உங்களது மதிப்பு மற்றும் தனித்திறனை ஒருபோதும் இழக்கக்கூடாது.
செவ்வாய், 5 பிப்ரவரி, 2013
கல்வி என்பது மாணவர்களுக்கு மட்டுமல்ல, வயது, கல்வி, பதவி வித்தியாசம்
இல்லாமல் வாழ்நாள் முழுக்க அனைவருமே மேற்கொள்ள வேண்டிய தொடர் முயற்சி. காலங்காலமாக
மாணவர்களின் அறிவாற்றலை மேம்படுத்தத் தூண்டுகோலாகத் திகழ்ந்து வரும் அனைத்து
ஆசிரியர்களும் என்றும் பாராட்டுதலுக்கும் உரியவர்கள்.
பண்டைய இந்தியாவில்
மன்னர்களும், சக்ரவர்த்திகளும்
தங்களுக்குக் கல்வியும், ஞானமும் போதித்த குருவிற்கு மரியாதை கொடுப்பதைக் கெüரவமாகவும், பெருமையாகவும் கருதினர்.
ஆனால் தற்போது கல்வி போதிக்கும் ஆசிரியர்களுக்கு அவ்வித மரியாதை வழங்கப்படுவதில்லை
என்பது துரதிருஷ்டமானதுதான்.
கல்வி மூலம் மாணவர்களின்
அறிவாற்றல் மட்டுமன்றி, தைரியம், நேர்மை, மதிப்பு, கெüரவம், நற்குணங்கள்
ஆகியவையும் மேம்படுத்தப்பட வேண்டும்.
வாழ்க்கையில் பல்வேறு
சந்தர்ப்பங்களில் பல்வேறு சோதனைகள், ஏமாற்றங்கள், பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும். நாம் எதற்கும்
லாயக்கில்லையோ என்றுகூட எண்ணத் தோன்றும்.
முகம் காட்டும் கண்ணாடி
சுக்குநூறாக உடைந்து சிதறினாலும், பிரதிபலிக்கும் இயல்பை அது இழந்து விடுவதில்லை. அதுபோன்று
எந்த நிலையிலும் உங்களது மதிப்பு மற்றும் தனித்திறனை ஒருபோதும் இழக்கக்கூடாது.
விளையாட்டை திறன்
சோதிக்கும் போட்டியாகக் கருதாமல் தலைமைப்பண்பு, குழு ஒற்றுமை, ஒழுக்கம், தொடர் முயற்சி ஆகியவற்றை மேம்படுத்தும் சிறந்த
பயிற்சியாகக் கருத வேண்டும்.