உங்கள் வருகைக்கு நன்றி

வீட்டுக் குறிப்புகள்

சனி, 25 ஆகஸ்ட், 2012


வீட்டில் சீலிங் ஃபேன்கள் சுற்ற ஆரம்பித்த உடனேயே "டக் டக்' என்று சத்தம் வந்தால் ஃபேன் சரியாக பொருத்தப்படவில்லை என்று அர்த்தம். சரியாக பொருத்தப்படாத ஃபேன்கள் எளிதில் பாழாகும்.
 *  அயர்ன் பண்ணும்போது தண்ணீரைப் பயன்படுத்தினால், போர் வெல் தண்ணீரை தவிர்ப்பது நலம். நீரில் உப்புத்தன்மை இருந்தால் சிறிது சிறிதாக துரு ஏறி அயர்ன் பாக்ûஸ பதம் பார்த்துவிடும்.
 *  காலிங் பெல்லை உபயோகிக்கும்போது லேசாக அழுத்தினால் போதும். அழுத்தி நீண்ட நேரம் வைத்திருந்தால் பெல் பாழாகிவிடும்.
 *  டிவி, ஃப்ரிட்ஜ், ட்யூப் லைட் போன்ற மின்சார சாதனங்களின் ஸ்விட்சுகளை அணைத்தவுடனேயே உடனே போடாதீர்கள். ஃப்ரிட்ஜில் கம்பரசரும், டீவியில் பிக்சர் ட்யூபும், ட்யூப் லைட்டில் பாலய்டும் பாதிக்கப்பட்டு விரைவில் பழுதாகிவிடும்.
 *  அடிக்கடி உபயோகப்படுத்தும் எவர்சில்வர் டீ வடிகட்டி அடைத்துக் கொண்டிருந்தால், அதனை சில நிமிடங்கள் நெருப்பில் காட்டியபிறகு கழுவிவிட்டால் அடைப்பு நீங்கி பளிச்சென்று இருக்கும்.
 *  அயர்ன் பாக்ஸில் துணிக்கறை படிந்துவிட்டால் நகைக்கடையில் பயன்படுத்தும் ஆஸிட்டை லேசாக அயர்ன் பாக்ஸில் தடவி, சுரண்டி எடுத்துவிட்டால் போதும்.
 *  ஸ்டீல் பீரோ பளபளக்க பழைய துணியினால் தூசியைத் துடைத்துவிட்டு, சிறிதளவு பஞ்சு அல்லது ஸ்பாஞ்சை தேங்காய் எண்ணெயில் நனைத்து பீரோவைத் துடைக்கவும். ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் பஞ்சால் துடைக்க ஸ்டீல் பீரோ பளபளக்கும்.
 *  கிரைண்டரில் பொருத்தப்பட்டுள்ள கல், தானிய வகைகளை நிரப்பி ஆட்டும்போது எளிதில் தேய்வதில்லை. சிலர் கிரைண்டரைக் கழட்டும்போது கல்லை வெளியே எடுக்காமல், தண்ணீரி ஊற்றி மெஷினை ஆன் பண்ணிக் கழுவுவார்கள். இதனால் வெகு சீக்கிரத்தில் மெஷினிலுள்ள கல் தேய்ந்துவிடும்.
 *  நீண்ட நேரம் ஃப்ரிட்ஜின் கதவைத் திறந்தே வைக்கக்கூடாது. திறக்கும் முன்பே எதை எடுக்கப் போகிறோம் என்பதை முடிவு செய்து, உடனே திறந்து மூடுவது நலம்.
 *  குட்டீஸ் இருக்கும் வீடுகளில் ஃப்ரிட்ஜை லாக் செய்து விடுவது நல்லது. ஃப்ரிட்ஜை கண்டிப்பாக சமையலறையில் வைக்கக்கூடாது. எரிவாயு கசிந்தால் ஃப்ரிட்ஜிலிருந்து வெளியேறும் வாயுவுடன் சேர்ந்து வேதிவினை புரிந்து நெருப்புப் பொறிகள் கிளம்பும்.
 *  ஃப்ரிட்ஜிலுள்ள ஃப்ரீஸரில் ஐஸ் கட்டிகள் சேர்ந்தால் அதை வெளியேற்ற டீஃப்ராஸ்ட் பட்டனை உபயோகிப்பதே சரியான வழி. அந்த பட்டன் வேலை செய்யவில்லை என்றால் உடனே சரிபாக்க வேண்டுமே தவிர, குச்சி, கரண்டியை வைத்து குத்தினால், அதனுள் செல்லும் இணைப்பு குழாய்கள் வெடித்துவிடும்.
 *  பிரஷர் குக்கரின் வெயிட்டை தினமும் சுத்தம் செய்யுங்கள். அதனுள் சேரும் பசை அழுத்தத்தின் காரணமாக குறிப்பிட்ட நேரத்திற்கு அதிக நேரம் கழித்துதான் விசில் வரும். சில சமயம் வெயிட் தூக்கி எறியப்படும்.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets