உங்கள் வருகைக்கு நன்றி

குழந்தையின் அறிவுத்திறன் பல மடங்கு மேம்படும்.

புதன், 13 மார்ச், 2019

குழந்தையின் கை நரம்பு, தசைகளை வலுவாக்கும், 'பைன் மோட்டார் திறன்' பயிற்சி மூளை, கை, கண் மூன்றும் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான திறனை அதிகரிக்க, 'பைன் மோட்டார் திறன்' பயிற்சி என்று ஒன்று உண்டு. இதை குழந்தைகளுக்குப் பழக்கப்படுத்தினால், கவனிக்கும் திறன் அதிகரிக்கும்; கையெழுத்தும் அழகாகும். ஒன்றரை வயதில் இருந்தே, இப்பயிற்சி தரலாம். வீட்டில் சின்னச் சின்ன பயிற்சிகள் கொடுப்பதன் மூலமே, குழந்தைகளிடம் இத்திறனை அதிகரிக்கலாம். பானை அல்லது பக்கெட்டிலிருந்து கைகளில் தண்ணீர் அள்ளி, அதிகம் சிந்தாமல் அருகிலிருக்கும் வாட்டர் பாட்டில்களில் ஊற்றி நிரப்ப, பயிற்சி வழங்கலாம். இதனால், குழந்தைகளின் கை விரல்கள் வலுப்பெறும்; கவனத்திறனும் அதிகரிக்கும். குழந்தைகளின் உடையில் இருக்கும் பட்டன்களை, அவர்களே போட, பயிற்சி கொடுக்கலாம். முட்டைகளை வைக்கும் பெட்டியில், ஒவ்வொரு குழியிலும் ஒவ்வொரு நிறத்தை பெயின்ட் செய்து, குழந்தைகளிடம் பல நிறங்களில் பந்துகளை கொடுத்து, அந்தந்த நிற குழிகளில் நிரப்ப சொல்லலாம். பந்துகளுக்கு பதில், கூழாங்கற்களில் பெயின்ட் செய்தும் பயன்படுத்தலாம். பல்வேறு நிறமுடைய உருளை வடிவ வற்றல்களை வாங்கி கொடுத்து, நுாலில் கோர்க்கவும், நிறங்களை கற்கும் வயது எனில், குறிப்பிட்ட நிறத்தை சொல்லியும், கோர்க்க சொல்லலாம். இதனால், குழந்தைகள் எந்த பொருளையும் இறுக்கமாக பிடிக்கும் திறனை பெறுவர்; இது, நாளடைவில் அவர்கள் பென்சில், பேனாவை எளிதாக பிடித்து எழுத உதவும். இதுதவிர, நிறங்களையும் நினைவில் கொள்வர். வெவ்வேறு வண்ணங்களை குழந்தைகளின் விரலில் தடவி, ஒரு தாளில், அவர்களின் விரல்களை அச்சு வைக்க சொல்லலாம். 2 வயதுக்கு மேற்பட்டோர் எனில், விரல் அச்சுகளின் மூலம் வெவ்வேறு உருவங்களை உருவாக்க சொல்லலாம். இதனால், அவர்களின் கை தசைகள் வலுவடையும்; கற்பனைத்திறனும் விரியும். சீனா களிமண்ணில், அவர்களுக்கு பிடித்த உருவங்களை செய்ய சொல்லலாம் ஒன்றரை வயதுக்கு பின், 'க்ரேயான்ஸ், சாக்பீஸ்' கொடுத்து, கிறுக்க பழக்க வேண்டும். குழந்தையின் கைகளில், மொபைல் போன் கொடுப்பதை தவிர்த்து, உண்டியலில் சில்லரை நாணயங்களை போட செய்தல், பூப்பறிக்க கற்று கொடுத்தல், போன்ற பயிற்சிகளை, பள்ளியில் சேர்ப்பதற்கு முன் வழங்கினால், அவர்களின் அறிவுத்திறன் பல மடங்கு மேம்படும்.

குழந்தைகள் நல மருத்துவர், பழனிராஜ்:

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets