உங்கள் வருகைக்கு நன்றி

கண்ணாடி மற்றும் கேமரா கயவர்கள் கவனம் தேவை!

செவ்வாய், 18 டிசம்பர், 2012


பெண்கள் தங்கள் குடும்பத்துடன் மட்டுமல்ல... உறவினர், அக்கம் பக்கத்து வீட்டு பெண்கள் குழந்தைகள் என டூர் அடிப்பர். அப்படி பெண்கள் நிறைய வரும் இடத்தில் அவர்களின் பாதுகாப்பிற்கு அவர்கள் தான் முதலில் உஷாராக இருக்க வேண்டும். டூர் அடிக்கும்போது, ஓட்டல்களில் தங்குவது தவிர்க்க முடியாத விஷயம்.

சாதாரண கண்ணாடி சைத்தானாகும்!
முகம் பார்க்கும் கண்ணாடி ரூபத்திலும் ஆபத்து வரலாம். முகம் பார்க்கும் கண்ணாடியில், "டூ வே மிர்ரர்' என்ற ஒரு வகை கண்ணாடி உள்ளது. இந்த கண்ணாடியின் ஒரு பக்கம் முகம் பார்க்கலாம். அதே சமயம் மற்றொரு பக்கத்தில் இருந்த கண்ணாடியில் முகம் பார்த்து கொண்டு இருக்கும் நபரை பார்க்க முடியும். முகம் பார்க்கும் கண்ணாடியின் பின்பகுதி அடைப்பாக தானே இருக்கும் என்று நினைத்தால் அது தவறு. அதாவது அந்த கண்ணாடியில் முகம் பார்ப்பவருக்கு கண்ணாடிக்கு மறுபுறம் என்ன இருக்கிறது என்று தெரியாது. ஆனால், கண்ணாடியின் மறுபுறம் இருப்பவர் முகம் பார்க்கும் நபரை பார்க்கலாம். இந்த வகை கண்ணாடி இப்போது வீட்டின் ஜன்னல்களிலும் பொருத்தப்படுகின்றன.

ஓட்டல் அறைகளிலும் வசதியான லாட்ஜ்களிலும் சுவரிலோ அல்லது ஜன்னல்களை ஒட்டியோ இந்த "டூ வே மிர்ரர்' கண்ணாடிகள் பொருத்தப்பட்டு இருக்கலாம். எனவே, அங்கு தங்குபவர்கள் அது சாதாரண முகம் பார்க்கும் கண்ணாடிதானா? அல்லது "டூ வே மிர்ரர்' என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
சரி... அதை எப்படி கண்டுப்பிடிப்பது? கண்ணாடியை விரல்களால் லேசாக தட்டி பாருங்கள். உள்ளீடற்ற நிலையில் காலியாக இருப்பது போன்று சத்தம் கேட்டால் அது "டூ வே மிர்ரர்' அல்லது கண்ணாடியின் ஓர் இடத்தில் கைகள் இரண்டையும் குவித்து அந்த இடத்தில் இருட்டை ஏற்படுத்தி கொண்டு மறுபக்கம் பாருங்கள். மறுபக்கம் இருக்கும் பொருட்கள் தெரிந்தால் அது "டூ வே மிர்ரர்' தான். மற்றொரு சோதனையும் உள்ளது. கண்ணாடியின் மீது உங்கள் விரல் நகத்தை வையுங்கள். உங்கள் விரல் நகத்துக்கும் கண்ணாடியில் தெரியும் விரல் நகத்துக்கும் (இமேஜ்-உருவம்) இடைவெளி இருப்பது போன்று தெரிந்தால் அது வழக்கமான முகம் பார்க்கும் கண்ணாடி. அப்படி இடைவெளி இல்லாமல் உங்கள் விரல் நகம் கண்ணாடியில் தெரியும் விரல் நகத்தை நேரடியாக தொடுவது போல் தெரிந்தால் அது "டூ வே மிர்ரர்'. முகம் பார்க்கும் கண்ணாடியில் இவ்வளவு சமாசாரம் இருக்கிறதா என்று யோசிக்கிறீர்களா? கேவலமான மனிதர்களின் இது போன்ற இழிவான நடவடிக்கைகள் பற்றி அடிக்கடி கேள்விப்படுகிறோமே. அதனால் எல்லா இடங்களிலும் உஷாராக இருக்க வேண்டியது அவசியம் அல்லவா?

காமிரா சாத்தான்கள்!
ஓட்டல்கள் மற்றும் விடுதிகளில் சென்று தங்கும் போது குடும்பத்தினர் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கண்ணாடியாவது தெரியும்படி, பெரிதாக ஒரு சில இடங்களில் மட்டுமே இருக்கும். ஆனால், காமிராக்கள் அப்படியல்ல... பெரிய ஓட்டல்கள், லாட்ஜ்கள் வணிக வளாகங்கள் போன்ற இடங்களில் உள்ள குளியல் அறைகளுக்கு உள்ளும் பெண்கள் நிம்மதியாக சென்று வர முடியவில்லை.
எங்காவது ரகசியமாக கேமராக்கள் அல்லது செல்போன் மறைத்து வைத்து படம் எடுத்து விடுகின்றனர். கேமரா செல்போன்கள் மலிவாகி விட்டதால், பலரது கைகளிலும் அதை பார்க்க முடிகிறது. பெண்கள் இன்னமும் கவனமாய் இருக்க வேண்டி உள்ளது. மொத்தத்தில் கேமரா செல்போன், கேமரா போன், பின் ஹோல் கேமரா போன்றவை வந்த பிறகு பெண்கள் கவனமாக இருக்கணும் என்பதில் எந்த கருத்து மாறுபாடுமில்லை. அவற்றை பயன்படுத்தி குற்ற செயல்களில் ஈடுபவர்களை கடுமையாக தண்டிப்பதன் மூலம்தான் பெண்களுக்கு உரிய பாதுகாப்பை ஏற்படுத்தி தர முடியும்.

ஓட்டல்களில் தங்கும்போது.
ரகசியமாக எங்காவது கேமராக்கள் அல்லது கேமரா செல்போன்கள் மறைத்து வைக்கப்பட்டு இருக்கலாம். அவற்றின் கழுகு கண்களில் இருந்து தப்பிக்க சில வழிகள்... யோசனைகள்.

1.
அறைக்குள் சென்றதும் சுற்றும் முற்றும் நன்றாக நோட்டமிடுங்கள்.
சுவர்களை கூர்ந்து கவனியுங்கள். சுவர்களின் ஒட்டப்பட்டு இருக்கும் காகிதங்கள் (வால் பேப்பர்) தொங்க விடப்பட்டு இருக்கும் படங்கள் சுவர் கடிகாரங்கள் ஆகியவற்றின் பின் ரகசிய கேமராக்கள் மறைத்து வைக்கப்பட்டு இருக்கலாம். மூலை முடுக்குகளையும் கூர்ந்து கவனியுங்கள்.

2.இரவில் தூங்கும்போது மின் விளக்கை அணைத்து விடுங்கள். இருட்டில் நடப்பதை படம் படிக்கும் திறன் சாதாரண ரகசிய கேமராக்களுக்கு கிடையாது.

3.
அறையில் இருக்கும் டி.வி பெட்டிக்குள் ரகசிய கேமரா மறைத்து வைக்கப்பட்டு இருக்கலாம். எனவே, டி.வி. இயங்காதபோது அதன் மெயின் இணைப்பை துண்டித்து விடுங்கள்.

4.
குளியல் அறையில் ஏதாவது இடத்தில் ரகசிய கேமரா அல்லது செல்போன் மறைந்து வைக்கப்பட்டுள்ளதா என்று கவனியுங்கள். ஏதாவது இடத்தில் துவாரம் இருந்தால் அதை ஒரு காகிதத்தால் மூடி விடுங்கள். அதன் பின்னால் கேமரா மறைந்து வைக்கப்பட்டு இருக்கலாம்.

5. ஓட்டல் வளாகத்தில் உள்ள நீச்சல் குளம், பார் போன்ற இடங்களில் சில ஆசாமிகள் செல்போனை நோண்டி கொண்டே இருப்பர். செல்போன் கேமராவை ரகசியமாக உங்கள் பக்கம் திருப்பி அவர்கள் உங்களை ரகசியமாக படம் எடுக்கலாம்.

6.
லேப்டாப் கம்ப்யூட்டரை இயக்கி கொண்டு இருப்பது போல், அதில் உள்ள கேமரா மூலம் சிலர் உங்களை ரகசியமாக படம் பிடிக்கலாம்... கவனம்.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets