உங்கள் வருகைக்கு நன்றி

வெட்டிவேரின் பயன்கள்

ஞாயிறு, 15 ஜனவரி, 2012

வெட்டிவேர் புல் வளரும் காலத்தில் வேர் மூலமும், இலை மூலமும் அனேக நன்மைகள் செய்கிறது. வெட்டிவேர்புல் அறுவடைக்கு பின் வேர், இலை இரண்டும் பலவிதமான பொருள்களாக செய்யப்பட்டு பயன்படுகிறது. வெட்டிவேர் நறுமணம் தருவதுடன் புத்துணர்ச்சியும் தருகிறது. வெட்டிவேரைக் கொண்டு கைவிசிறிகள் செய்யப் படுகிறது. இந்த விசிறியானது வெயில் காலங்களில் குளுமையான, நறுமணமிக்க காற்றை நமக்கு தருவதுடன் வெயில் களைப்பை நீக்கி புத்துணர்வு தருகிறது. வெட்டிவேரைக்கொண்டு ஏர்கூலர் மேட் செய்யப்படுகிறது. இந்த மேட்டை ஏர்கூலர்களில் பொருத்துவதால் மிகவும் விரும்பி அனுபவிக்கக் கூடிய நறுமணமிக்க குளுமையான சூழ்நிலையை உருவாக்கித் தருகிறது.
வெட்டிவேரைக்கொண்டு அந்துருண்டை போன்ற பூச்சிவிரட்டிகள் செய்யலாம். இதனால் சமையலறை, துணிகள் வைக்கும் அலமாரிகள் போன்ற இடங்களில் உள்ள அந்து பூச்சிகள், கரப்பான் பூச்சிகள், கரையான்கள், எறும்பு வகைகள் போன்றவை வெட்டிவேரின் வாசனைக்கு அருகில் வராமல் ஓடிவிடும். வெட்டிவேர் வாசனை பத்திகள், மாலைகள் போன்ற பொருட்கள் செய்ய பயன் படுகிறது. இதன் பயன்பாடுகள் வெட்டிவேர் குளியல் பிரஷ்கள் செய்ய பயன்படுகிறது. இவை உடலுக்கு குளுமையையும் நறுமணத்தையும் தருகிறது. வெட்டிவேர் கம்ப்யூட்டர் இருக்கைகள், கார் இருக்கைகள் செய்ய பயன்படுகிறது. இவை அதிகநேரம் தொடர்ச்சியாக கம்ப்யூட்டர் வேலையிலும் கார் ஓட்டுவதிலும் ஈடுபடுபவர்களுக்கு உடல் சூட்டை குறைத்து நலம் தருகிறது. யோகா மேட் வெட்டிவேர் கொண்டு தயாரிக்கப் படுகிறது. இது யோகா போன்ற பயிற்சிகளில் ஈடுபடுபவர்களுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கிறது. வெட்டிவேர் பாய்கள் செய்யவும் பயன் படுகிறது. இந்த பாயை பயன் படுத்துவதன் மூலம் சரும நோய்கள் தீருகின்றது. உடல் சூட்டை குறைத்து வெப்பத்தால் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்து வதுடன் நல்ல நறுமணத்தால் நல்ல உறக்கம் வரவும் உதவு கிறது. வெட்டிவேர் மெத்தை, தலையணை போன்றவைகளும் செய்ய பயன்படுகிறது.
வெட்டிவேர் நறுமண எண்ணெய், சென்ட் தயாரிப்பில் முக்கிய இடம் வகிக்கிறது. வெட்டிவேர் எண்ணெய் கரையும் திறன் மிகவும் அதிகம் என்பதால் அனைத்து வகையான சென்ட் தயாரிப்பிலும் பயன்படுகிறது. வெட்டிவேர் எண்ணெய் மஜாஜ், ரத்த செல்களை வலிமையுறச் செய்து என்றும் இளமையுடன் திகழ வழிசெய்கிறது. வெட்டிவேர் கிரிக்கெட் குல்லா செய்யவும் பயன்படுகிறது. இதை அணிவதால் வெயிலின் தாக்கம் குறைந்து குளுமை தருகிறது. வெட்டிவேரைக்கொண்டு அழகு பொம்மைகள்,   போன்றவை செய்யப்படுகிறது. வெட்டிவேர் காலணிகள் செய்ய பயன்படுகிறது. இதை அணிவதன் மூலம் பித்தவெடிப்புகள் குறைய வாய்ப்புள்ளது. தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்கப்படுகிறது.
வெட்டிவேர் புல்லின் இலைகள் அறுவடைக்குப் பின் தகுந்த முறையில் பாடம் செய்யப் படுகிறது. இதைக்கொண்டு அழகான கூடைகள், பைகள், தொப்பிகள் போன்றவை செய்யப் படுகிறது. வெட்டிவேர் புல் உலர்ந்த நிலையில் நல்ல எரிபொருளாக மாறுகிறது. அனல்மின் தயாரிப்பில் நிலக்கரிக்கு பதிலாக வெட்டிவேர் புல் பயன்படுத்தும் வாய்ப்பு அதிகம் உள்ளது. 

தொடர்புக்கு: சி.பாண்டியன், சிவகங்கை. 93629 49176.
கே.சத்யபிரபா,
67,
சர்வலட்சுமி இல்லம், செல்லம் குடியிருப்பு, உடுமலை-642 126




இயற்கை முறையில் சாகுபடி செய்துவரும் ராஜகோபாலன் கூறுவது:
இது ஒரு லாபகரமானபயிர். இதற்கு அதிக ஆள் தேவையில்லை. அதிக தண்ணீர் தேவையில்லை. அதிக வெயில் தேவையில்லை. அப்படியே அதிக தண்ணீர், அதிக வெயில் இருந்தாலும் அதனால் பெரிய பாதிப்பு இல்லை. வெட்டிவேர் புல்லானது நல்ல மருத்துவகுணம் உள்ளதால் இதற்கு சந்தையில் நல்ல கிராக்கி இருக்கிறது. பயிர் செய்வதற்கு தேவையான இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட வெட்டிவேர் நாற்றுகள் விலைக்கு உள்ளன. வேண்டுவோர் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:
வீ.ராஜகோபாலன், ஸ்ரீதேவி மெடிக்கல்ஸ், திருவளப்பாடி, அத்தாணி,
அறந்தாங்கி வட்டம், புதுக்கோட்டை-614 630. 04371-244 408.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets