உங்கள் வாழ்க்கை வழுக்காமல் இருக்க.
வியாழன், 17 செப்டம்பர், 2020
உங்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான பலவிதமான தீர்மானங்களை மேற்கொண்டிருக்கலாம். இவற்றோடு, உங்கள் நிதி வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்வதற்கான உறுதிமொழிகளையும் சேர்த்துக்கொள்ளலாம். அந்த வகையில், உங்கள் சேமிப்பை அதிகமாக்கி, நிதி வளத்தை பெருக்கி கொள்ள உதவக்கூடிய எளிய வழிகளை பார்க்கலாம்.
கடனைகவனி
கடன்
சுமையை குறைப்பது என்பது உங்கள் தீர்மானமாக இருக்கட்டும். கிரெடிட்
கார்டு பயன்படுத்துவர் எனில், நிலுவையில் உள்ள தொகையை
செலுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். கடனை அடைக்கவில்லை எனில், உங்கள் பணத்தை இழக்கிறீர்கள் என பொருள். அதிக வட்டி கடனை முதலில் அடைக்கவேண்டும்.
வாங்குவதில்கவனம்
உங்கள்
ஷாப்பிங் பழக்கத்தை கட்டுப்படுத்துங்கள். தேவையில்லாத பொருட்களை வாங்குவது மற்றும்
பார்த்தவுடன் பொருட்களை வாங்குவது வீண் செலவை ஏற்படுத்தும். முன்கூட்டியே
திட்டமிட்டு தேவையான பொருட்களை மட்டுமே வாங்குவதன் மூலம்,
கஷ்டப்பட்டு
சம்பாதித்த பணத்தை மிச்சமாக்கலாம்.
பணத்தின்
பாதை
உங்கள்
பணத்தை எதற்காக எல்லாம் செலவிட்டு கொண்டிருக்கிறீர்கள் என்பதை தெளிவாக
உணர்ந்திருக்கிறீர்களா? அதே போல எங்கெல்லாம் முதலீடு செய்திருக்கிறீர்கள் என்பதிலும்
தெளிவு வேண்டும். இந்த விபரங்களை எல்லாம் குறித்து வைப்பது, கையில் உள்ள பணத்தை சிறந்த முறையில் திட்டமிட உதவும்.
சேமிப்பும்
முதலீடும்
மாதந்தோறும்
குறிப்பிட்ட தொகையை சேமித்து வையுங்கள். ஆனால் இந்த தொகை சேமிப்பு
கணக்கில்
முடங்கி விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். சேமித்த பணத்தை சரியான சாதனங்களில்
முதலீடு செய்வதன் மூலம் அதிக பலன் பெறலாம். உங்கள் நிதி இலக்குகளுக்கு ஏற்ற
முதலீட்டு வாய்ப்பை தேர்வு செய்யுங்கள்.
சேமிப்பின்
பலன்
சேமிப்பது
அவசியமானது என்றாலும், அதற்காக செலவே செய்யாமல்
இருக்க வேண்டும் என்றில்லை. உங்களுக்கு பலனையும், மதிப்பையும் தரக்கூடிய செலவில் ஈடுபடுவதில் தவறில்லை. கடனையும், செலவையும் கட்டுப்படுத்தி, சரியான வகையில் முதலீட்டையும்
மேற்கொண்டிருந்தால், விருப்பமான செலவுகளிலும்
ஈடுபடலாம். அது வாழ்க்கையை வளமாக்கும்.