மனிதனின் வயிறு,
புதன், 19 ஜூலை, 2017
மனித
இனம். பேணிப் பராமரிக்கக்கூடிய மனிதனின் வயிறு, இப்போது
குப்பைத்தொட்டியாக மாறி வருகிறது. இதிலிருந்து மீண்டும் அழகான
உடலையும், நல்ல
ஆரோக்கியத்தையும், சிறப்பான வாழ்க்கையையும் பெறவே, இந்த
சில அருமையான வழிகள்...
1 உடற்பயிற்சிக்
கூடம்
வீட்டுக்கு
அருகாமையில் உள்ள நல்ல உடற்பயிற்சிக் கூடத்தில் உடனடியாகச் சேருங்கள். குறைந்தது
தினமும் 45
நிமிடங்கள், வாரம்
4
நாட்கள்
பயிற்சி
மேற்கொள்வதால் அதிக கொழுப்பை நீக்கலாம். அதோடு, தேவைக்கு
அதிகமாக உடலில் தங்கி யுள்ள உணவுச் சேர்க்கையை எரித்து (Reduce
or Burn Extra Calories) பயன் பெறலாம். பட்டினியாக -
ஒருவேளை அல்லது இருவேளை சாப்பிடாமல் இருந்து எடை குறைக்க எண்ணுவது
மடமையே.
தசைகள் வலுவிழந்து உங்கள் உடலை மேலும் வாட்டி விடும் (An
empty stomach can lead to muscle loss).
2 ஆரோக்கிய உணவு
2 ஆரோக்கிய உணவு
நம்
முன்னோர் கூறியபடி Eat breakfast like a king, lunch like a
prince and dinner like a pauper என்பதைப்
பின்பற்றுங்கள். அனைத்து வகை தானியங்கள், கீரை
வகைகள்,
காய்கறிகள், பால், முட்டை, இறைச்சி, கோழி, மீன்
என அனைத்தும் கலந்த சரிவிகித உணவு (Balanced
Diet) எடுத்துக்கொள்வது அவசியம். அதிக
அளவு அரிசி, மைதா வேண்டாம். சர்க்கரை
அதிகம் உள்ள உணவு வகைகள், எண்ணெயில் வறுத்தெடுத்த
பண்டங்கள், ஐஸ்க்ரீம், குளிர்பானங்களை
குறைப்பது அல்லது சேர்க்காமலே இருப்பது நல்லது. 3 வேளை
மூக்குப்பிடிக்கச் சாப்பிடுபவராக இருப்பின், அதையே
5
வேளைகளுக்கு
சிறிது சிறிதாக சாப்பிடக் கற்றுக் கொள்வது ஆரோக்கியத்துக்கு
உத்தமம்.
3. நிறைய
தண்ணீர்
உங்களின்
எடையை சீராக வைத்துக்கொள்வதில் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் 3 முதல்
4
லிட்டர்
தண்ணீர் கட்டாயம் குடிக்க வேண்டும். இது உடலை சுத்தப்படுத்தும் பணியையும்
செய்கிறது.
4. எலும்புகளுக்குகால்சியம்
4. எலும்புகளுக்குகால்சியம்
அதிக
உழைப்பின் காரணமாக எலும்புகளின் சக்தி குறையத் தொடங்கும். அதனால் மருத்துவர்
ஆலோசனையுடன் நேரடியாகவோ, உணவிலோ
கால்சியம்
எடுத்துக்கொள்வது எலும்புகளின் உறுதிக்கு அவசியம். எலும்புகள் உறுதி இல்லை எனில்
தசைகள் வலிமை இழந்து, அவ்வப்போது பல பாகங்களில்
தசைப்பிடிப்பு உண்டாகும்.
5 ஆழ்ந்த உறக்கம்
5 ஆழ்ந்த உறக்கம்
தூக்கமின்மையே
இதயம்,
கிட்னி
சம்பந்தப்பட்ட நோய்கள், நீரிழிவு, பருமன், மன
அழுத்தம் போன்ற பலவிதமான அபாயகரமான பிரச்னைகளுக்கு மூலகாரணம்.
நிம்மதியான ஆழ்ந்த உறக்கம் சிறந்த தியானத்துக்குச் சமமாகும். நல்ல உறக்கத்தால்
உடல் உறுப்புகள் ஓய்வு பெறுகின்றன. ரத்த நாளங்கள்
அமைதி அடைகின்றன. நீண்ட ஆயுளுக்கும், உடல்
உறுதிக்கும் உத்தரவாதம் அளிக்கும் அருமையான டாக்டரே - ஆழ்ந்த நிம்மதியான
உறக்கம்!