மன அழுத்தமா? அதற்கு இதுதான் முக்கிய காரணம்
ஞாயிறு, 16 செப்டம்பர், 2012
நீங்கள் எப்பொழுதும் சோர்வாக
காணப்படுகின்றீர்களா? கண்களின் கீழ் கருவளையம் ஏற்படுகிறதா? அஜீரண கோளாரால்
அவதியுருகிறிர்களா? இதற்கு காரணம் ஒன்றே ஒன்றுதான்.
சமீபத்திய ஆய்வில், ஆப்பிரிக்கா மற்றும்
ஆசியாவில் 17% பேர் தூங்க முடியாமல் தவிக்கின்றனர் என்று தெரியவந்துள்ளது.
இதனால் மன அழுத்தம், பதற்றம் போன்றவை ஏற்பட காரணம் என்று உளவியல் ரிதியாக
கண்டறியப்பட்டுள்ளது.
பெரும்பாலும் இரவில் வேலை
செய்தல் இதற்கு முக்கிய காரணம். இரவு நேரங்களில் வேலை செய்வதால் ஒருவரின் பழக்க
வழக்கம் முற்றிலும் மாறுபடுகின்றது. இதனால் உடல் அதை ஏற்க மறுக்கின்றது. எனவே பக்க
விளைவுகள் அதிகம் ஏற்படுகின்றது.
அதுமட்டுமல்லாமல் இரவு நேரங்களில் அதிக நேரம் டிவி பார்ப்பது, செல்பேசியில் அதிக நேரம்
உரையாடுவது, இணையதளத்தில்
கேம்ஸ் விளையாடுவது போன்றவற்றை தொடர்வதால் மன அழுத்தம் சுலபமாக பற்றுகிறது. சரியான தூக்கமின்மையால் உடல்நிலை
பாதிக்கப்பட்டு மறுநாள் முழுவதும் மனச்சோர்வு,
மன அழுத்தம்,
எந்த செயலிலும் ஆர்வமின்மை போன்ற மாற்றங்கள்
ஏற்படுகின்றது.
சரியான உணவு பழக்கம், போதுமான தூக்கம் சரியான
முறையில் இருந்தால் மட்டுமே நம் அன்றாட கடமைகளை சரிவர பின்பற்ற முடியும்.