இது மொழிப் பிரச்னை மட்டுமல்ல, ஆரோக்கியம் சம்பந்தமான பிரச்னையும் கூட!
புதன், 2 ஜனவரி, 2013
ஆங்கிலப்
பேராசிரியர் ஹென்றி கிஷோர்: மொபைல் போனில்,
மாணவர்கள் அதிகமாக, எஸ்.எம்.எஸ்.,
களை சுருக்கமாக டைப் செய்து
பழகுவதால், அவர்கள் மனதிலும்,
அந்தச் சொற்கள் சுருக்கமாகவே
பதிகிறது. இதனால், மொழிப் பாடங்களில் அதிக எழுத்துப் பிழைகள் ஏற்படுகின்றன. எழுத்துப்
பிழை மொழிப் பாடங்களில், மிகவும் கவனிக்கப்படும். இந்தப் பாடங்களில் மாணவர்கள்
சரியான விடைகளை எழுதியிருந்தாலும்,
எழுத்துப் பிழை மிகப் பெரிய
தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டு,
மதிப்பெண்கள் குறைக்கப்படும்.
காலப்போக்கில்
அவர்கள் வார்த்தைகளின் ஒரிஜினல் எழுத்துக்களை மறந்து போகவும் வாய்ப்புள்ளது.
மேலும், சுருக்கமாக அனுப்ப வேண்டும் என்பதற்காக, இலக்கணத்தையும் மாணவர்கள் பின்பற்றுவதில்லை. இதனால், தேர்வுகளில் இலக்கணப் பிழைகளும் ஏற்படுகின்றன. தற்போது, வேலை வாய்ப்பு அளிக்கும் நிறுவனங்கள், மாணவர்களை அச்சடிக்கப்பட்ட பயோ - டேட்டா எழுதச் சொல்கின்றன, சில மாணவர்கள் இதிலும் தவறு செய்து, வேலைவாய்ப்பை இழக்கின்றனர். ஆரம்பப்பள்ளி
மாணவர்களைப் போல், கல்லூரி மாணவர்களின் தேர்வுத் தாள்களை திருத்த வேண்டி
உள்ளது. இதனால், தேர்வுத் தாள்களை திருத்தம் செய்ய அதிக நேரம் செலவிட வேண்டி
உள்ளது.
ஆங்கில மொழி
மட்டுமல்லாது, தமிழ் மொழியும் இந்தப் பிரச்னையால், பாதிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் டைப் செய்வதைப் போல்
தமிழை, ஆங்கிலத்தில் டைப் செய்பவர்களும் உண்டு. இந்தப் பழக்கத்தால்
தமிழையும் சரளமாக அவர்களால் எழுத முடிவதில்லை.இது ஒரு புறமிருந்தாலும், மொபைல் போனில் அதிக நேரம் டைப் செய்வதாலும், மணிக்கட்டுகளில் உள்ள நரம்புகள் விரைவில் வலுவிழந்து
விடும். இது மொழிப் பிரச்னை மட்டுமல்ல,
ஆரோக்கியம் சம்பந்தமான
பிரச்னையும் கூட!