உங்கள் வருகைக்கு நன்றி

'கவலையே வேண்டாம்.அழகான ஹேண்ட்பேகா மாத்துங்க!

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012


உடைகளுக்கும், அழகு சாதனங்களுக்கும் அடுத்தபடியாக பெண்களை அதிகம் கவர்வது கைப்பைகள். வேலைக்குச் செல்ல ஒன்று, விருந்தினர் வீட்டுக்கு ஒன்று, ஷாப்பிங் செய்ய ஒன்று என ஒவ்வொரு சந்தர்ப்பத்துக்கும் ஒவ்வொரு விதமான பைகளை எடுத்துச் செல்ல விரும்புவது அவர்களது இயல்பு. வசதி இருப்பவர்களுக்கு அது சாத்தியம். இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்?


''கவலையே வேண்டாம். உங்களோட பழைய புடவை, சல்வார், ஜீன்ஸ், டாப்ஸ்னு என்ன இருந்தாலும், அதை அழகான ஹேண்ட்பேகா மாத்தலாம்’’ என்கிறார் சென்னையைச் சேர்ந்த சித்ரா. பி.காம் பட்டதாரியான இவர் இன்று முழுநேர கை வினைக் கலைஞர். ஐந்நூறுக்கும் மேலான கைவினைக் கலைகள் கற்று வைத்திருக்கிற சித்ரா, வேஸ்ட் துணிகளில் வித்தியாசமான கைப்பைகள் செய்வதில் நிபுணி. ஆர்வமுள்ளோருக்கு வழிகாட்டுகிறார் அவர்.


என்னென்ன தேவை? முதலீடு?
‘‘தையல் மெஷின், பழைய புடவை, பாவாடை, சுடிதார், ஜீன்ஸ் பேன்ட், பிளவுஸ் பிட் என கைவசம் உள்ள துணிகள், ஜிப், ஃபேன்சி கைப்பிடிகள், பட்டன்கள், அலங்காரப் பொருள்கள்.... மெஷின் தவிர்த்துப் பார்த்தால் வெறும் 100 ரூபாய் முதலீடு போதும்.’’


எத்தனை மாடல்? என்ன ஸ்பெஷல்?
‘‘காலேஜ் பை, ஆபீஸ் பை, லேப்டாப் பை, வாட்டர் பாட்டில் பை, செல் பவுச், பர்ஸ்... இப்படி பதினைந்துக்கும் மேலான மாடல்கள் பண்ணலாம். உபயோகமில்லாத பழைய துணிகளை என்ன செய்வது என்கிற கவலையின்றி, அவற்றை இப்படி உருப்படியான, உபயோகமான பொருட்களாக மாற்றலாம். உடை தைக்கும்போது வீணாகும் பிட் துணிகளில்கூட தைக்கலாம். உடைக்கு மேட்ச்சாகவும் இருக்கும்.’’


விற்பனை வாய்ப்பு? லாபம்?
‘‘அக்கம்பக்கத்து வீடுகள், ஆபீஸ், காலேஜ், ஃபேன்சி ஸ்டோர் என விற்பனைக்கான வாய்ப்புகள் எக்கச்சக்கம். ஒரு நாளைக்கு 10 பைகள் வரை தைக்கலாம். ஒரு பை தைக்க நமக்கு வெறும் 100 ரூபாய்தான் செலவு. அதை 300 ரூபாய் வரை விற்கலாம். ஒரு பர்ஸ் தைக்க 20 ரூபாய். இதை 100 ரூபாய்க்கு விற்கலாம். மெட்டீரியலையும், மாடலையும் பொறுத்து, இரண்டு முதல் மூன்று மடங்கு லாபம் நிச்சயம்.’’


கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets