புகுந்த வீடும் தன் குடும்பம் என்ற எண்ணம் வந்தால் எந்த பிரச்சனையும் வராது.
ஞாயிறு, 30 டிசம்பர், 2012
தற்போதுள்ள
காலகட்டத்தில் திருமணம் என்பது பொழுது போக்காக உள்ளது. பெண்கள் தாய் வீட்டில்
இருக்குத் போது எப்படி வேண்டுமானலும் இருக்கலாம். ஆனால் புகுந்த வீட்டில் எந்த
பிரச்சனை வந்தாலும் அந்த குடும்பத்தின் கௌரவத்தை காக்க பெண்கள் பாடுபட வேண்டும்.
பெண்கள் தன் புகுந்த வீட்டில் அன்பாகவும்.
ஒற்றுமைக்காகவும்
ஒரு சில தியாகங்களை செய்யவும் முன்வர வேண்டும். ஒரு பெண் திருமணத்திற்கு பின் தன்
கணவருடைய பெருமை, மரியாதை, கவுரவம் என்று அனைத்து விஷயங்களிலும் தனக்கும் பங்கு உண்டு
என்பதைக் காட்ட வேண்டும். அதில் தான் பெண்ணுக்கு மரியாதை உள்ளது.
அதேபோல், மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவளுடன் இணைந்து
ஒற்றுமை குலையாமல் குடும்பத்தை பராமரிப்பதில் தான் கணவனுக்கு மரியாதை உள்ளது. சில
பெண்கள் தாய்வீட்டில் கிடைக்கும் சுதந்திரம் புகுந்த வீட்டில் கிடைக்காத போது
பிரச்சனைகள் தலைதூக்குகிறது.
இயல்புக்கு
மீறிய நடத்தைகளில் ஈடுபடும்போது அவர்களது மரியாதைக்கு பங்கம் வந்து விடுகிறது.
எனவே பெண்களுக்கு புகுந்த வீடும் தன் குடும்பம் என்ற எண்ணம் வந்தால் எந்த
பிரச்சனையும் வராது.