கொண்டாட்டம் திண்டாட்டமாகி விடும்.
புதன், 31 அக்டோபர், 2018
பண்டிகைகள் தித்திக்க, திட்டமிடல். கீழ், நடுத்தர
மக்களுக்கு சிறுசேமிப்பு என்பது, மிகவும் அவசியம். கடன் வாங்காமல் இருப்பது தான், முதல்
சேமிப்பு. வரும் வருமானத்தில் குடும்பம் நடத்துவது எப்படி என்பதை தெரிந்து கொள்வது
தான் முக்கியம்.கூடிய வரை, கடன் வாங்காமல் எப்படி சமாளிக்க முடியும் என்பதை பார்க்க
வேண்டுமே தவிர, கடன் வாங்கி முழிக்கக் கூடாது.அது, தேவையற்ற மன
உளைச்சல்,
நெருக்கடி, கடனை
அடைப்பதற்காக, குறுக்கு வழியில் பணம் ஈட்டும் எண்ணங்களுக்கு வழி
வகுக்கும். எனவே, கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. இப்போது அரசு
அலுவலகங்கள், சிறு சிறு தனியார் நிறுவனங்களில், ஊழியர்கள்
ஒரு குழுவாக சேர்ந்து, 'பண்ட்' பிடிக்கின்றனர். அவர்களுக்குள்ளேயே கடன் கொடுத்து, அந்த
சேமிப்பை பெருக்குகின்றனர். இந்தத் திட்டத்தில் இணைந்து, பண்டிகை
போன்ற காலங்களில் வெளியே கடன் வாங்காமல் தவிர்க்க முடியும். பண்டிகைகள் என்பது, ஆண்டு தோறும் வரும் செலவினம். அதை, முன்கூட்டியே
தீர்மானித்து, வழி செய்து கொள்ள வேண்டும். அதேபோல், சில
நேரங்களில் உபரியாக கிடைக்கும் பணம், வருமானத்தை செலவழிக்காமல் சேமிக்க வேண்டும். உதாரணத்திற்கு, அதிலிருந்து, சில ஆயிரம் ரூபாய் கிடைப்பதாக வைத்துக்
கொள்வோம். அதை எடுத்து, 'ஜாலி'யாக செலவு செய்யக் கூடாது.அந்தப் பணத்தை, தனியாக எட்த்து வைப்பது தான் புத்திசாலித்தனம்.
அத்தியாவசிய செலவான கல்விக் கட்டணம், பண்டிகை
காலங்களுக்கு, அந்தப் பணத்தை செலவிடலாம். சிறு சேமிப்பு என்பது, அந்த
நேரத்தில் ரொம்ப சின்னதாக இருக்கும். ஆனால், முதிர்வடையும் போது, மலைப்பான
தொகையாக தெரியும். உறவும், நட்பும் எல்லா காலகட்டத்திலும் உதவி செய்வர் என்று
எதிர்பார்க்கக் கூடாது. எந்த வேலையிலும், உத்தரவாதமும் கிடையாது என்ற நிலையில், சுய
சம்பாத்தியத்தில் சேமிப்பது அத்தியாவசியம். பண்டிகையை ஆடம்பரமாக கொண்டாட
நினைத்தால்,
கொண்டாட்டம்
திண்டாட்டமாகி விடும். எது நமக்கு சந்தோஷம் தருகிறதோ, அதை செய்ய
வேண்டுமே தவிர, நம்மை சுற்றி இருப்பவர்களை ஈர்க்க வேண்டும் என்பது, கட்டாயம்
இல்லை. சிக்கனமாக செலவு செய்தால், அடுத்த ஆண்டு
கடன் வாங்காமல் கொண்டாடலாம்.