கண்ணைக் கசக்காதீர்கள்!
சனி, 5 ஜனவரி, 2013
ஆஸ்திரேலியாவில்
உள்ளது சதர்ன் குவின்ஸ்லேண்ட் பல்கலைக்கழகம்.
அங்குள்ள
ஆராய்ச்சியாளர்கள் பெரிய வெங்காயத்தில் இருந்து எடுத்த சத்துக்களை எலிகளுக்குச்
செலுத்தி மும்முரமாக ஆய்வு செய்தார்கள். ஆய்வில் சில முடிவுகள் தெரிய வந்தன. அதே
சத்துக்களை மனிதர்களுக்கும் செலுத்தி ஆய்வு செய்தார்கள். அதிலும் சில முடிவுகள்
தெரிய வந்தன.
கொழுகொழு
எலிகளையும், குண்டான மனிதர்களையும் ஒல்லியாக்கவல்ல சத்துகள்
வெங்காயத்தில் இருக்கின்றன என்பதுதான் அதில் முக்கியமான முடிவு.
வெங்காயம்
உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளைக் குறைத்துவிடுகிறதாம்.
சர்க்கரை
நோயால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதிலும் வெங்காயத்துக்கு மிகப் பெரிய
பங்குண்டு. ரத்த அழுத்தம் சீராகிவிடுகிறதாம். கல்லீரல் பாதிப்பைக்
கட்டுப்படுத்துகிறதாம்.
சரி...
கண்ணைக் கசக்காதீர்கள்! நிறுத்திவிடுகிறோம்.
வெங்காயத்தைப்
பச்சையாகவோ, சமைத்தோ எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம்.