உங்கள் வருகைக்கு நன்றி

சிறுதுளி பெரு வெள்ளம்

ஞாயிறு, 15 ஜனவரி, 2012

"துடுப்பாக பிடித்துக் கொண்டேன்!' 

கார் டிரைவிங் கற்றுத் தரும் பூங்கொடி: சைக்கிள் கூட சொந்தமாக வாங்க முடியாத, அளவிற்கு ஏழைக் குடும்பத்து பெண் நான். பத்தாம் வகுப்பு முடித்தவுடன் திருமணம் முடிந்து திருச்சிக்கு வந்தேன். கணவருக்கு தனியார் மில்லில் மெக்கானிக் வேலை. ஆனால், எனக்கு டூவீலர், கார் ஓட்டணும்னு பல கனவுகள் இருந்தது. வீட்டில் சும்மா பொழுதுபோக்க விருப்பமில்லை. ஒயர் கூடை பின்னுவது, வீட்டில் இருந்தபடியே அரிசி வியாபாரம் செய்வது, பேபி சைக்கிள் வாங்கி, வாடகைக்கு விடுவது என்று என்னை சுறுசுறுப்பாக்கிக் கொண்டேன். என் இரு பெண் குழந்தைகளும் வளர்ந்த பின், அவர்களைப் பள்ளிக்குக் கொண்டு போய் விட்டு வர, என் கணவரின் டூ வீலரைப் பயன்படுத்தினேன். அதைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரர்களில் சிலர், "எங்க பிள்ளைகளையும் கொண்டு போய் விட்டுட்டு வாங்க, அதற்கான பணத்தைக் கொடுக்கிறோம்னு,' சொல்ல, இது ஒரு நல்ல ஐடியாவாக பட்டது. இதையே ஒரு துடுப்பாக பிடித்துக் கொண்டு, உறவினர்கள், நண்பர்கள் உதவியால், பணம் புரட்டி ஒரு கார் வாங்கினேன். கடந்த 2005ல் டிரைவிங் கார் துவங்கினேன். அந்த நேரத்தில், என் கணவர் வேலை பார்த்த மில் மூடப்பட்டது. என் கணவரும், கார் ஓட்ட கற்றுக் கொண்டு, பயிற்சியாளரானார். டூ வீலர் மற்றும் கார் டிரைவிங் என இதுவரை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் இங்கு பயிற்சி பெற்றுள்ளனர்.

பால் ஊற்றியே பிள்ளைகளை கரையேற்றி விட்டேன்
பால் வியாபாரம் செய்யும் விஜயகுமாரி. தாத்தா காலத்தில் இருந்தே பால் வியாபாரம் தான் தொழில். திருமணமாகி வந்த நான், கணவருடன் சேர்ந்து மாடுகளை கவனிக்க ஆரம்பித்தேன். அனைத்து வேலைகளையும் செய்வேன். பால் கறக்க மட்டும் தெரியாது. அதனால், கறந்து தரும் பாலை வீடுகளுக்கு வினியோகிக்க கிளம்பி விட்டேன். ஒரு பெண் சைக்கிளில் சென்று பால் ஊற்றுவதை, ஏரியாக்காரர்கள் ஆச்சரியமாகப் பார்த்தனர். என் தொழில் நேர்த்தியால், நிறைய வாடிக்கையாளர்கள் சேர்ந்தனர். சைக்கிளில் இருந்து, டூவீலருக்கு தற்போது மாறியுள்ளேன். எனக்கு மூன்று மகன்கள், 25 வருடத்திற்கு முன், ஒரு பெண் குழந்தை பிறந்து, அம்மை நோய் தாக்கி இறந்து விட்டாள். அழக் கூட நேரமில்லாமல், என் மற்ற பிள்ளைகளுக்குத் தெரியாமல், ஒரு துணியைப் போட்டு மூடி ஓரமாக வைத்துவிட்டு, பால் ஊற்றக் கிளம்பி விட்டேன். என் ஒரு குழந்தைக்காக, ஊரில் உள்ள குழந்தைகள் பாலில்லாமல் அழணுமான்னு, மனசை கல்லாக்கிக் கொண்டு சென்றேன். வீடு வந்து சேர்ந்த பின், நான் அழுத அழுகை கடவுளுக்குத் தான் தெரியும். இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு பார்க்கும் இந்தத் தொழில், கண்டிப்பாக நம்மை முன்னேற்றும் என்று நம்பினேன். நான் நினைத்தது போலவே, என் மூத்த மகன், தனியார் டிராவல்ஸ் நிறுவன டிரைவர், இரண்டாவது மகன் எம்.பி.ஏ., முடித்து ஐ.டி., நிறுவன வேலையிலும், மூன்றாவது மகன் மெரைன் இன்ஜினியரிங் முடித்து, லண்டன் கப்பல் வேலையிலும் செட்டிலாகியுள்ளனர். இதற்கு முன், 20 எருமை மாடுகள் இருந்தன. இப்போ அதை எல்லாம் விற்றுவிட்டு, ஆறு சிந்தி மாடுகள் வாங்கி கட்டியிருக்கிறோம். ஒரு மாட்டின் விலை 30 ஆயிரம் ரூபாய். காலையில், 50 லிட்டரும், மாலை 50 லிட்டரும் பால் கறக்குறோம். ஒரு லிட்டர் 28 ரூபாய்க்கு விற்கிறோம்.

பணம் சம்பாதிப்பது மட்டுமே, மனித வாழ்க்கையின் குறிக்கோள் கிடையாது. அதையும் தாண்டி, மனித சேவை முக்கியம்.

சிறுதுளிஅமைப்பின் நிர்வாகி வனிதா மோகன்: நான், கோவை கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் பி.காம்., படித்தேன். அதன் பிறகு, பிசினஸ் மேனேஜ்மென்ட் முதுகலை முடித்தேன். தொழிலில் வளர்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும், சின்ன வயசிலிருந்தே ஆறு, குளங்கள் மீது ஒரு ஈர்ப்பு இருந்தது. எங்க தோட்டத் துக்கு அருகேயுள்ள நொய்யலாறு உதவியால், ஆண்டு முழுவதும் விவசாயம் நடக்கும். அதெல்லாம், நான் பெரியவளானதும் காணக் கிடைக்காத ஒன்றாகி விட்டது. குளங்கள் சாக்கடை நிரம்பி, கூவமாக மாறிவிட்டது. 'சிறுதுளி' ஆரம் பித்தபோதே, முதன் முதலாக நொய்யலாற் றின் முகத்துவாரத்தில் உள்ள கிருஷ்ணாம் பதி குளத்தை தூர் வாரினோம். அவ நம் பிக்கையுடன் தான், எங்களை மக்கள் பார்த்தனர். அடைத்துக் கிடந்த வாய்க்கால்களையும் சுத்தப்படுத்தி வைத் தோம். எண்ணி ஒரு மாதத்தில், மழை வந்தது. நாங்கள் எதிர்பார்த்ததை விட, நன்றாகவே குளம் நிரம்பியது. அப்புறம் பாருங் கள், 1,300 அடிக்கு போயிருந்த நிலத்தடி நீர், 100 அடியில் கிடைத்தது. அதன் பிறகு தான் மக்களுக் கும், 'சிறுதுளி' மீது நம்பிக்கை வந்தது; எங்களுக்கும் ஊக்கம் பிறந்தது. புதிய குளங்கள் வெட்ட வேண்டும் எனில், அதற்கு பல நூறு, ஆயிரம் ஏக்கர் நிலங்கள் தேவைப்படும் என்று மலைத்து நிற்கக் கூடாது. சின்னதாக 50 சென்ட் இடம் கிடைத்தால் கூட, அதில் குட்டையோ, குளமோ வெட்டி நீர் தேக்க வேண்டும். எவ்வளவு முடியுமோ அவ்வளவு எண்ணிக்கையில், குளங்களை ஏற்படுத் தினால் தான், நம் நீர்வளத்தை நாம் காக்க முடியும்; எதிர்கால சந்ததிகளுக் கான நீர் தேவையையும் பூர்த்தி செய்ய முடியும்.



கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets