அறிந்து கொள்வோம் ரத்தசோகை
புதன், 1 ஆகஸ்ட், 2012
குழந்தைகள், பெரியவர்கள் எல்லாருக்கும் ரத்த சோகை வரும். 6 மாதம் முதல்35 மாதம் வரை உள்ள குழந்தைகளுக்கு
முழு அளவில் போஷாக்கு தேவை. அது கிடைக்காவிட்டால் ரத்த சோகை ஏற்படும். அதுபோல, பெண்களுக்கு அதிகமாக வரும்.
சமீபத்தில் உலக சுகாதார அமைப்பு எடுத்த சர்வேயில், இந்தியாவில் 79சதவீதம் பேருக்கு ரத்த சோகை
பாதிப்பு உள்ளது. பெரும்பாலோருக்கு தங்களுக்கு இப்படி ஒரு குறைபாடு இருப்பதே
தெரியாது என்று தெரியவந்துள்ளது. இந்திய பெண்களில் 56 சதவீதம் பேருக்கு உள்ளது.
அதில், 58 சதவீத கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படுகிறது. பெண்களை ஒப்பிடும்
போது ஆண்களுக்கு மிகக்குறைவான பாதிப்பு தான். 24 சதவீதம் பேருக்கு தான்
ஏற்படுகிறது.
ரத்தசோகை
யாருக்கு வருகிறது?
சத்தான உணவு சாப்பிடாவர்களுக்கு தான் அதிக அளவில் ரத்தசோகை
வரும். குறிப்பிட்ட நோயினால் அதிகம் பாதிக்கப்படுவோர், அறுவை சிகிச்சைக்கு பின் சிலர், வயதானவர்கள் போன்றவர்களுக்கு
ரத்த சோகை வர வாய்ப்பு உண்டு. இதனால் தான் டாக்டர்கள் இவர்களை சத்துணவு
சாப்பிடும்படி அறிவுறுத்துவர்.
காய்கறி, பழங்கள், முட்டை, மீன் போன்ற சத்தான உணவுகளை சாப்பிட்டால் தான் வைட்டமின், கனிம சத்துக்கள் கிடைக்கும்.
அப்படி இருந்தால் ரத்த சோகையே வராது. எந்த ஒரு கோளாறு இருப்பதையும்
வெளித்தோற்றத்தில் காட்டிக் கொடுத்து விடும். ஆனால் பலரும் அதை கண்டுகொள்வதே
இல்லை.
ரத்த சோகைக்கும் அப்படி பல அறிகுறிகள் உள்ளன. அடிக்கடி
சோர்ந்து படுப்பர். எந்த வேலையும் செய்ய மனது வராது. அப்படியே செய்ய முயற்சி
செய்தாலும் உடல் உழைக்காது, பசி எடுக்கும். ஆனால் சாப்பிடவும் பிடிக்காது. நடக்க
பிடிக்கும், ஆனால் மூச்சு வாங்கும், நாடித்துடிப்பு படபடக்கும். யாருடனும் பேச பிடிக்கும்.
ஆனால் எரிச்சல் வரும். கண்களை சுற்றி கருவளையம் ஏற்படும். நகங்கள் வெண்மை படியும்.
வேறு அறிகுறிகள்....
சிலர் திடீரென சாப்பிடுவர்.
கேட்டால் விளக்கம் சொல்லத் தெரியாது. சிலர் ஐஸ் கட்டிகளை வாயில் போட்டு மெல்லுவர்.
கொஞ்சம் கூட கவலைப்பட மாட்டார். அதுபோல, புண்ணாக்கு போன்ற கால்நடை தீவனங்கள் உள்பட மனிதர்களின் உணவு
அல்லாத உணவுகளை சாப்பிடுவதில் விருப்பம் இருக்கும். இவற்றை அடிக்கடி சாப்பிட்டால், அவர்களை டாக்டரிடம் காட்டுவதே
நல்லது. அவர்களுக்கு கண்டிப்பாக ரத்தசோகை ஏற்பட வாய்ப்பு உள்ளது.