உங்கள் வருகைக்கு நன்றி

சிறுதானியங்கள் தயாரிக்கலாம்.

புதன், 4 ஜூலை, 2012


அரிசியைவிட சிறுதானியங்களில் 10 முதல் 12 கிராம் வரையில் புரதச் சத்தும் அதிகளவில் நார்ச்சத்தும், வைட்டமின் மற்றும் தாது உப்புக்கள் அதிகளவில் உள்ளன. சிறிதுகாலமாக சிறுதானியங்கள் பயிர் செய்யப்படும் நிலப்பரப்பு குறைந்ததோடு அல்லாமல் அதை உபயோகிப்பவர்களும் குறைந்துவிட்டதால் சத்துக்கள் குறிப்பாக நார்ச்சத்து பற்றாக்குறையால் சர்க்கரை நோய் மற்றும் உடல் பருமன் போன்ற நோய்களால் பெரும் பாலானோர் அவதிப் படுகிறார்கள். இவ்வகை நோய்களால் அவதிப் படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு இருப்பதாகக் கணக்கிடப் பட்டுள்ளது.

தற்சமயம் மக்கள் சிறுதானியங்களை உணவில் சேர்த்துக்கொள்ள ஆரம்பித்து உள்ளார்கள். சரிவிகித உணவு பரிந்துரைக்கப்படும் இந்நாளில் சிறுதானியங்களை நமது அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
சிறு தானியங்களான வரகு, சோளம், கம்பு, கேழ்வரகு, தினை, சாமை, குதிரைவாலி, மக்காச்சோளம், சோயா போன்றவற்றைக் கொண்டு உடனடி உணவு வகைகளை தயார் செய்கிறேன்.
சிறுதானியங்களில் அதிக அளவு நார்ச்சத்தும் நம் உடலுக்கு தேவையான புரதம், வைட்டமின், தாது உப்புக்கள் உள்ளதால் இயற்கையாகவே உடல் எடையையும் கொழுப்பையும் குறைக்கும். எனவே நம் அன்றாட உணவில் சிறுதானிய உணவு வகைகளை எடுத்துக் கொண்டால் இதயநோய், நீரிழிவு, கொழுப்புச் சத்து, புற்றுநோய் போன்ற நோய்களை கட்டுப்படுத்தலாம்.
எங்களது உணவு வகைகளாவன: சிறுதானிய புட்டுமாவு, அடை மாவு, முளை கட்டிய சத்துமாவு, களி மாவு, முறுக்கு மாவு, கொழுக்கட்டை மாவு, கீரைகளிலான சாதப்பொடி, ரொட்டி மாவு, கீரை மற்றும் சிறுதானியங்களினால் ஆன பிஸ்கட் வகைகளை கொடுத்து வருகிறேன். 
தொடர்புக்கு:
பாலசித்ரா, பொன்மேனி
மதுரை-16.
95664 77674.
-கே.சத்யபிரபா, உடுமலை.
 

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets