காது கொடுத்து கேளுங்கள்.. காது பிரச்சினையை
வியாழன், 26 ஜூலை, 2012
பெரியவர்களுக்கு
காது சம்பந்தமாக ஏதேனும் பிரச்சினை என்றால் எளிதாக தெரிந்து கொள்ளலாம். ஆனால், குழந்தைகளுக்கு காது தொடர்பான பிரச்சினைகளைத் தெரிந்து
கொள்வது சற்று கடினமான வேலை தான்.
சில
குறிப்புகளை வைத்து குழந்தைகளுக்கு காதில் பிரச்சினை உள்ளதை தெரிந்து கொள்ளலாம்.
காது
கேட்பது மட்டுமே பிரச்சினை அல்ல. காதில் வலி, சீழ்
வடிவது, கிருமி தொற்று போன்ற பல பிரச்சினைகள்
ஏற்படலாம்.
இதனை
கண்டய சில குறிப்புகள் :
தேவையில்லாமல்
குழந்தை அழுது கொண்டிருந்தால் அதற்கு ஏதேனும் ஒரு பிரச்சினை இருக்கக் கூடும் என்று
தெரிந்து கொள்வீர்கள். ஆனால் காதில் பிரச்சினை இருக்கிறது என்பதை, காதுக்கு அருகே உங்களது கைகளை வைத்து லேசாக வருடி விடுங்கள்.
அப்போது அழுகை குறைந்தால் பிரச்சினை காதில் என்பதை கண்டறிந்து விடலாம்.
காது
என்பது மூக்கு, வாயுடன் தொடர்புடையது என்பதால், இவற்றில் ஏற்படும் பிரச்சினைகள் கூட காதினை பாதிக்கலாம்.
எனவே, மூக்கு மற்றும் வாயில் ஏதேனும் பிரச்சினை
இருக்கிறதா என்பதையும் பாருங்கள்.
குழந்தை
பிறக்கும் போது காதுகளின் உள் இருக்கும் மெல்லிய எலும்புகள் மூடியிருக்காது.
குழந்தை பிறந்த பிறகு காதுகளை உலர்வாக வைத்திருந்தால்தான் அவை மூடுகின்றன.
அதில்லாமல் எப்போதும் சளிப்பிடித்து காதுகள் ஈரமாக இருக்கும்பட்சத்தில் அவை
மூடுவதற்கு காலதாமதம் ஏற்படும். இந்த சமயத்தில் தான் குழந்தைகளுக்கு தொற்று
பிரச்சினை ஏற்படுகிறது. காதுக்குள் தொற்று பரவும் போது காதில் சீழ் வடிகிறது.
இந்த
பிரச்சினை உள்ள குழந்தையை குளிக்க வைக்கும் முன் பஞ்சினை தேங்காய் எண்ணெயில்
நனைத்து காதுகளில் வைத்துவிட்டால் குளிக்கும் போது தண்ணீர் காதுக்குள் செல்வதை
தவிர்க்கலாம்.
அதிக
சப்தம் கேட்கும் இடங்களில் குழந்தைகளை வைத்துக் கொள்வதை தவிர்க்கலாம்.
வகுப்பறையில்
கவனம் செலுத்தத் தவறினால் குழந்தையை அடிப்பதையோ, திட்டுவதையோ
விட்டுவிட்டு அவர்களுக்கு காதில் ஏதேனும் பிரச்சினை உள்ளதாக என்று கண்டறியலாம்.
குழந்தைகள்
தாங்களாகவே பட்ஸ் அல்லது வேறு ஏதேனும் ஒன்றை காதில் போட்டு குடைவதை தவிர்க்க
வேண்டும்.
மெல்லிய
டவலின் நுனிப் பகுதியை லேசாக காதுகளில் விட்டு அருகில் உள்ள நீர்த்தன்மையை
போக்கலாமேத் தவிர, குழந்தைகளின் காதுகளில் பட்ஸ்களைப்
பயன்படுத்தி சுத்தப்படுத்த வேண்டாம்.
காதுகளில்
இருந்து மோசமான நாற்றம் வருமாயின் உடனடியாக மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற
வேண்டியது அவசியம் என்பதை உணருங்கள்.