உங்கள் வருகைக்கு நன்றி

நீங்கள் சமையலில் ஆர்வம் உள்ளவராக இருந்தால்

வியாழன், 12 ஜூலை, 2012

பள்ளிக்கூடம் முடிந்து வீட்டுக்குத் திரும்புகிற பிள்ளைகளுக்கு தினம் என்ன செய்து தருவது? பெரும்பாலான அம்மாக்களின் மண்டையைக் குடையும் பிரச்னை இது. என்ன தான் சத்தாக, பார்த்துப் பார்த்து செய்து கொடுத்தாலும், கடைகளில் கிடைப்பதைப் போல இல்லை என சாப்பிட மறுப்பார்கள் பிள்ளைகள். ஆரோக்கியத்துக்கு உத்தரவாதமில்லை எனத் தெரிந்தாலும், வெளி உணவுகளையே விரும்புவார்கள்.

சென்னை, சைதாப்பேட்டையைச் சேர்ந்த பிரபாஸ்ரீயிடம் இருக்கிறது இதற்கான தீர்வு.

''இயல்புலேயே சமையல்ல ஆர்வம் அதிகம். சவுத் இந்தியன், நார்த் இந்தியன்னு எல்லா வகை உணவுகளும் அத்துப்படி. எங்க வீட்டுக்குப் பக்கத்துல ஒரு பெரிய ஸ்கூல் இருக்கு. சாயந்திரம் ஸ்கூல் விட்டதும், ரோட்டோரமா இருக்கிற பானிபூரி கடைகள்ல வாங்கிச் சாப்பிடுவாங்க பிள்ளைங்க. சுத்தமில்லாத அந்தச் சூழல்தான் என்னை யோசிக்க வச்சது. என் பையன் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிச்சவன்.


அவன் உதவியோட எங்க வீட்டு வாசல்லயே ஒரு டேபிளை போட்டு சாட் அயிட்டங்கள் செய்து விற்க ஆரம்பிச்சேன். பானி பூரி, பாவ் பாஜி, கட்லெட், ஸ்பிரிங் ரோல், பிரெட் சாண்ட்விச்னு எல்லாமே பிள்ளைங்களுக்குப் பிடிச்ச அயிட்டங்கள். என் வீட்டு ஆளுங்களுக்கு எப்படி சுத்தமா, ஆரோக்கியமா செய்து தருவேனோ, அதே மாதிரிதான் கஸ்டமர்களுக்கும். அதனாலதான் வேற வேற ஏரியாக்கள்லேருந்து தேடி வந்து என்கிட்ட வாங்கிட்டுப் போறாங்க...’’ என்கிற பிரபாஸ்ரீ, இந்தத் தொழிலில் ஆர்வமுள்ளோருக்கு வழிகளைக் காட்டுகிறார்.


என்னென்ன தேவை? முதலீடு?

‘‘சின்ன அடுப்பு, ஒரு டேபிள், கொஞ்சம் பாத்திரங்கள், மளிகை சாமான்கள், வாசல்ல கடை போடறதா இருந்தா, ஒரு பெரிய குடை... மொத்தமா 500 ரூபாய் முதலீட்டுல ஆரம்பிக்கலாம்.’’


என்ன ஸ்பெஷல்? எதில் கவனம் அவசியம்?

‘‘சாண்ட்விச்ல 3 வகை, கட்லெட்ல 3 வகைன்னு நான் வெரைட்டியா பண்றேன். நிறைய விதமான சுவைகள்ல பண்ணினா, எல்லாரையும் திருப்திப்படுத்தலாம். பானி பூரிக்கு, மினரல் வாட்டர் மட்டும்தான் உபயோகிக்கணும். ஆர்டருக்கேத்தபடி அப்பப்ப ரெடி பண்ணிக் கொடுக்கணும். மொத்தமா செய்து, ஃப்ரிட்ஜ்ல வைக்கிறதெல்லாம் கூடாது.’’


விற்பனை வாய்ப்பு? லாபம்?

‘‘வீட்டுக்குப் பக்கத்துல பள்ளிக்கூடம் இருந்தா, கவலையே வேண்டாம். இல்லாட்டாலும் சின்னச் சின்ன ஆபீஸ், வீடுகள்ல ஆர்டர் எடுக்கலாம். பிறந்த நாள் பார்ட்டிக்கு பிரமாதமா போகும். ஒரு நாளைக்கு தாராளமா 500 ரூபாய் லாபம் பார்க்கலாம்.’’


பயிற்சி?

‘‘ஒரே நாள் பயிற்சில 5 வகை சாட் அயிட்டங்கள் கத்துக்க, 300 ரூபாய் கட்டணம்.’’

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets