உங்கள் வருகைக்கு நன்றி

வயிற்றில், மூன்று மணி நேரத்திற்கும் மேல் வலி இருந்து, வாந்தியும் இருந்தால்

திங்கள், 10 டிசம்பர், 2012

குடல், வயிற்றுப் பகுதியை விட்டு வெளி யே வருவதைத் தான், ஹெர்னியா என்றழைக்கிறோம். ஹெர்னியா வந்துவிட்டால், அதை மருந்து, மாத்திரை கொடுத்து சரி செய்ய முடியாது. அறுவை சிகிச்சை தான் சிறந்தது. அதிக பளுவுள்ள பொருட்களைத் தூக்குவது, தொடர்ந்து இருமிக் கொண்டே இருப்பது போன்றவை, குடல் வயிற்றுப் பகுதியை விட்டு வெளியே வரச் செய்துவிடும். அப்போது, அறுவை சிகிச்சை அவசியம். "அப்பன்டிக்ஸ்' என்பதை, தமிழில், குடல் வால் என அழைப்போம். மனித உட லில், அதற்கென்று தனியாக வேலை கிடையாது. பெருங்குடலும், சிறு குடலும் சேரும் இடத்தில், குடல் வால் உள்ளது. இதில், ஏதாவது தொற்று ஏற்படும்போது தான், "அப்பன்டிக்ஸ்' வருகிறது. 30 சதவீதம் மருந்து மாத்திரைகளின் வழியே, இந்தத் தொற்றைச் சரி செய்து விடலாம். வயிற்றின் கீழ்ப்பகுதியில், வலப்புறம் வலி என்பது, 24 மணி நேரத்திற்கு மேல் இருந்தால், அறுவை சிகிச்சை நிபுணரை அணுகி ஆலோசிக்க வேண்டும். எதற்கெடுத்தாலும் பதற்றப்படுபவர்கள், உணர்ச்சி வசப்படுபவர்களுக்கு அல்சர் வரும். மேல் வயிற்றில் எரிச்சல், சாப்பிட்ட உடனே நெஞ்சுக் கரிச்சல், வாந்தி போன்றவை, அல்சரின் அறிகுறிகள். இதுபோன்று, தொடர்ந்து இருந்தால், மருத்துவரிடம் கட்டாயம் பரிசோதனைக்குப் போக வேண்டும். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன், தென்னிந்தியாவில் அரிதாக இருந்த இந்தப் பித்தப்பை கல், இப்போது சர்வ சாதாரணமாகி விட்டது. அதிக எண்ணெய், நெய் சேர்த்த உணவுகளைச் சாப்பிடுவதுதான், இது வருவதற்கான முதல் காரணம். சாப்பிட்ட உடனேயே, வாந்தி, மேல் வயிற்றில் வலப்பக்கம் வலி இருந்தால், பித்தப் பை கல் உள்ளது என்று அறிகுறி. வயிற்றில், மூன்று மணி நேரத்திற்கும் மேல் வலி இருந்து, வாந்தியும் இருந்தால், மருத்துவரிடம் போக வேண்டும்!

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets