சுவர்க் கடிகார தயாரிப்பு பயிற்சி
திங்கள், 16 ஏப்ரல், 2012
எந்த வீட்டுக்குள் நுழைந்தாலும், நம்மையும் அறியாமல் கண்கள் தேடுவது சுவர்க் கடிகாரத்தை! குடிசை வீடு முதல் மாட மாளிகை வரை கடிகாரம் இல்லாத இடமே இருக்க முடியாது. எந்த சந்தர்ப்பத்துக்கும் கொடுக்க வசதியான அன்பளிப்பும்கூட! பாண்டிச்சேரி ஹேமலதாவின் வீட்டில் எந்தப் பக்கம் திரும்பினாலும் சுவர்க் கடிகாரங்கள்... வீட்டை அலங்கரிக்கிற அழகுப் பொருளில் தொடங்கி, உபயோகமில்லை என ஓரங்கட்டும் பொருள்கள் வரை எல்லாவற்றிலும் கடிகாரம் சிரிக்கிறது. பாண்டிச்சேரியில் ‘துலிப் ஆர்ட்ஸ் அண்ட் கிராஃப்ட்ஸ்’ நடத்துகிற ஹேமலதா, 250க்கும் மேலான கைவினைக் கலைகள் தெரிந்தவர்.
‘‘சாஃப்ட்வேர் கம்பெனில 12 வருஷம் வேலை பார்த்தேன். கல்யாணம், குழந்தைகள்னு செட்டிலானதும், வேலைக்குப் போக முடியலை. சும்மா வீட்ல உட்காரணுமானு நினைச்சப்ப, கத்துக்கிட்ட கைவினைக் கலைகள்தான் ஆறுதல் தந்தது. என்னோட சொந்த முயற்சில வால் கிளாக் டிசைன்ஸ் செய்ய ஆரம்பிச்சேன். கணக்கே இல்லாத அளவுக்கு எத்தனை மாடல் வேணா இதுல பண்ணலாம்’’ என்கிறவர், கற்றுக்கொண்டு, தொழில் தொடங்க விரும்புவோருக்கு வழிகளைக் காட்டுகிறார்.
என்னென்ன தேவை?முதலீடு?
‘‘எம்.டி.எஃப் போர்டு, ஃபேப்ரிக் கலர்ஸ், பிரஷ், கிளே, கிளாக்மெஷின்செட், அலங்காரப் பொருட்கள்... தேவையில்லாத பழைய சிடிலேர்ந்து, தெர்மகோல், பிளைவுட், தட்டுனு எதுல வேணாலும் கடிகாரம் பண்ண முடியும்ங்கிறதால, இன்ன பொருள்கள்தான் தேவைனு குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. குறைஞ்சபட்சம் 500 ரூபாய் முதலீடு போதும். அதுலயே 5 கடிகாரம் பண்ணிடலாம்.’’
எத்தனை டிசைன்? ஒரு நாளைக்கு எத்தனை?
‘‘கற்பனைக்கேத்தபடி எத்தனை டிசைன்கள் வேணாலும் பண்ணலாம். அடிப்படையைக் கத்துக்கிறதுதான் முக்கியம். குழந்தைங்களோட பிறந்த நாளைக்குப் பரிசளிக்க, கார்ட்டூன் வச்சுப் பண்ணலாம். ஸ்கூல் பிள்ளைங்களுக்குக் கொடுக்க, பென்சில், பேனா வடிவங்கள்ல பண்ணலாம். ஓட்டல் மாதிரி இடங்களுக்கு தட்டு, காய்கறி, பழங்கள் வடிவத்துல பண்ணலாம். ஒரு நாளைக்கு 5 முதல் 6 கடிகாரம் செய்ய முடியும். குருவி கத்தற மாதிரியான குக்கூ கடிகாரம் ரொம்பப் பிரபலம். அதுக்கான செலவும், கத்துக்கிற நாளும் அதிகம்.’’
விற்பனை வாய்ப்பு? லாபம்?
‘‘ எல்லா வீடுகள்லயும், வேலையிடங்கள்லயும் கடிகாரத்தோட தேவை தவிர்க்க முடியாததுங்கிறதால பரவலா விற்பனையாகும். சிம்பிளான மாடல் செய்ய 100 ரூபாய் செலவானா, அதை 200 ரூபாய்க்கு விற்கலாம்.’’
பயிற்சி?
‘‘ஒரே நாள் பயிற்சிக்கு தேவையான பொருள்களோட சேர்த்து 300 ரூபாய் கட்டணம்.’’