பழைய சோறா? அப்படீன்னா என்ன?
வெள்ளி, 8 பிப்ரவரி, 2013
பழைய சோறா? அப்படீன்னா என்ன? என்று கேட்கும்
காலம் வந்துவிட்டது.
முதலில் எல்லாம் பானையில் சோறாக்கி, வடிப்பார்கள். சாப்பிட்டு மிஞ்சிய
சோற்றில் தண்ணீரை ஊற்றி, மறுநாள் பழைய சோறாகச் சாப்பிடுவார்கள்.
இப்போது எல்லாம் குக்கர்மயமாகிவிட்டதால், கையில் சுட்டுக் கொள்ளாமல் கஞ்சி
வடிக்கவே எத்தனை பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை.
காலையில் ரெண்டு பிரட் துண்டுகளை அவசர அவசரமாக விழுங்கிவிட்டு பறப்பவர்களுக்கு, பழைய சோறு -
சின்ன வெங்காயத்தின் மகிமை எப்படித் தெரியும்?
* பழைய
சாதத்தில் பி 6,
பி 12 நிறைய
இருக்கிறது.
* சிறுகுடலுக்கு
நன்மை செய்யும் ஏகப்பட்ட நல்ல பாக்டீரியாக்கள் உள்ளன.
* காலையில்
பழைய சோற்றைச் சாப்பிடுவதால் உடல் சுறுசுறுப்பாக இருக்கும். உடல் சூடு தணியும்.
குடல் புண், வயிற்றுவலி
குணமாகும்.
* நார்ச்சத்து
இருப்பதால், மலச்சிக்கல்
வராது.
* இரத்த
அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.
* பழைய
சாதத்துடன் இரண்டு சின்ன வெங்காயத்தைக் கடித்துச் சாப்பிட்டால், நோய்
எதிர்ப்புச் சக்தி அதிகமாகும்.
* அலர்ஜி,அரிப்பு போன்றவை
குணமாகும்.