சிறுமியின் வித்யாசமான கொண்டாட்டம்
ஞாயிறு, 6 ஜனவரி, 2013
மழை மக்களுக்கு
குடிக்க சுத்தமான தண்ணீர் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள் 9 வயது சிறுமி. இந்த ஆசை அச்சிறுமியின் இறப்பு
மூலம் நிறைவேறியுள்ளது.
அமெரிக்காவின்
வாஷிங்டனில் ரேச்சல் என்ற 9 வயது சிறுமி
இருந்தாள்.
அவருடைய
பகுதியிலுள்ள கிறிஸ்தவ ஆலயத்தில், மத்திய ஆப்பிரிக்க நாட்டில் "பயாகா' என்ற இன மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க நிதி திரட்டினார்கள்.
தனது வீட்டுக்குச் சென்றவுடன் கம்ப்யூட்டரில்
இதற்கென்று ஒரு தனி இணையதளத்தை உருவாக்கினாள். அதில் "நான் நாளை
வித்தியாசமாகக் கொண்டாட விரும்புகிறேன். எனக்கு பரிசுப் பொருள் எதுவும் வேண்டாம்.
ஏழை மக்களுக்கு குடிநீர் கிடைக்க நன்கொடை அளியுங்கள்' என்று குறிப்பிட்டிருந்தாள். எப்படியாவது 300 அமெரிக்க டாலர்களை நன்கொடை திரட்டிக் கொடுத்துவிட வேண்டும் என்பது அவளின் ஆசை!
80 டாலர்கள் வரை நன்கொடை சேர்ந்திருந்தவேளையில், தனது அம்மா மற்றும் சகோதரியுடன் காரில் சென்றபோது, விபத்தில் இறந்து போனாள் ரேச்சல்.
இச் செய்தி
அங்குள்ள டி.வி.சேனல்கள், செய்தித்தாள்கள், இன்டர்நெட் என
அனைத்திலும் வெளிவந்தது. இதனால், ரேச்சல் தொடங்கிய வெப்சைட்டுக்கு நன்கொடைகள்
குவியத் தொடங்கியது. வெறும் 300 டாலர்கள் சேர்க்க
விரும்பிய ரேச்சலுக்கு, அவர் இறந்த பிறகு இணையதளம் மூலம் 2 லட்சம் டாலர்கள் கிடைத்தது. ரேச்சல் தொடங்கிய
இந்தப் பணியை, இப்போது அவரது தாயார் கவனித்து வருகிறார். இளம்
வயதிலேயே ரேச்சல், சமூக சேவை செய்ய நினைத்தது உலக மக்கள் அனைவரையும்
மனம் நெகிழ வைத்துள்ளது.
இதனால் தினமும்
நன்கொடை குவிந்து கொண்டிருக்கிறது! நன்கொடையாளர் ஒருவர், இந்த இணையதளத்தில் "ரேச்சல், இப்போது நீ
மட்டும் அல்ல, உலகமும் மகிழ்ச்சியாக இருக்கும்! நீ
எங்கேயிருந்தாலும் பூமிக்கு உதவி செய்து கொண்டே இரு' என்று
கூறியுள்ளார்.
குழந்தைகளே!
நீங்கள் எப்படி கொண்டாடப் போகிறீர்கள்?