உங்கள் வருகைக்கு நன்றி

வெட்டி வேர் சாகுபடி

வியாழன், 12 ஏப்ரல், 2012

  காரைக்குடி அருகே மருத்துவ குணமுள்ள "வெட்டி வேர்' சாகுபடி செய்து, ஆண்டிற்கு 2 லட்ச ரூபாய் வரை விவசாயி ஒருவர் "சத்தமில்லாமல்' சம்பாதித்து வருகிறார்.வெட்டி வேர் இரண்டு அடிப்படை குணங்களை கொண்டது. ஒன்று மருத்துவ குணம். மற்றொன்று நறுமணம். மருத்துவ குணத்தில் நோய் எதிர்ப்பு சக்தியாகவும், வலி நிவாரணியாகவும் செயல்படுகிறது.வேர்கள் 3 அடி ஆழம் வரை வளரக்கூடியது. பக்கவாட்டில் அதிக வேர்கள் செல்லாது. கீழ் நோக்கி செல்லக்கூடியது. மண் அரிப்பை தடுப்பதில் இதன் பங்கு மிக முக்கியம். இலகுவான மண்ணில் நன்றாக விளையும். 
இந்த வெட்டி வேர் சாகுபடியில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள குருவாடிப்பட்டியை சேர்ந்த பாண்டியன், 45,சாதித்து வருகிறார்.அவர் கூறியதாவது: எனது தோட்டத்தில் தென்னைக்கு ஊடு பயிராக ஏழு ஏக்கரில் வெட்டிவேர் சாகுபடி செய்துள்ளேன். வெட்டி வேர் ஒரு டன் ரூ.70 ஆயிரம் வரை விலை போகிறது. அறுவடை செய்த புல் மண்புழு உரம் தயாரிக்க பயன்படுகிறது. உற்பத்தி செலவு போக, ஆண்டிற்கு 2 லட்ச ரூபாய் வரை இதன் மூலம் வருமானம் கிடைக்கிறது. நிலத்தில் படிந்துள்ள எளிதில் மக்கா தன்மையுள்ள பாலித்தீன், பிளாஸ்டிக் கழிவுப் பொருட்களை வெட்டி வேர் துளைத்து சின்னா பின்னாமாக்கி மழை நீரை உட்புக செல்வதில் வல்லமை படைத்துள்ளது. இது ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இப்படி பல வகைகளில் இந்த வெட்டி வேர் மனித குலத்திற்கு பயன்படுகிறது,என்றார். ஆர்வமுள்ள விவசாயிகள், இவரை 96779 85574 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets