கள் உள்ளிட்ட வசதிகளைப் பார்க்க வேண்டும்.
* விடுதி வசதிகள், மொத்தக் கட்டணம், ஆராய்ச்சி மற்றும் விளையாட்டுக்கு
அளிக்கப்படும் முக்கியத்துவம் போன்றவற்றைப் பார்க்க வேண்டும். அவற்றை அடிப்படையாக
வைத்து கல்லூரியைத் தேர்ந்தெடுக்கலாம்.
* அந்தக் கல்லூரியில் உள்ள
பாடப்பிரிவுகள் என்.பி.ஏ.வால் அங்கீகரிக்கப்பட்டவையா என்று பார்க்க வேண்டும்.
* கடந்த ஆண்டு அந்தக் கல்லூரியில்
மொத்த தேர்ச்சி விகிதம், படிக்கும்போதே
வேலைவாய்ப்பைப் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை ஆகியவற்றையும் கணக்கில் கொள்ள
வேண்டும்.
* அந்தக் கல்லூரி எவ்வாறு
நிர்வகிக்கப்படுகிறது, அங்குள்ள
கலாசாரம், வளாகத்தில் கல்விக்கு ஏற்ற
சூழல் நிலவுகிறதா உள்ளிட்ட விஷயங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு
முக்கியமான சிலவற்றை விசாரித்த பின்பு, கல்லூரியை தேர்வு செய்து படிப்பது மாணவர்களுக்கு நன்னை
பயக்கும்.