உங்கள் வருகைக்கு நன்றி

நிராகரித்து விடுங்கள், தேவையற்ற சிக்கல்கள் தவிர்க்கப்பட்டு விடும்.

புதன், 2 ஜனவரி, 2013


சுகந்தியின் மொபைல் போனுக்கு அந்த மிஸ்டுகால் வந்திருந்தது. நீண்ட நேரம் யோசித்து பார்த்தால். ம்ஹும்....யாருடைய நம்பர் என்று தெரியவில்லை. "கூப்பிட்டு பார்ப்போமே" என்று அந்த எண்ணை அழைத்தாள்...

"உங்க நம்பர்ல இருந்து ஒரு மிஸ்டுகால்  வந்திருந்தது" என்றாள்.

"ஹாய் நீங்க கல்பனா'தானே...?" மறுமுனையில் வசீகரிக்கும் ஆண்குரல், அந்தகுரலின் வசீகரத்தை ஒரு வினாடி ரசித்த சுகந்தி, "இல்லைங்க.............ராங் நம்பர்"என்று சொல்லிவிட்டு போனை வைத்தாள் சுகந்தி, அந்த சம்பவத்தை அதோடு மறந்தும் விட்டாள்.

நான்கு நாட்களுக்குப் பின் மீண்டும் ஒரு அழைப்பு, "கல்பனா இருக்காங்களா?" - அதே குரல்..! 
"இல்லீங்க, மறுபடியும் தப்பான நம்பருக்கு கூப்பிட்டு இருக்கீங்க, உங்களுக்கு என்ன நம்பர் வேணும்..?? [[இந்த கேள்வியே தப்பு, பேசாம போனை கட் பண்ண வேண்டியதுதானே]] சுகந்தி கேட்டாள். அவன் சொன்னான், "ஐயோ....இது என் நம்பராச்சே..!! என்றாள் சுகந்தி.

"தப்பா நினைச்சிக்காதீங்க, நான் அண்ணா யூனிவர்சிட்டியில பி ஹெச் டி பண்ணிட்டு இருக்கேன், சில தகவல்களை தேடி அலையுறேன், கல்பனாகிட்டே அந்த தகவல்கள் கிடைக்கும்னு சொன்னாங்க, யூனிவர்சிட்டியில அவங்க நம்பர்னு இதைதான் குடுத்தாங்க" - அவன் குரலில் கொஞ்சம் கவலை தெரிந்தது [[அடேங்கப்பா நடிப்பை பாரு ராஸ்கல்]] 

அண்ணா யூனிவர்சிட்டி, ஆராய்ச்சி மாணவன் என்றதும் சுகந்தியின் மனதில் கொஞ்சம் வியப்பு, இவளும் எம்.பில் முடித்து விட்டு டாக்டரேட் ஆராய்ச்சி கனவில் இருப்பவல்தான். "என்ன ஆராய்ச்சி பண்றீங்க சார்..? [[தேவையா இது...??]] 

"என்னை நீங்க விஜய்'ன்னே கூப்பிடலாம் [[டாகுட்டருக்கு வச்சிட்டான்ய்யா ஆப்பு]] சார்னு கூப்புடுற அளவுக்கு இன்னும் வயசாகலை" என சிரித்து கொண்டே சொன்னான்......"நான் நானோ டெக்னாலஜில ரிசர்ச் பண்றேங்க!" 

"ஒ....ரியலி! நான் கூட அதே ஏரியாவுலதான் ரிசர்ச் பண்ணலாம்னு இருக்கேன்" என்றாள் சுகந்தி, "வாவ்....நீங்க கூட ஸ்டுடண்டா ! இஃப் யூ டோன்ட் மைண்ட்...எனக்கு கொஞ்சம் தகவல் தர முடியுமா ?" 
"தகவலனு சொன்னா..?" 

"உங்க ஆராய்ச்சிக்கு நீங்க பத்திரமா மூட்டை கட்டி வச்சிருக்கிற விஷயம் எதுவும் தரவேண்டாங்க ! ஏதோ போனா போகுதுன்னு ரெண்டு, மூணு தகவல்கள் குடுத்தீங்கன்னா கூட போதும்" - அவன் சிரிக்க சுகந்தியும் சிரித்தாள் [[வெளங்கிரும்]] 

"நீங்க எங்கே தங்கி இருக்கீங்க...??" சுகந்தி கேட்டதும், அவன் அண்ணா நகரில் ஒரு முகவரியை சொன்னான், சுகந்தி ஆச்சர்யமானாள், அவள் அதற்கு பக்கத்து தெருவில்தான் வசிக்கிறாள் [[அவ்வ்வ்வ்வ்வ்]]

சில நாட்களுக்கு பின் எக்ஸ்பிரஸ் அவென்யூவில் சந்தித்து கொண்டார்கள், அந்த பழக்கம் முதலில் ஆரோக்யமான கல்வியில் ஆரம்பித்து, பிறகு கொஞ்ச கொஞ்சமாக ஜாலி, அன்பு, காதல் என தடம் மாறியது [[நாசமா போச்சி போ]]

"என்ன மேடம் ஒரு நாள் கூட வீட்டுக்கு கூப்பிட்டு அப்பா, அம்மாவை அறிமுகபடுத்த மாட்டேங்குறீங்க.....ஒரு கப் காப்பி தர மாட்டேங்குறீங்க ? [[ஆஹா இப்பவாது சுகந்தி நீ உஷார் ஆகலியே அவ்வ்வ்வ்வ்]]] என்று விஜய் [[டாகுடர் விஜய் அல்ல ஹி ஹி]] சீண்ட, அன்றே அவனை வீட்டிற்கு அழைத்து வந்தாள். வீட்டில் அவர்களை தவிர யாரும் இல்லை, மனதுக்கு பிடித்தவருடனான மாலை [[கயிறு]] பொழுது அவர்கள் மேல் ஒரு மெல்லிய போர்வையாய் படர்ந்தது, நெருக்கமும், இணக்கமும் எல்லை தாண்ட வைத்தது [[அடப்பாவிகளா...!!]] 

முதலில் குற்ற உணர்வாய் தோன்றிய விஷயம், பிறகு அடிக்கடி நடந்தது. ஆனாலும் ஒரு முறை கூட அவன் வீட்டை பார்க்க வேண்டும் என அவளுக்கு தோன்றவே இல்லை [[ம்ஹும் அம்புட்டு மயக்கம்]] 

திடீர் என ஒரு நாள் விஜய் காணாமல் போய் விட்டான், அவன் செல்போன் ஸ்விச் ஆஃப் செய்யபட்டிருந்தது, சுகந்திக்கு பதற்றம் அதிகரித்தது, அவன் சொன்ன அப்பார்ட்மென்ட்ல் விசாரித்தால், அப்படி யாரும் அங்கு இருந்திருக்கவில்லை, யூனிவர்சிட்டியிலையும் அப்படி யாரும் ஆராய்ச்சி மாணவன் இல்லை...

உட்கார்ந்து யோசித்தவளுக்கு [[ரூம் போட்டு யோசித்ததின் விளைவு இது ]] விஷயம் புரிய ஆரம்பித்தது, அவன் ராங் நம்பரில் ஆரம்பித்த ராங் நபர் !! [[ஹய்யோ ஹய்யோ]] எல்லாவற்றையும் தெளிவாகத் திட்டமிட்டிருக்கிறான், இவளுடைய குடும்பம், படிப்பு ரசனை எல்லாம் தெரிந்து கொண்டே வலையில் வீழ்த்தியிருக்கிறான்...

இது ஏதோ ஒரு சுகந்தியின் கதையல்ல...தமிழகத்தில் பல இடங்களிலும் பலவகைகளிலும் நடக்கும் அன்றாட நிகழ்ச்சியே...சைபர் க்ரைமுக்கு வரும் பல்வேறு புகார்கள் பயமுறுத்துகின்றன,மிஸ்டுகால், ராங் நம்பர் போன்றவை கூட தூண்டில் ஆகும் என்பதை பலரும் யோசித்து கூட பார்ப்பதில்லை

"யாரோ அழைத்திருக்கிரார்களே....முக்கியமான சமாச்சாரமோ [[ஹி ஹி]] என திரும்ப அழைத்தாள் போச்சு !!! தெரியாத எண்ணிலிருந்து பெண்களுக்கு மிஸ்டுகால் வந்தால், திரும்ப அழைக்காமல் இருந்தாள் உசிதம். பேசியே ஆகவேண்டும் என தோன்றினால் வீட்டு ஆண்களிடம் கொடுத்து பேச சொல்லுங்கள், "என் நம்பரில் இருந்து மிஸ்டு கால் வந்ததிருந்ததா....இருக்காதே" என பார்ட்டி எஸ்கேப் ஆகிவிடுவார்...

ஆர்குட், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் சகட்டுமேனிக்கு புகைப்படங்களை வைப்பதும், தகவல்கள், போன் நம்பர்கள் போன்றவற்றைத் தருவதும் ரொம்பத் தப்பு, அந்த படங்களை பார்த்து, எண்ணைப்பார்த்து மிஸ்டு கால் பிரச்சினை வரும் ஆபத்து உண்டு, மின் அஞ்சலிலோ, எஸ் எம் எஸ் மூலமாகவோ, இணையதளங்கள் மூலமாகவோ கிடைக்கும் தேவையற்ற எண்களுக்கு போன் செய்யவே செய்யாதீர்கள், இது சிக்கலை காசு கொடுத்து வாங்குவதற்கு சமம்...

மிஸ்டு கால், ராங் கால் போல இன்னொரு விஷயம் ராங் எஸ் எம் எஸ், முதலில் "குட்நைட்" என்று ஒரு எஸ் எம் எஸ் வரும்" யாரது??? என்று நீங்கள் திருப்பி எஸ் எம் எஸ் அனுப்பினால் நீங்கள் அவனுடைய லிஸ்டில் சேர்ந்து விடுவீர்கள், பின் சிக்கல் எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் வரலாம்...!!

ஒரு வரியில் சொல்லவேண்டுமென்றால் [[சொல்லுங்கண்ணே]] தெரியாத,எண்களில் இருந்து வரும் மிஸ்டு கால், எஸ் எம் எஸ் போன்றவற்றை நிராகரித்து விடுங்கள், தேவையற்ற சிக்கல்கள் தவிர்க்கப்பட்டு விடும்....!!!  நன்றி : குங்குமம்.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets