உங்கள் வருகைக்கு நன்றி

மூட்டு வலி, முதுகு வலிக்கு புதிய சிகிச்சை

திங்கள், 2 ஜனவரி, 2012

இன்றைய காலகட்டத்தில் உடலில் உண்டாகும் வலிக்கான காரணத்தைக் கண்டறிய நேரமில்லாமல் வலி நிவாரண மருந்துகளைப் பயன்படுத்தி நாம் தாற்காலிகத் தீர்வைத் தேடுகிறோம். இதனால் நிரந்தர வலி வர நாமே காரணமாகின்றோம். மூட்டு எலும்புத் தேய்மானம், தசைநார்கள் பலவீனம் வருவதற்கு மனச் சோர்வு, உடல் சோர்வு ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. மூட்டுத் தேய்மானம் காரணமாக முதுகுத் தண்டின் நடுவில் உள்ள வட்ட வடிவமான ஜவ்வு வெளியே வந்தும், தசை நார்கள் கிழிந்தும் தீராத வலி ஏற்படுகிறது. இதற்கு செலவு பிடிக்கும் அறுவை சிகிச்சைகூட நிரந்தரமான தீர்வல்ல என்கிறார்கள்.

ஆனால் அயல்நாடுகளில் பிரபலமாக உள்ள "மானுவல் தெரப்பி' எனும் சிகிச்சையை எளிதாக செய்து கொள்ளலாம். வெறும் கைகளின் துணைகொண்டு தீர்வு காணமுடியும்.
எக்ஸ்-ரே, ஸ்கேன் மூலம் வலிக்கான மூல காரணத்தைக் கண்டறிந்து வலுவிழந்த தசை நார்களை வலுப்படுத்ததவும், வெளியே வந்துவட்ட ஜவ்வை அதன் சாதாரண நிலைக்குக் கொண்டு சேர்க்கவும், எங்கள் கைகளைக் கொண்டு குறிப்பிட்ட இடங்களில் முறைப்படுத்தி சிகிச்சை செய்யப்படுகிறது. நோயாளிகள் தாங்களே செய்து கொள்ளுமாறு, சில எளிய பயிற்சிகளும் உள்ளன. நோயாளிகளின் வலியைப் பொருத்தே, சிகிச்சையின் நேரமும், கால அவகாசமும் நிர்ணயிக்கப்படுகின்றன.
மானுவல் தெரப்பி' சிகிச்சை முறை பிசியோதெரப்பி சிகிச்சை முறையிலிருந்து மாறுபட்டது. எந்தவித மருந்துகளையும் கொடுப்பதில்லை. எளிமையான மிகக் குறைந்த செலவிலான இந்த சிகிச்சை முறையின் மூலம் வலியிலிருந்து நிவாரணம் கிடைப்பதோடு, உயர் ரத்த அழுத்த நோய்-சர்க்கரை நோய் போன்ற நோய்களிலிருந்து குணம் பெறலாம்.

 மேலும் விவரங்களுக்கு...
 டாக்டர் வேம்பன் சிவகுமார்,
 "ஸ்பைன் அண்ட் பெயின் கேர் கிளினிக்',
 சென்னை.
 செல்பேசி: 9840303156, 9600190001
______________________________________________________



முதுகுவலியை தவிர்க்க 10 சிறந்த வழிகள்

முதுகுவலி வராமல் தடுக்க டிப்ஸ்:-

1. எப்போதும் சுறுசுறுப்போடு இருப்பது, பொதுவான உடற்பயிற்சிகள் செய்வது. (உதாரணமாக) நடப்பது, நீச்சல் அடிப்பது, சைக்கிள் ஓட்டுவது.

2. தாழ்ந்த நாற்காலியில் அதிக நேரம் அமர வேண்டாம்.

3. உறங்கும் போது கடினமான மெத்தையை உபயோகிக்கவும் (அல்லது) தரையில் உறங்கவும்.

4. நான்கு சக்கர வாகனம் ஓட்டும்போது இருக்கையை உங்கள் உயரத்திற்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ளவும், அதிக தூரம் பயணிக்கும் போது பிரேக் மெதுவாக அடிக்கவும்.

5. கணினியில் அதிக நேரம் வேலை பார்ப்பவர்கள் தங்கள் இருக்கையை சரிசெய்து, தனது முழு முதுகும் இருக்கையில் (நிமிர்ந்தவாறு) இருக்கும்படி செய்யவும்.

6. அதிக எடையை தூக்கும் போது உங்கள் மார்போடு அணைத்தபடி தூக்கவும்.

7. அதிக நேரம் முதுகு திரும்பியவாறு வேலை செய்ய வேண்டாம்.

8. அதிக நேரம் நின்று கொண்டே பயணிக்க வேண்டாம்.

9. முதுகுவலி எடுத்தால், நீண்ட நேரம் அமருவதை தவிர்க்கவும், 30 நிமிடங்களுக்கு ஒருமுறை எழுந்து நில பொதுவான பயிற்சிகள் செய்யவும்.

10. கீழ்க்கண்ட ஏதேனும் அறிகுறிகள் இருப்பின் உடனடியாக (பிசியோதெரபிஸ்டை) அணுகவும்.

1. தொடர்ந்து 5 நாட்களுக்கு மேல் முதுகு வலி இருந்தால்.

2. வலி கால்களுக்கு பரவுதல், கால்களுக்கு பரவுதல், கால்களில் உணர்ச்சியின்மை (அல்லது) எரிச்சல்.

3. குனிந்தால் பளிச்சென்று வலி பரவுதல்.

4. நீண்ட நேரம், நின்றால், அமர்ந்தால் (அல்லது) நெடுந்தூரம் பயனித்தல் முதுகுவலி வருவது.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets