உங்கள் வருகைக்கு நன்றி

குழந்தைகளை பொருத்தவரை நீங்கள் தான் முதலில் ஹீரோ

சனி, 29 செப்டம்பர், 2012


பெற்றோர்களின் கவனத்திற்கு இப்போது நமது உணவு முறை மாற்றத்தினால் நமது குழந்தைகள் சீக்கிரமே பெரியவர்களாகி விடுகின்றனர் அதிலும் பெண் குழந்தைகள் பெரும்பாலும் எட்டு முதல் பனிரெண்டு வயதுக்குள் பெரிய பெண்களாகி விடுகின்றனர் வயதில் சிறியவர்களாக இருந்தாலும் உருவத்தில் பெரியவர்களாக இருக்கின்றனர் சில இடங்களில் பார்த்திருக்கிறேன் குழந்தைகள் தானே என்று சிலவிதமான உடைகளை அணிவித்து விடுகிறார்கள் பெற்றோர்களை முதலில் புரிந்துகொள்ளுங்கள் உங்கள் குழந்தையின் மீது உங்களுக்குள்ள கண்ணோட்டமும் மற்றவர்களின் கண்ணோட்டமும் ஒரே மாதிரியாய் இருக்காது அன்றாடம் செய்திகளில் பார்க்கத்தானே செய்கிறோம் குழந்தைகளும் பாலியல் தொல்லைக்கு உள்ளாவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

மேலும் நம் குழந்தைகளுக்கு நாம் ஒரு முன்மாதிரியாக இருக்கவேண்டும் உங்களுக்கு தெரியும்தானே உங்கள் குழந்தைகளை பொருத்தவரை நீங்கள் தான் முதலில் ஹீரோ உங்களிடமிருந்துதான் குழந்தைகள் நல்ல விஷயங்களையும் கெட்ட விஷய்ங்களையும் கற்றுக்கொள்கின்றனர். 

Read more...

யாருக்காக இந்த ஆடை அலங்கரிப்பு?


இப்போதெல்லாம் அடிக்கடி யோசிப்பது நாம் எந்த காலக்கட்டத்தில் இருக்கிறோம் எனபதை பற்றித்தான்மனிதன் தோன்றிய காலத்தில் நிர்வாணமாகத்தான் இருந்தான் பின்னர் அவனாகவே நாகரீகம் எனும் பாதையில் சுயமாக மாறத்தொடங்கினான் வெற்றுடம்புடன் திரிந்த மனிதன் தன் அந்தரங்களை மறைக்க இலை தழைகளை கொண்டு மறைக்க ஆரம்பித்தான் அந்தரங்கள் மறைக்கப்படாமல் வெளிவருவதை அன்றே விரும்பவில்லை என்றே தோன்றுகிறது. பொதுவாகவே ஆணுக்கும் பெண்ணுக்கும் உடலியல் அமைப்பு வெவ்வேறாக இருந்தாலும் பெண் என்கிற விஷயத்தில் ஆண் விருப்பம் கொண்டுள்ளான் என்பது இயற்கையாகவே இருக்கிறது அது நமக்கும் தெரியும்.


முன்பெல்லாம் நம் முன்னோர்கள் எப்படி இருந்தார்கள் என பார்த்தோமேயானால் ஆண்கள் கோவணமும், வேட்டியுமாக இருந்திருக்கின்றனர், பெண்கள் பதினாறு முழம் சேலை கட்டியிருந்திருக்கிறார்கள் இந்த காலகட்டத்தில் இருவருமே மேலாடை அணிந்திருக்கவில்லை பின்னர் மீண்டும் ஒரு நாகரீகத்தின் வளர்ச்சியில் மேலாடையும் போடத்தொடங்கினர் பின்னர் நாகரீக வளர்ச்சியில் வீடு வாகனம் இன்னும் பல இத்யாதிகள் எல்லாம் மாறின, இப்படி போய்க்கொண்டிருந்த நாகரீக மாற்றத்தில் மீண்டும் சைக்கிளிங் போல பழைய விஷங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க தொடங்கினோம்.

இயற்கைக்கு இசைவாய் வாழ்கிறோம் என்கிற பெயரில் வீடுகள் இயற்கையை ஒத்ததாக அமைத்தனர் மீண்டும் பழைய ஒரு நிலைக்கு செல்ல விரும்பினர் இது வரவேற்கபட வேண்டிய ஒன்றுதான் ஆனால் இதில் ஒரு வில்லங்கமான விஷயத்தையும் சேர்த்துகொள்ள வேண்டிய அவசியமில்லையே என்கிற ஆதங்கத்தை தவிர்க்க முடியவில்லை, உடை நாகரீகம் இதில் பழைய நிலைக்கு நேரடியாக செல்லவிட்டாலும் மறைமுகமாக அந்த நிலைக்கு சென்று விடுவோமோ என்கிற அச்சம் வருகிறது.

பொதுவாகவே ஆண்களுக்கு அதிக உடை விஷயங்கள் இல்லை வேஷ்டி, பேண்ட், கைலி, சட்டை என ஒரு சிறிய வட்டத்துக்குள் அடக்கிவிடலாம் ஆனால் பெண்களை பொருத்தவரை எத்தனை உடைகள் எத்தனை நாகரீங்கள் இன்னும் ஏன் இப்போதெல்லாம் பெண்களும் ஆண்கள் அணியும் பேண்ட் டீசர்ட் என அணிய தொடங்கிவிட்டார்கள், சரி அணிந்தால் என்ன இதில் என்ன தவறு இருக்கிறது? சரி ஆண்கள் வெறும் வேஷ்டியோடு இருந்தாலும் அது மற்றவர்களை அதிகம் பாதிப்பதில்லை இன்னும் நேரடியாக சொல்லப்போனால் காமத்தை தோற்றுவிப்பதில்லை ஆனால் பெண்கள் அப்படியில்லையே அவர்களின் சிறு கவனக்குறைவான உடையலங்காராம் கூட பார்ப்பவர்களை முகம் சுழிக்க செய்துவிடுமே அதோடு ஒரு தவறான கண்ணோட்டத்தையும் உருவாக்கும் என்பது தெரியாதா?

முன்பெல்லாம் பெண்கள் சுடிதார் அணிந்தார்கள் அதோடு சால்வையும் போர்த்திகொண்டார்கள் அப்போது நிச்சயமாக அது நல்ல உடையாகத்தான் இருந்தது ஆனால் அதே சுடிதார் இப்போது வேறொரு வடிவம் பெற்று இருக்கிறது இப்போது உள்ள சுடிதார் எப்படியிருக்கும் என்பதற்கு படம் இனைக்க விரும்பவில்லை காரணம் உங்களுக்கே தெரியும் உடல் அவையங்களை அச்சு பிசகாமல் அளவெடுத்து காண்பிக்கும் உடைதான் நாகரீகமா? முன்பெல்லாம் உடல் அவயங்களை மறைக்கதானே ஆடை அணிந்தோம் ஆனால் இப்போது எடுத்துக்காட்டும் வகையில் ஆடை தேவைதானா? மேலும் இருக்கமான டீசர்ட் மற்றும் பேண்ட் இதை பற்றியும் அதிகம் சொல்லவோ அதற்காக போட்டோவோ இனைக்கவேண்டியதில்லை எல்லாமே உங்களுக்கு தெரியும் ஆனாலும் மாறுவதில்லை யாருக்காக இந்த ஆடை அலங்கரிப்பு?

சமீபத்திய ஆராய்ச்சியில் பெண்கள் தான் ஆண்களின் தவறான கண்ணோட்டத்துக்கு வித்திடுவதாக வெளியிட்டு இருந்தார்கள் உடனே கோபப்படவேண்டாம் ஆராய்ச்சிக்காக பங்கெடுத்தவர்கள் எல்லோருமே பெண்கள்தான், மேலும் இப்போதெல்லம் நாம் நம்முடைய தனிமையை இழந்துகொண்டிருக்கிறோம் நாம் ரோட்டில் நடந்து சென்றாலும் நம்மையும் அறியாமல் மொபைல் போனில் உள்ள கேமரா கொண்டு படம் எடுத்து விடுகிறார்கள் நாம் நினைப்போம் நம்மை யார் போட்டோ எடுக்க போகிறார்கள் என நினைத்தால் நாம்தான் ஏமாந்துகொண்டிருக்கிறோம் இப்போதெல்லாம் மார்பிங் வழியாக போட்டோவையே மாற்றிவிடுகிறார்கள் இதனால் எவ்வளவு பாதிப்பு? இருந்தாலும் சர்வ சாதரணமாக பேஸ்புக் மற்றும் ஆர்குட்டில் எந்த தயக்கமும் இல்லாமல் போட்டோவை வெளியிடுவது ஆச்சரியமளிக்கிறது சரி அவர்கள் என்ன படிக்காதவர்களா என்றால் நன்கு படித்தவர்க்ள் இதன் விளைவுகளை யோசிக்கமாட்டர்களா? கொஞ்சம் பொறுமையாய் கூகுளில் தேடிப்பார்த்தால் நம் போட்டோ கூட கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

பழைய காலத்து பெண்கள் போல முழுவதும் மூடி சுற்றாவிட்டாலும் குறைந்தபட்சம் சேலையாவது அணியலாமே, சுடிதார் அணியும்போது கொஞ்சம் இறுக்கமில்லாமல் அணிந்தால் உங்கள் உடலை அப்படியே எடுத்துக்காட்டாதே? உடலை மறைக்க தானே உடை? நீங்கள் அழகாக சேலை உடுத்தி சென்று பாருங்கள் உங்களை பார்ப்பவரின் கண்ணோட்டம் நல்லவிதமாகவே இருக்கும் அதே வேளையில் கொஞ்சம் நாகரீகம் என்கிற பெயரில் மேலே சொன்ன உடைகளை அணிந்து செல்லுங்கள் உங்களை பார்ப்பவர்களின் கண்களில் வித்யாசம் தெரிவதை உங்களால் உணரமுடியும்.

நிர்வாணம் என்பது கூட பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை ஆனால் அரைகுறை ஆடைகள் ஆபாசத்தை தோற்றிவிக்கிறது என்றால் நிச்சியம் மிகையில்லை. நாம் ஆடை அணிவது உடலை மறைக்கவும் கொஞ்சம் அழகுக்காவும் தானே! அதே ஆடையே நமக்கு பாதுகாப்பில்லாத நம்மை சமுதாயத்தில் தவறாய் பிரதிபலிக்க கூடிய நாகரீகம் எனும் பெயரில் உடுத்தும் ஆடை நமக்கு தேவைதானா? வெளிநாட்டினர் நம்மை வியந்து பார்த்த்தில் நம் ஆடைக்கும் பங்கு உண்டுதானே இப்போதும் வெளிநாட்டு பெண்கள் நம் இந்தியாவில் சேலை உடுத்துவதை பார்த்திருப்பீர்கள் தானே. வெளிநாட்டினர் எப்படியெல்லாம் உடை உடுத்துகிறார்கள் என கேள்வி வேண்டாம் அவர்களின் கலாச்சாரமும் சூழ்நிலையும் வேறு ஆனால் நமக்கு ஒரு பாரம்பரியம் இருக்கிறதே, குறைந்தபட்சம் நம் கலாச்சார காவலர்களாக இல்லாவிட்டாலும் மனதில் தவறான சிந்தையை விதைக்க நம் உடை ஒரு காரணமாய் இருக்கவேண்டாமே.

Read more...

ஒரு பெண்ணின் உள்ளக்குமுறல் 1


 நான் பல வேலைகளில் யோசித்தது உண்டு, என்ன தான் செய்யவேண்டும் நான், மனம் புழுங்கி, வருந்தி சொல்லவரும் விஷயங்கள் உங்கள் காதில் விழ, அங்கீகரிக்கப்பட, மாற்றம் வரும்படியான மனநிலை உருவாக என்று. இதுவரை பிடிப்படவில்லை, இனியாவது பிடிபடுமா எனவும் தெரியாது எனக்கு.

என்னையோ, இல்லை என்னை போலவே தொலைந்த முகங்கள் கொண்ட பெண்களையோ நீங்கள் கட்டாயம் பார்த்திருக்கலாம், பார்த்திருப்பீர்கள், பார்க்க நேரலாம். கடக்கும் நிமிடங்களை இறுகப்பற்றி, நேற்றைகளையும் நாளைகளையும் மறந்த

எங்களுக்கு இன்னும் பேர் வைக்கப்படவில்லை. எங்களை கண்டுப்பிடிப்பது அத்தனை கஷ்டமில்லை. நாங்கள் அசின்களோ, தமன்னாக்களோ, ஐஷ்வர்யா ராய்களோ நிச்சயம் இல்லை. Matrimonial column தாங்கி வரும் Tall, Fair and Pretty பெண்கள், ஒரு 85% நாங்களாக இருக்க வாய்ப்பில்லை. சுமார் அழகாய், சுமார் புத்தியோடு, சுமார் பணத்தோடு, சுமார் படிப்போடு, சுமார் வேலையோடு எங்கள் வாழ்க்கையை கடந்து, வந்த வழி திரும்பிப் பார்த்து வெதும்பி குமுற மட்டுமே தெரிந்த இந்த முதுகெலும்பில்லா கூட்டத்தில் நானும் ஒருத்தி. பேச்சு வழக்கிற்கு நாங்களை நான் என்றே வைத்துக்கொள்ளலாமா... புரிந்து கொள்வீர்கள் என்று நம்புவோமாக!

மூலக்கடையில் நீங்கள் விட்ட சிகரெட் புகையின் ஊடே, நான் உங்களை கடந்திருப்பேன். வெண்டைக்காய், தக்காளி பார்த்து வாங்குவதில் முனைப்பாய் இருந்தப்போது தெரிந்த என் இடுப்பை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். பஸ்ஸில் இடிபட்டு இடமின்றி நிற்க, என் பின்பகுதியை தேய்த்துக்கொண்டு உங்கள் உறுப்புகளின் வேட்கையை சிலநிமிடம் தீர்த்துக்கொள்ள, அறுவெறுப்பாக உணர்ந்தாலும், வீட்டில் நேற்று என்னை அடித்ததில் வலித்த கன்னத்தையும் உடைந்த தன்மானத்தையும் யோசித்து கொண்டு ஒன்றும் சொல்லாது வந்ததில், பஸ் விட்டு இறங்கி, உங்கள் நண்பர்களிடம், ``மாம்ஸ்! இன்னைக்கு பஸ்ல ஒரு Aunty செமயா company குடுத்தாடா!`` என்று பீற்றிக்கொள்ள வைத்தது நானாக இருக்கலாம். பல சமயங்களில் வெறும் மார்பகமாகவோ, பிட்டமாகவோ, இடுப்பாகவோ கூட நான் உங்களுக்கு தெரிந்திருப்பேன். ``காலைலயே என்னமோ புருஷன் செத்தாப்புல எப்புடி இருக்குது பாரு, விடியாமூஞ்சி!`` என்று வாய் விட்டோ, மனத்திற்குள்ளேயோ திட்டினாலும், ஒன்றுமே உறைக்காது காப்பி போட்டு, காலை சமையல் செய்து நீங்கள் இருக்கும் இடத்திற்கு கொண்டு வந்து கொடுப்பவள் நானாக இருக்கலாம். அலுவலகத்தில் நேரத்திற்கு வந்து வேலையை மட்டுமே கவனித்து, பாராட்டப்பட்டால், ``இதையும் அதையும் காட்டியே வேலை முடிச்சிக்கிறாளுங்க`` என்று சொன்னதும் என்னை பற்றி இருக்கும். ஆக மொத்தம் இப்படி நீங்கள் காணும் திசை, ஊர், நாடு முழுக்க இருப்பினும், அரூபமான என்னை நீங்கள் உற்றுத்தேடித்தான் கண்டுப்பிடிக்க முடியும்.
 
திமிர் பிடிச்ச பேச்சு, தெனாவட்டு பார்வை, எவன் கூடவேணும்னா போகலாம், குறைந்த பட்ச ஆடைகள் போடுவது, பிறப்புறுப்பை பற்றி பேசுவது ஆகியவைதான் பெண்ணியம் என்று நீங்கள் நினைத்திருப்பீரெனில் மேற்கொண்டு படிக்கவும். ``எதற்கு இத்தனை பேர் பெண்ணியம் பற்றி பேசுதுங்க, அவர்களுக்கு தான் எத்தனை சலுகைகள், இன்னும் என்னதான் வேணும் இந்த எழவெடுத்ததுங்களுக்கு!`` என்று சொல்வீரேயானாலும் மேலே படிக்கவும். 

யமுனா ராகவன்

Read more...

"ரிட்டர்ன்-டிக்கட்'டோடுதான் வந்திருக்கிறோம்.

வெள்ளி, 28 செப்டம்பர், 2012


சொன்னால் நம்பமாட்டீர்கள். பத்தொன்பதுஇருபது வயதுள்ளவர்களுக்கு இன்றைக்கு சர்க்கரை வியாதி இருக்கிறது. உடல் பருமன்அடுத்தவர்களுடன் ஒப்பிட்டுக் கொண்டு தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொள்ளுதல்தன்னம்பிக்கையின்றி இருத்தல்தூக்கமின்மைசில வகை ஆடைகளை உடுத்துவதற்காக வேண்டியும்சில போட்டிகளில் பங்கெடுப்பதற்காகவும்வீட்டில் நடக்க இருக்கும் விசேஷங்களுக்காகவும் தங்களின் உடலை வருத்திக் கொண்டுமெலிந்த தோற்றத்தை வலுக்கட்டாயமாகப் பெறுகிறார்கள். வளர் இளம் பெண்களுக்கு ஏற்படும் இந்த "சைஸ்-ஜீரோமேனியா ஆரோக்கியமானதில்லை!

இதற்கெல்லாம் நிறையக் காரணங்கள் இருக்கின்றன. பள்ளிகளில்குடும்பத்தில்சமூகத்தில் என இன்றைய தலைமுறைகள் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள். இந்தத் தேர்வுஅந்தத் தேர்வு என்று பள்ளிகளில் நெருக்குகிறார்கள் என்றால்வீட்டில், "உனக்கு சின்ன வேலையைக் கூட செய்வதற்கு பொறுப்பு இல்லை...என்பது போன்ற நெருக்குதல்கள். இதேநேரத்தில் சமூகத்திலும் தன் வயது நிலைகளில் இருப்பவர்களுக்குக் கிடைக்கும் விஷயங்கள் தனக்கு கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் வேறு அவர்களை அலைக்கழிக்கும்.
ஐம்பது சதவிகித வளர் இளம் பருவத்தினர் மதிய உணவை பள்ளிகல்லூரிகளில் இருக்கும் கேன்டீன்களிலேயே சாப்பிடுகின்றனர். இது அவர்களின் உடல்மன வளர்ச்சியைப் பெரிதும் பாதிக்கின்றது. துரித உணவு வகைகள்பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் குளிப்பானங்கள்பொரிக்கப்பட்ட உணவுகள்பீட்சாபர்கர் போன்ற நமது உணவுப் பழக்கத்தில் இல்லாத உணவுகளைச் சாப்பிடுகின்றனர். இதனால் அவர்களுக்கு செரிமானம் ஆவதில் நிறையப் பிரச்னைகள் ஏற்படுகின்றன. வளர் இளம் பருவத்தின் இந்தப் பிரச்னைகளைச் சமூகப் பிரச்னையாகப் பார்க்கவேண்டும். பள்ளியிலிருக்கும் ஆசிரியர்கள்குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள்சமூகத்தில் ஆரோக்கியமான உணவைக் குறித்து பிரசாரம் செய்பவர்கள் ஆகியோர் இணைந்து செயலாற்றுவதில்தான்வளர் இளம் பருவத்தினரின் ஆரோக்கியம் அடங்கியிருக்கின்றது. ஒரு குழந்தைக்கு தேவையில்லை என்று ஒதுக்கப்படும் நமது பாரம்பரியத்தில் இல்லாத உணவைபள்ளி வளாகத்தில் எந்தக் குழுந்தைகளும் சாப்பிடக் கூடாது என்னும் நிலைமையை உருவாக்கவேண்டும்.
சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருப்பதுதிடீரென்று தேவைக்கு அதிகமான உணவைபொறித்த சிப்ஸ் போன்றவற்றைச் சாப்பிடுவதால் உடல் பருமன் பிரச்னைக்கு வளர் இளம் பருவத்தினர் ஆளாகின்றனர். இதனால் அவர்களுக்கு குறட்டைப் பிரச்னையும் ஏற்படுகின்றது. பள்ளிகள் தோறும் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தையும்சுற்றுப்புறச் சுகாதாரம்புவி வெப்பமடைதல் போன்றவற்றை வலியுறுத்தும் "ஈகோ கிளப்'களை உருவாக்க வேண்டும்.
வீடுகளில் நிறையப் பேர் குளிர்சாதனப் பெட்டியை நேற்று மீந்துபோன சாம்பார்நேற்றைக்கு முந்தைய நாள் மீந்து போன ரசம் போன்றவற்றைப் பாதுகாக்கும் பெட்டியாக நினைக்கிறார்கள். இந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். ஆரோக்கியமான உணவுகளையும்பழங்களைக் கொண்டு தயாரிக்கும் விதவிதமான சாலட்களையும் ஸ்டோர் செய்யும் பெட்டியாகக் குளிர்சாதனப் பெட்டியை குடும்பத் தலைவிகள் மாற்றவேண்டும்.
மத்திய வயதினர்
முப்பத்தைந்து வயதிலிருந்து நாற்பத்து ஐந்து வயதுள்ளவர்களை மத்திய வயதினர் எனலாம். இந்த வயதில் இருப்பவர்கள் பிள்ளைகளின் படிப்புக்காகவசதியான வாழ்க்கைக்காகவீடு கட்டும் கனவுக்காக பணம் சம்பாதிக்க நேரம்காலம்தேசம் கடந்து ஓடிக்கொண்டிருப்பார்கள். இந்தப் பரபரப்பான சூழல் ஆண்களுக்கு மட்டும் கிடையாது. பணிபுரியும் பெண்களுக்கும் இத்தகைய சுமைகள் உண்டு. இப்படி தொடர்ந்து பணிபுரியும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் நாளடைவில் ஒருவிதமான சலிப்பு ஏற்படும். உணவில் நாட்டம் குறையும். இயந்திரத்தனமான இந்தப் பணிச் சுமையால் கணவன்மனைவிக்குள் நிறைய கருத்து வேறுபாடுகள்குழந்தைகளின் நலனில் அக்கறையின்மைஉணவில் நாட்டமின்மை போன்றவை ஏற்படும். இதனால் ரத்த அழுத்தம்சர்க்கரை நோய் போன்றவை தாக்கக் கூடும். முறையற்ற உணவுப் பழக்கவழக்கங்களால் உடல் பருமன் பிரச்னையும் அதைத் தொடர்ந்து இதய நோய் பிரச்னைகளும் ஏற்படும்.
இதைத் தவிர்ப்பதற்கு ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் வாரத்தில் இரண்டு மூன்று நாள்களுக்கு கிரிக்கெட்டென்னிஸ் போன்று ஏதாவது விளையாட்டுகளை விளையாடலாம். அல்லது நடைப்பயிற்சிநீச்சல் போன்ற பயிற்சிகளைச் செய்ய வேண்டும். வாரத்தில் ஒருநாள் குடும்பத்தினருடன் பொழுதைப் போக்கவேண்டும். வருடத்திற்கு இரண்டு முறையாவது நான்கு நாள்களுக்கு குடும்பத்தோடுஏதாவது புதிய இடங்களுக்கு சுற்றுலா சென்று வரவேண்டும். குடும்பத்தினரோடு நெருக்கத்தை வளர்க்கும். வருடம் முழுவதும் குடும்பத்தினரோடு அதிகம் நேரம் செலவிடாத இழப்பைஇந்தக் குறுகிய நாள்கள் ஈடுகட்டும்!
குடும்பத் தலைவியாக இருப்பவர்களுக்கு இந்த வயதில் குழந்தைகளின் மீது அதிகமான கவனம் இருக்கும். சிலநாட்கள்பிள்ளைகளுக்கும் கணவனுக்கும் போக மீதி இருந்தால்இரவில் ஓர் உருண்டை சோற்றை உண்டுவிட்டுதண்ணீர் குடித்துவிட்டு தூங்கிவிடுவார்கள். அதிகம் மீந்து போய் விட்டால்வீணாகப் போய்விடக் கூடாதே என்பதற்காக இருப்பதை எல்லாம் உண்டுவிட்டு படுப்பார்கள். இது பெரும்பாலான இந்தியப் பெண்களின் குணமாகவே ஆகிவிட்டது. இந்த இரண்டு முறைகளுமே தவறு. இந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். வருடத்திற்கு புதிதாக ஏதாவது ஒரு கலையைபுதிய சமையல் வகையைகேக் தயாரிப்பது... இப்படி ஏதாவது ஒன்றை கற்றுக் கொண்டு தங்களின் எண்ணங்களை புதுப்பித்துக் கொண்டே இருக்கவேண்டும்.
முதியவர்கள்
ரிடையர்ட் ஆனவர்களுக்கு வாழ்க்கையே முடிந்துவிட்டது என்பது போன்ற எண்ணம் ஏற்படும். இது தேவையில்லாதது. இன்னொரு அற்புதமான வாழ்க்கை உங்களுக்கு இருப்பதை உணருங்கள். இளம் தலைமுறைக்கு வாழ்க்கைக்கு தேவையான நன்னெறிகளை உங்களால்தான் பூரணமாக அளிக்கமுடியும். செடிக்கு நீர் ஊற்றுவதுஅருகிலிருக்கும் சேவை மையத்திற்குச் சென்று உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள். வீட்டிலிருக்கும் பேரப் பிள்ளைகளுடன் கார்ட்ஸ்,செஸ்பிரிட்ஜ் போன்ற விளையாட்டுகளை விளையாடுங்கள்.
இந்த விளையாட்டுகள் மூளையின் செல்களைப் புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும். உங்களுக்குள் அன்றாட வேலைகளில் ஒரு திட்டமிடுதலை வைத்துக் கொள்ளுங்கள். ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை அவசியம் செய்துகொள்ளுங்கள். "இறந்து விடுவோமோஎன்ற பயத்தோடு பல முதியவர்கள் இருக்கிறார்கள். எல்லோருமே "ரிட்டர்ன்-டிக்கட்'டோடுதான் வந்திருக்கிறோம். நாள்தான் தெரியாது. மாற்றத்திற்கு எப்போதும் தயாராக இருங்கள். இந்த வயசுக்கு அப்புறம் இதை நான் தெரிஞ்சு என்னாகப் போகுதுஎன்று நினைக்காதீர்கள். இதனால்தான் தலைமுறை இடைவெளி ஏற்படுகிறது. இருக்கும் வரை சந்தோஷமாக இருங்கள்.

Read more...

வறுமையை காரணம் காட்டி யாரும் படிப்ப பாதியில நிறுத்திடாதீங்க.!


சென்னை ஆவடி, காமராஜர் நகரை சேர்ந்த சிவசங்கர் பார்க் டவுனில், ஒரு பாத்திரக் கடையில் கூலித் தொழிலாளியாக வேலை பார்க்கிறார். இவரின் மூத்த மகன் தேவேந்திரன். விடுமுறை காலத்தில் கூலித் தொழிலாளியாக இருந்து, தன் கடும் உழைப்பால் இன்று டாக்டராகி இருக்கிறார். சினிமாவில் ஒரு பாடல் முடிவதற்குள் கோடீஸ்வரனாகும் காட்சிகள் வரும். ஆனால், தேவேந்திரனின் கதை நீண்ட கால கடும் உழைப்பில் உருவான ஒன்று. அது சினிமாவுக்கு பொருந்தாத கதை. "எங்க வீட்டு சூழ்நிலை எனக்கு நல்லா தெரியும். அப்பா கொண்டு வரும் பணத்துல, குடும்பத்தை நடத்துறதே ரொம்ப கஷ்டம். இதுல நான் என்னோட படிப்புக்காக அப்பாவ தொல்லைப்படுத்த விரும்பல. பத்தாவது வரைக்கும் வீட்டுல படிக்க வச்சாங்க. அதுக்கு மேல படிக்க வைக்க முடியாதுன்னு வீட்டுல சொல்லிட்டாங்க. அதனால பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிந்த உடனே, நான் அப்பா கூட வேலைக்கு போக ஆரம்பிச்சுட்டேன்' என்றார் தேவேந்திரன்.

வேலைக்கு போக ஆரம்பித்தாலும், அவருடைய படிப்பு ஆர்வம் குறையவில்லை, "அதுல வருகிற வருமானத்தை வச்சு பிளஸ் 1 வகுப்பு படிக்கலாம்னு நெனச்சிருந்தேன். ரிசல்ட்டு வந்துச்சு, நான் பள்ளிக்கூடத்தில் முதல் மார்க் வாங்கிருந்தேன். அதனால பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு கல்விச் செலவை அந்த பள்ளிக்கூடமே ஏத்துக்குச்சு. ஒரு வழியா என் படிப்பால, எங்க குடும்பத்துக்கு எந்த ஒரு சிரமமும் இல்லாத மாதிரி ஆகிருச்சு. அதனால ஓரளவுக்கு என்னோட தம்பியை நிம்மதியா படிக்க வச்சாங்க' என்று சொல்கிறார். "நான் பிளஸ் 2 தேர்வில், 1,160 மார்க் வாங்கி, ஸ்கூல்ல முதலிடம் வந்தேன். அதுக்கு பிறகு தான் எனக்கு பிரச்னைகளே ஆரம்பிச்சது' என, தன் சாதனை பயணத்திற்கு, "பிரேக்' போட்டார் தேவேந்திரன். பள்ளியில் முதல் மதிப்பெண் வாங்கிய தேவேந்திரனுக்கு, மேற்படிப்பு விண்ணப்பத்திற்குக் கூட, அவர் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் தான் உதவி இருக்கிறார்.

நுழைவுத்தேர்வு இருந்த அந்த காலக்கட்டத்தில், 300 மதிப்பெண்ணுக்கு 297.75 மதிப்பெண்கள் பெற்று, மருத்துவப் படிப்பு படிப்பதற்கு தேர்ச்சி பெற்றிருக்கிறார். ஆனால், கல்லூரி நுழைவுக்கட்டணம் கட்டுவதற்கு கூட, பணமின்றி பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமும், தனி மனிதர்களிடமும், உதவி கேட்டு கிடைக்காததால், எம்.ஜி.ஆர்., அறக்கட்டளையில் கல்விச் செலவிற்காக விண்ணப்பித்திருக்கிறார். செய்தித்தாள்களின் வழியாக, தேவேந்திரனின் நிலைமை அறிந்த எம்.ஜி.ஆர்., அறக்கட்டளை அவருடைய கல்விச் செலவு முழுமையும் ஏற்றுக் கொண்டது. தேவேந்திரனின் கஷ்டத்தை உணர்ந்த பல பேர், அவருக்கு உதவி செய்ய முன் வந்தனர். அந்த உதவிகளை எல்லாம் தன்னை போல, படிப்பிற்காக கஷ்டப்படும் சக நண்பர்களுக்கு பரிந்துரை செய்திருக்கிறார். ஐந்து ஆண்டுகள் கழித்து இன்று, தேவேந்திரன் எம்.பி.பி.எஸ்., மருத்துவ படிப்பில் முதுகலை படிப்பதற்கு, நுழைவுத்தேர்வு எழுத சத்திஸ்கர் சென்று வந்திருக்கிறார். "மேற்படிப்பு படிப்பதற்கு நிறைய செலவாகுமே, எப்படி சமாளிக்க போறீங்க' என கேட்டால், அவரிடமிருந்து நம்பிக்கையுடன் வந்து விழுகிறது பதில், "மருத்துவ மேல்படிப்பு எல்லாத்துக்கும் அரசு ஊக்கத் தொகை கொடுக்கும். அதனால எனக்கு எந்த கவலையும் இல்ல. என் வாழ்க்கையில நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்து சொல்றேன். கல்வி தான் என் எல்லா முன்னேற்றத்திற்கும் காரணம். வறுமையை காரணம் காட்டி யாரும் படிப்ப பாதியில நிறுத்திடாதீங்க. உங்கக்கிட்ட இருக்கிற வறுமையை விரட்டனும்னா கல்வியால தான் அது முடியும்!'

Read more...

சொந்தமாக சம்பாதிக்க இலவசத் தொழிற் பயிற்சி

வியாழன், 27 செப்டம்பர், 2012

படிப்பை இடையிலேயே விட்டுவிட்ட பெண்களுக்கும், பொருளாதார ரீதியில் பின்தங்கிய பெண்களுக்கும் இலவசமாகதொழிற்பயிற்சிகளை வழங்குகிறது சென்னையிலுள்ள டாக்டர் தர்மாம்பாள் அரசினர் மகளிர் பாலிடெக்னிக்

எனக்கு ஊசி நூல் பிடித்து சாதாரணமாக தைக்கக்கூடத் தெரியாது. ஆனால்  இன்று எல்லா வகையான ஆடைகளையும் தையல் இயந்திரத்தில் தைக்கிறேன். மூன்றே மாதத்தில் இந்த நிலையை நான் அடைந்திருக்கிறேன்...என்கிறார் ரமணி.

நான் பிளஸ் டூ வரை படித்திருக்கிறேன். தையல் மீதுள்ள ஆர்வத்தில் இங்கு வந்து சேர்ந்தேன். இப்போது நன்றாகத் தைக்கிறேன். சொந்தமாக தையல் கடை வைக்க விரும்புகிறேன்...” - இது காஞ்சனா.

நான் ஏழாவது வரைதான் படிச்சிருக்கேன். வீட்டு வேலை செய்துட்டு, கிடைக்கிற நேரத்துல தையல் கத்துட்டு இருக்கேன். பழைய துணிகள்ல கைப்பை செய்து விற்கிறேன். இங்க வந்ததுல இருந்து தையல்ல நிறைய கத்துக்கிட்டிருக்கிறேன்...என்கிறார் மாலினி.

இவர்களைப்போலவே பிரியங்கா, உஷா, பத்மாவதி, ராஜலட்சுமி, மகாலட்சுமி, சசிரேகா, மனோரஞ்சிதம் போன்ற பலரும் சென்னை தி.நகரில் உள்ள சாரதா மடத்தில் நடைபெறும் தையல் பயிற்சியை ஆர்வத்துடன் கற்று வருகிறார்கள்.

சென்னை தரமணியிலுள்ள டாக்டர். தர்மாம்பாள் அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியின் சமுதாய மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் தர்மாம்பாள் பாலிடெக்னிக் மட்டுமல்லாமல், மடிப்பாக்கம் பஞ்சாயத்து ஊராட்சி ஒன்றியம், கோவிலம்பாக்கம் பஞ்சாயத்து ஊராட்சி ஒன்றியம், தி.நகரிலுள்ள சாரதா மடம், சந்தோஷ்புரத்திலுள்ள சிறுவர் பூங்கா உள்ளிட்ட ஐந்து இடங்களில் இந்தப் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன . இந்தப் பயிற்சிகளில் சேர்ந்து பயனடைந்து வருபவர்களில் பெரும்பாலானோர், பொருளாதார ரீதியில் பின்தங்கிய நிலையில் இருக்கும் பெண்களே என்பது குறிப்பிடத்தக்கது.  இவர்களில் பலர் பள்ளிப் படிப்பை பாதியிலேயே விட்டவர்கள். படிப்பைத் தொடர முடியாத ஏழை எளியோர், மாற்றுத்திறனாளிகள், விதவைகள்.

இப்பெண்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த பல்வேறு வகையான இலவச சுயதொழில் பயிற்சிகளை அளித்து வருகிறது டாக்டர். தர்மாம்பாள் அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி. மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் சமுதாய மேம்பாட்டுத் திட்டத்திற்காக இக் கல்லூரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 2010ஆம் ஆண்டு முதல் இன்றுவரை சுமார் 1,800 பேர்களுக்கு பல்வேறு பயிற்சிகளை அளித்துள்ளதுஎன்கிறார், கல்லூரி முதல்வரும் திட்டத்துக்கான தலைமை ஒருங்கிணைப்பாளருமான ஆர்.சொர்ணகுமார்.

சமுதாய மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் தையல் வகுப்பு, எம்பிராய்டரி வகுப்பு, அழகுக்கலை பயிற்சி, பஞ்சு பொம்மை தயாரித்தல், பழரசம், ஊறுகாய் தயாரித்தல், கேக், பிஸ்கெட் தயாரித்தல், ஸ்கிரீன் பிரிண்டிங், மெழுகுவர்த்தி, அகர்பத்தி தயாரித்தல், வீட்டு ஒயரிங், கம்ப்யூட்டர் வகுப்புகள், பூங்கொத்துகள் தயாரித்தல், காளான் வளர்ப்பு, சணல் பொருட்கள் தயாரித்தல், புக் பைண்டிங் போன்றவற்றில் பயிற்சி அளிக்கிறோம்என்கிறார், ஒருங்கிணைப்பார் செல்வமணி.

எந்தப் பயிற்சிக்கு அதிகத் தேவை இருக்கிறதோ, அதற்கேற்ப பயிற்சி வகுப்புகள்  நடத்தப்படுகின்றன. இதற்கென ஒவ்வொரு பயிற்சி நிலையத்திலும் ஒரு பதிவேடு வைக்கப்பட்டுள்ளது. அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தாங்கள் பெற விரும்பும் பயிற்சி குறித்து இந்தப் பதிவேடுகளில் பதிவு செய்துவிட்டுப் போகிறார்கள். ஒவ்வொரு பயிற்சிக்கும் தேவையான எண்ணிக்கையில் ஆட்கள் சேரும்போது, அந்தப் பயிற்சி வகுப்பு தொடங்கப்படுகிறது.       

தையல், அழகுக்கலை, பஞ்சு பொம்மை தயாரித்தல், எம்பிராய்டரி, கேக், பிஸ்கெட், ஊறுகாய் தயாரித்தல் போன்ற பயிற்சிகளுக்கு பெண்களிடையே நல்ல வரவேற்புள்ளது. ஒரு பயிற்சி வகுப்பில் 20 முதல் 25 பேர் வரை சேர்த்துக் கொள்கிறோம். இந்தப் பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது. எனவே, ஏழ்மை நிலையிலுள்ளவர்களும், படிப்பைத் தொடர முடியாதவர்களும் பெரிதும் பயனடைகிறார்கள்என்கிறார், சமுதாய மேம்பாட்டுத் திட்ட ஆலோசகர் குமார சாமிராஜா. இந்தப் பயிற்சிகளில் சேர்ந்து பயனடைந்த பெண்களில் பலர் இன்று சுய தொழில் தொடங்கியும், சொந்தமாக கடைகள் வைத்தும் வாழ்க்கையில் முன்னேறி வருகின்றனர்.

இவர்களிடம் அழகுக்கலை பயின்ற மடிப்பாக்கத்தைச் சேர்ந்த எஸ்.சாந்தி, தற்போது சுயமுயற்சியோடு ஹேர் ஆயில் தயாரித்து விற்று, பணம் சம்பாதித்து வருகிறார்.

தர்மாம்பாள் பாலிடெக்னிக்கில் நான் பெற்ற பயிற்சியே இதற்கு அடிப்படைக் காரணம். அங்கு அழகுக்கலை பயின்றபிறகு, என் சொந்த முயற்சியால் பல்வேறு நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு இன்று ஸ்ரீ தர்ஸினி ஹேர்ஆயில்என்ற மூலிகை எண்ணெயைத் தயாரித்து விற்று வருகிறேன். பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும்கூட இந்த எண்ணெயைப் பயன்படுத்தி நல்ல பலனடைந்து வருகிறார்கள்என்கிறார், சாந்தி பெருமையுடன்.

இவரைப்போலவே தமிழ்ச்செல்வி, மஞ்சுளா போன்றோரும் தங்கள் இல்லங்களிலேயே அழகு நிலையம் வைத்து நடத்தி பணம் சம்பாதித்து வருகின்றனர். அலங்கார நகை தயாரித்தலில் பயிற்சி பெற்ற லோச்சனி, தற்போது அலப்பாக்கத்தில் சொந்தமாக அலங்கார நகை கடை துவங்கி சம்பாதித்து வருகிறார்.

எங்களிடம் தையல் பயிற்சி பெற விரும்பி வருபவர்களுக்கு 25க்கும் மேற்பட்ட ஆடைகளை உரிய அளவுகளில் தைக்கப் பயிற்சியளிக்கிறோம். அவர்கள் சரிவரக் கற்றுக்கொண்டார்களா என்பதை அறிய, எழுத்துத் தேர்வும் நடத்துகிறோம். மூன்று மாதங்களுக்கான இப்பயிற்சியை முடித்துச் செல்லும்போது அவர்களிடையே சொந்தமாகத் தொழில் தொடங்கி நடத்தும் அளவுக்கு தன்னம்பிக்கை வந்து விடுகிறது. பயிற்சியின்போது தையல் இயந்திரங்களின் செயல்பாடு, திடீரென அவற்றில் ஏற்படும் கோளாறுகளை சரிசெய்யும் முறை போன்றவை குறித்தெல்லாம் பயிற்சி கொடுக்கிறோம்என்கிறார், தையல் பயிற்சி ஆசிரியை ஜமுனா ராணி.

இங்கு வந்து பயிற்சி பெறுபவர்களுக்கு, பயிற்சி சான்றிதழ் வழங்கப்படுகிறது. எங்களின் சமுதாய மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் இலவசப் பயிற்சி பெற்ற பெண்கள் அனைவருக்கும் தொழில் முனைவோர் மேம்பாட்டுக்கான விழிப்புணர்வு முகாமையும் நடத்தியிருக்கிறோம். இதில் தொழில் தொடங்குவதற்குரிய வழிமுறைகள், மானியங்கள், வட்டி விகிதங்கள் போன்றவற்றை தொழில்துறை மூலமாகவும், பெண்களுக்கான சிறப்புத் திட்டங்கள் மூலம் கடன் பெறுவதற்கான ஆலோசனைகளையும், வங்கிக் கடன் வழங்குவதற்கான வழிமுறைகள் குறித்தும் நிபுணர்களைக் கொண்டு எடுத்துரைத்தோம். நாங்கள் வழங்கும் பயிற்சிகளைப் பெற எந்தவிதமான கல்வித் தகுதியும் தேவையில்லை. கணினிப் பயிற்சி பெறுவதற்கு மட்டும் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது தோல்வியடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்என்கிறார் குமாரசாமிராஜா.

விவரங்களுக்கு:
முதல்வர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்,
சமுதாய மேம்பாட்டுத் திட்டம்,
டாக்டர். தர்மாம்பாள் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி, தரமணி, சென்னை - 600 113.
தொலைபேசி : 044-22542013
நன்றி
ஜி.மீனாட்சி
புதிய தலைமுறை



Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets