உங்கள் வருகைக்கு நன்றி

மொத்த அறிவே மூன்றுதான்.

புதன், 18 ஏப்ரல், 2012

தன்னை அறிதலும், சுற்றத்தை அறிதலும், இயற்கையை அறிதலும்தான் கல்வி.
வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் என்றார் பாரதி. பலரும் இதைக் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், இப்போது நாம் வயிற்றுக்குச் சோறிடவில்லை, மூக்குக்கும், நாக்குக்கும்தான் சோறிடுகிறோம்.
   
எல்லா பேருந்து நிலையங்களிலும் மூன்று கடைகளைக் காண முடியும். ஒன்று, உணவு விடுதி. மற்றொன்று மருந்துக் கடை. அடுத்து வட்டிக் கடை. வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக உணவு விடுதிகளில் சமைக்கிறார்கள். ஆனால், உணவு விடுதியõல் உள்ளவர்களுக்கு அவரவர்களின் வீட்டிலிருந்துதான் உணவு வருகிறது. நம்மில் பெரும்பாலானோர் உணவுக்கு முன்னதாகவோ, பிறகோ கட்டாயம் மருந்து சாப்பிடுகிறோம். இவையாவும் சாதாரண பிரச்னைகள் அல்ல. உணவுப் பொருள்கள் கெட்டுப் போகாமல் இருக்க அவற்றில் ரசாயனப் பொருள்களைச் சேர்க்கின்றனர். ஆஸ்திரேலியா, கலிபோர்னியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள்களுக்கும் ரசாயனப் பூச்சு செய்யப்படுகிறது. இவற்றை உண்பதால் உடல்நலன் கெடுகிறது. ஒரு நாள் பொறுத்துக் கொள் என்றாலும் முடியாது, இரு வேளை உணவை ஒரு வேளையில் சேர்த்துக் கொள் என்றாலும் முடியாது என வயிற்றைப் பற்றி ஒüவை குறிப்பிட்டுள்ளார். ஒüவை பிறந்த நாட்டில் பெண்களும் ஒடுக்கப்பட்டிருக்கிறார்கள். பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைப் போலத்தான், இயற்கையும் பாதிக்கப்பட்டிருக்கிறது. பெண் விடுதலையும், இயற்கை விடுதலையும் இணைந்து செய்ய வேண்டியவை.
இவற்றுடன் முக்கியமான இரு பிரச்னைகள் நம்மை அண்டியிருக்கின்றன. ஒன்று புவி வெப்பமயமாகுதல், மற்றொன்று உணவுப் பற்றாக்குறை. இவை இரண்டுக்கும் ஒன்றுக்கொன்று தொடர்பு உள்ளது. கிராம நிலங்கள் உயிரற்றவையாகிவிட்டன. விவசாயம் வருவாயைவிட செலவு மிக்கதாக மாறியிருக்கிறது. இதனால், கடந்த 12 ஆண்டுகளில் 2 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். நாட்டில் ஐந்தில் ஒருவர் பசியோடு படுக்கைக்குச் செல்கிறார். ஆனால், அந்த ஒருவரைப் பற்றி மீதமுள்ள நால்வர் கவலைப் படவில்லை, சிந்திக்கவில்லை. பழக்க வழக்கங்களாக நாம் வைத்துக் கொண்டவையெல்லாம் இப்போது நம்மை இறுகப் பற்றிக் கொண்டு விடாமல் இருக்கிறது. காபி, டீ போன்றவையெல்லாம் இப்படித்தான். பசித்தபின் புசிக்க வேண்டும், தாகம் எடுக்கும்போது தண்ணீர் குடிக்க வேண்டும், சோர்வு ஏற்படும்போது உறங்கச் செல்ல வேண்டும் இதுதான் அடிப்படை. இவற்றை மாற்றினால் சிக்கல் ஏற்படும். எதைச் சாப்பிட வேண்டும், எப்படிச் சாப்பிட வேண்டும், எப்போது சாப்பிட வேண்டும் என்பதையெல்லாம் சொல்லித் தர வேண்டியிருக்கிறது. புத்தக அறிவை அடிப்படையாக வைத்துக் கொண்டு கற்பதுதான் கல்வி. அறிவு உள்ளேயிருந்து வெளியே வருவது, வெளியே இருந்து உள்ளே செல்வதல்ல என்பதை விவேகானந்தர் குறிப்பிட்டிருக்கிறார். தன்னை அறிதல், சுற்றத்தை அறிதல், இயற்கையை அறிதல் இந்த மூன்றும்தான் கல்வி. மொத்த அறிவே அவ்வளவுதான்'  

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets