உங்கள் வருகைக்கு நன்றி

ஆச்சரிமூட்டும் ஆராய்ச்சி குறிப்புகள்

வியாழன், 20 செப்டம்பர், 2012


இஞ்சி தின்றால் இனிப்பு வியாதி குறையும்!
ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமானாலோ அதிக காலமாக சர்க்கரை வியாதியால் அவதிப்பட்டாலோ அன்றாட உணவில் இஞ்சி சேர்த்துக் கொள்வதால் சர்க்கரை வியாதியின் தீவிரம் குறைகிறது.
இந்த உண்மையை சிட்னி பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளர்கள் நிகழ்த்திய பரிசோதனைகளில் கண்டறிந்துள்ளனர். இஞ்சி உணவு மூலம் மனிதரின் உடலில் இன்சுலின் சுரக்கச் செய்ய முடியும்என்று மருந்துதுறைப் பேராசிரியர் பாசில ரோபோகாலிஸ் தெரிவிக்கின்றார்.
 தொழுகை, பிரார்த்தனை பயிற்சி செய்வதால், மூளையில் உள்ள நரம்புகள் ஒரே மாதத்தில் பலப்படுவதாக அமெரிக்காவில் நிரூபித்துள்ளனர்.
அமெரிக்காவிலுள்ள உடல்-மனம்-பயிற்சி நிறுவனம் பல்கலைக்கழக மாணவர்களை இரு பிரிவாகக் கொண்டு பரிசோதித்ததில் நான்கே வாரத்தில் சுமார் 11 மணிநேரப் பயிற்சியில் ஆராய்ந்து கண்டுபிடித்துள்ளனர்.
முப்பது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் இயற்கையாகக் கிடைத்த முட்டையைவிட தற்போது கிடைக்கும் முட்டை உணவு சத்து மிக்கதாக இருக்கிறது என்று பிரிட்டன் உடல்நலத்துறை மூலம் நடைபெற்ற ஆய்வுகளிலிருந்து தெரியவருகிறது.
செயற்கை முட்டைகளில் குறைந்த அளவிலான கொழுப்பு, கொலஸ்ட்ரல், கலோரிகளைக் கொண்டதாகவும் விட்டமின் டி அதிகமாக இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
தினசரி இரண்டு கப் காபி பருகுவது, பர்கின்சன் நோய் தோன்றுவதைக் குறைக்க உதவும். இங்கிலாந்தின் மாண்ட்ரீல் நகரில் உள்ள மக்ஜில் பல்கலைக்கழகம் செய்த ஆராய்ச்சியிலிருந்து கண்டறியப்பட்ட உண்மை இது.
அங்குள்ள பேராசிரியர் ரோனால்டு போஸ்டுமா காபியிலுள்ள காஃபைன் சத்து உடலில் குறைவுபடுவதற்கும் பர்க்கின்சன் நோய்க்கும் உள்ள தொடர்பு இன்னும் புரியவில்லை. ஆனால் அதற்கான நிரூபணங்களை விரைவில் அறிய முடியும்என்று லண்டனிலிருந்து வரும் டெய்லி மெயில் பத்திரிகையில் தெரிவித்துள்ளார்.
கொலஸ்ட்ரால் மிகுதியானதைக் குறைப்பதற்காக, அலோபதி மருத்துவர்கள் கொடுக்கும் ஒரு சில மருந்துகள் ஆஸ்த்மா நோயைத் தணிப்பதா மிஸிஸ்சிப்பி பல்கலைக்கழக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் உள்ள குயீன்ஸ் லேண்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பின்படி இருமல் வருவது வரவரது மனவிருப்பத்தினாலேதானாம்.
தொண்டைக் கமறலை உண்டாக்கக்கூடிய வகையில் மிளகில் தயாரிக்கப்பட்ட ஒருவித உணவைக் கொடுத்துப் பரிசோதித்ததில், இருமலுக்குக் காரணம் அவர்தம் மனத்தில் தோன்றிய எண்ணம்தானாம்.
பக்கவாதம் வரக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டா என்பதை எளிய முறையில் கண் பரிசோதனை ஒன்றைச் செய்வதன் மூலம் முன்கூட்டியே கண்டறியலாம் என்று ஸுரிச் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். கண்களிலிருந்து மூளைக்குச் செல்லும் ஒரு சில நரம்புகளின் தன்மை மாறுபாட்டினால், காலப்போக்கில் உண்டாகக்கூடிய பக்கவாதத்தை முன்னதாகவே அறிந்து கொள்ள முடியுமாம்.
அல்சீமர் எனும் மறதி நோயிலிருந்து விடுபடவும், வராமல் தடுக்கவும் காபி குடிப்பது நல்லது. தெற்கு ப்ளோரிடா பல்கலைக்கழகமும் மியாமி பல்கலைக் கழகமும் செய்த ஆராய்ச்சிகளிலிருந்து காபியில் உள்ள காஃபைன் எனும் ரசாயனச் சத்து ரத்தத்தில் சேர்வதால் டிமென்டியா எனும் குறைபாடு நேர்வது தடுக்கப்படுகிறது. எனவே மறதி நோயிலிருந்து தடுக்கப்பட முடியும் என்று கண்டறிந்துள்ளனர்.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets