உங்கள் வருகைக்கு நன்றி

பாச அரவணைப்பான `கட்டிப்புடி' வைத்தியம்

ஞாயிறு, 30 டிசம்பர், 2012


குழந்தைகள் தாயிடம் அதிக பாசம் காட்டுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். சில குழந்தைகள் அழுவதை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் அம்மாவை பார்த்தாலே உடனே அழுகையை நிறுத்திவிடும். பிறந்து சில மாதங்களில் ஆட்களைப் பார்த்து இனம் காணத் தெரியாத பொழுதே தன் தாயினை குழந்தை நன்றாக அடையாளம் தெரிந்து வைத்திருக்கும்.

தாயின் அரவணைப்பிற்கு பிறகே சமாதானம் அடையும். இல்லாவிட்டால் காரணமே இல்லாமல் அழுவதை நாம் பார்க்கலாம். ஆனால் இதுபோன்ற பாசத்தை தந்தையுடன் குழந்தை வெளிப்படுத்துவது கிடையாது. தாய்- குழந்தைக்கு மட்டும் அப்படி என்ன பிணைப்பிருக்கிறது? என்று விஞ்ஞானிகள் ஆராய்ந்து வந்தனர்.

அதற்கான விடை கிடைத்துவிட்டது. நிïயார்க் மாகாணத்தைச் சேர்ந்த மவுன்ட் சினாய் மருத்துவ மைய ஆய்வாளர்கள் இதை கண்டுபிடித்துள்ளனர். `ஆக்சிடாக்சின்' என்னும் ஒருவித ஹார்மோன்கள் பெண்களின் உடலில் காணப்படுகின்றன.

இவைதான் தாய்- குழந்தையின் பிணைப்பை தூண்டுகிறது. அதுமட்டுமல்லாமல் வேறு சில பணிகளிலும் இந்த ஹார்மோன்கள் பணியாற்றுகிறது. தாய்க்கு, பாலூட்டும் உணர்ச்சியை அதிகமாக்குவது, உடல் உழைப்பை தூண்டுவது, குழந்தைகளை தாயின் அருகாமையை எதிர்பார்த்து காத்திருக்க வைப்பது போன்ற பணிகளில் ஆக்சிடாக்சின் பங்கேற்கிறது.

பாச அரவணைப்பான `கட்டிப்புடி' வைத்தியத்தில் தூண்டப்படுவது இந்த ஹார்மோன்கள்தான்!

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets