உங்கள் வருகைக்கு நன்றி

வாரத்தில் ஆறு நாள்களும் வேலை செய்துவிட்டு,

வியாழன், 14 பிப்ரவரி, 2013


வேலைவேலையென பொருள் தேடியே பொழுதுகள் கழியும் ஒவ்வொரு வாரமும்ஞாயிற்றுக்கிழமை எப்போது வரும் என்பதுதான் எல்லோரது எண்ணமும்..!
அன்று முழுவதும் ஓய்வாகப் பொழுதைப் போக்கலாம்நண்பர்களுடன் அரட்டை அடிக்கலாம்..! உறவினர்களைச்   சந்திக்கலாம்..!
ஆனால்வாரத்தில் ஆறு நாள்களும் வேலை செய்துவிட்டுஞாயிற்றுக்கிழமையும் வேலை செய்யும் தொழில் முனைவோர்களான பெண்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா..?
 விருதுநகர் மாவட்டம்ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டத்தில் உள்ளது எம். சண்முகசுந்தரபுரம் என்ற சின்னஞ்சிறிய கிராமம்.
இங்குள்ள அன்னை சத்யா மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த அனைத்துப் பெண் உறுப்பினர்களுமே பட்டாசு ஆலைத் தொழிலாளிகள்தான்.
இவர்கள்வாரத்தில் ஆறு நாள்களும் பட்டாசு ஆலைகளில் வேலை செய்துவிட்டுஞாயிற்றுக்கிழமைகளிலும் ஓய்வுக்கு ஓய்வு கொடுத்துவிட்டுமசாலாப் பொடி தயாரித்தல்அப்பளம் தயாரித்தல் என சுயதொழில்களில் ஈடுபட்டுமாவட்ட அளவிலான சிறந்த மகளிர் குழு விருதினை மத்திய அமைச்சரிடம் பெற்றுள்ளது வியப்புக்குரிய செய்திதானே..!
அந்தக் குழுவினரைச் சந்திக்க அவர்களது ஊருக்குச் சென்றபோதுகிராமிய மணத்தோடு வரவேற்றனர்..!
அந்த மகளிர் குழுவின் ஊக்குநர் ஜி. காளியம்மாள்பிரதிநிதிகள் பி.வீரம்மாள்ஜி.முருகாயி ஆகியோரிடம் அவர்களது தொழில்செயல்பாடு குறித்து கேள்விகளை எழுப்பியபோது ஆர்வத்துடன் பதில் அளித்தனர்.
 எப்போது சுய உதவிக் குழுவினைத் தொடங்கினீர்கள்..?
கடந்த 2002-ம் ஆண்டிலேயே, 15 உறுப்பினர்களோடு எங்கள் மகளிர் குழு தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் சந்தா பணம் வசூலிப்பது என மற்ற மகளிர் குழுக்களைப் போலத்தான் இயங்கிவந்தோம்.
 தொழில் செய்யும் ஆர்வம் எப்போது ஏற்பட்டது?
குழுவாகச் சேர்ந்து ஏதாவது தொழில் செய்ய வேண்டும் என நினைத்தோம். ஆனால்அனைவரும் பட்டாசு ஆலையில் வேலை பார்ப்பதால்அதற்குப் பாதிப்பு ஏற்படக் கூடாது என்ற எண்ணமும் இருந்தது.
கிராமப் பகுதியாக இருப்பதால் கறவை மாடுகளை வாங்கலாம் என முடிவு செய்தோம்.
2005-ல் ஒரு நபருக்கு ரூ. 12 ஆயிரம் வீதம்வங்கியில் கடன்பெற்று 15 பேரும் ஆளுக்கு ஒரு கறவை மாட்டை வாங்கினோம்.
 தினசரி பட்டாசு ஆலையில் வேலை பார்த்துக் கொண்டேமாடுகளையும் பராமரித்து வந்தோம். சிரமமாக இருந்தாலும்ஒவ்வொருவருக்கும்மாதந்தோறும் தலா ரூ. 1500 வரை கிடைத்தது. ஆனால்வறட்சிக் காலத்தில் மாடுகளுக்கு போதிய புல் தீவனம் கிடைப்பதில் பிரச்னை வந்தது. இதனால்
 2007-ல் மாடுகளை விற்று விட்டோம்.
 மசாலாப் பொடி வியாபாரத்தில் நுழைந்தது எப்படி?
மாடுகளை விற்றவுடன்பணி ஓய்வுநாளில் ஏதாவது தொழில் செய்ய வேண்டும் என எண்ணினோம். அப்போதுமசாலாப் பொடி தயாரித்து விற்றால் என்ன எனத் தோன்றியது. அன்றாட சமையலுக்கு மசாலாப் பொடி இன்றியமையாதது என்பதால், 2007-லேயே மசாலாப் பொடி மற்றும் அப்பளம் தயாரித்து விற்பனை செய்யத் தொடங்கினோம்.
 இவற்றைத் தயாரிக்க போதிய நேரம் கிடைக்கிறதா?
 வாரத்தில் ஆறு நாள்கள் பட்டாசு ஆலைக்கு வேலைக்குச் சென்று விடுவோம்.
ஒரு ஞாயிற்றுக்கிழமைஸ்ரீவில்லிபுத்தூர் சென்று மசாலாப் பொடியை மில்லில் அரைத்து வருவோம். அடுத்த ஞாயிற்றுக்கிழமை அவற்றைப் பாக்கெட்டுகளாகப் போடுவோம். பின்னர் கிராமத்தில் தேவையானவர்களுக்கும்பட்டாசு ஆலையில் பணிபுரியும் சக தொழிலாளர்களுக்கும்ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கடைக்கும் மசாலாப் பொடியை விற்று வருகிறோம்.
அதேபோலஒரு வாரம் அப்பளம் தயாரித்துமசாலாப் பொடியுடன் சேர்த்து விற்பனை செய்கிறோம். எங்களது தயாரிப்புகள் தரமாக இருப்பதால்அனைவரும் தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு தருகின்றனர்.
 

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets