பகைவன் வீட்டிலும் பயப்படாமல் உண்ணலாம்
திங்கள், 17 செப்டம்பர், 2012
*மிளகில் உள்ள வேதிப் பொருள்கள் நம்மை
நோயிலிருந்து காக்கும். உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.
*மிளகு வீக்கத்தைக் குறைக்கும்; வாதத்தை அடக்கும்.
*பசியைத் தூண்டும்; சூட்டைக் குறைக்கும்.
*பொட்டாசியம், கால்சியம், ஸிங்க், இரும்புச்சத்து, வைட்டமின் உள்ளிட்ட சத்துகள் உள்ளன.
*உமிழ்நீரை அதிகம் சுரக்கச் செய்கிறது; இதனால் ஜீரணத்தன்மை அதிகரிக்கும்.
*உலகிலேயே தலைசிறந்த மாற்று மருந்து
மிளகுதான்.
*தென்னிந்தியாவில் கேரளா, மைசூர், கன்னியாகுமரி,
மேற்கு தொடர்ச்சி
மலைப்பகுதிகள், கிழக்குத் தொடர்ச்சி மலைகளிலும் மிளகு
பயிரிடப்படுகிறது.
*நச்சுக் கழிவுகளை வெளியேற்றும் தன்மை
மிளகில் அதிகம் உள்ளது.
நம் முன்னோர்கள் வெளியிடங்களில்
சாப்பிட்டுவிட்டு வரும்போது பத்து மிளகை வாயில் போட்டு சாப்பிடுவார்கள். வெளியில்
தயாரிக்கப்படும் உணவினால் ஏற்படும் நச்சுத்தன்மை அனைத்தையும் மிளகு
முறிந்துவிடும்.
எனவேதான் "பத்து மிளகு இருந்தால்
பகைவன் வீட்டிலும் உண்ணலாம்'
என்ற பழமொழி
பயன்படுத்தப்படுகிறது.