உங்கள் வருகைக்கு நன்றி

இது முஸ்லீம் நாடுகளில் அல்ல நமது இந்தியாவில்தாங்க

புதன், 26 செப்டம்பர், 2012


ஆபாச நிகழ்வுகளை தவிர்ப்பதற்காக
பெண்களுக்கான ஜவுளி பிரிவில் ஆண்கள் பணியாற்ற தடை!
ஜவுளிக்கடைகளில் பெண்களுக்கான உடைகள் பிரிவில்  பெண் ஊழியர்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும். ஆண்கள் பணியாற்றக்கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பண்டிகை நெருங்கும் நிலையில் ஜவுளி வாங்குவதற்கு இப்போதே மக்கள் தயாராகிவிட்டனர். பொதுமக்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் ஜவுளி நிறுவனத்தாரும் போட்டி போட்டு பல்வேறு பகுதிகளிலிருந்து ஜவுளிகள், ரெடிமேட் வகைகளை கொள்முதல் செய்து வருகின்றனர். சிலர் தள்ளுபடியும் அறிவித்துள்ளனர். 
இந்நிலையில் ஜவுளி கடைகளில் பெண்களுக்கான பிரிவில் பெண்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும். கண்களால் பார்த்து அளவு சொல்லி  விற்பனை செய்யும் வகையில் ஆண்கள் யாருமே பணியாற்ற கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


இது குறித்து மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவு: ஜவுளி கடைகள் மற்றும் ரெடிமேட் கடைகளில் பெண்களுக்கான ஜட்டி, பிரா, சிம்மீஸ், பெட்டிகோட் போன்ற துணி வகைகளை விற்கும் பிரிவு இருந்தால் அந்த பிரிவில் எந்த சூழ்நிலையிலும் ஆண்கள் பணியாற்றக்கூடாது. சில நிறுவனங்களில் ஆண்கள் பணியாற்றுகின்றனர். அவர்கள்வரும் பெண் வாடிக்கையாளரிடம் ஆபாசம் கலந்து கூறுவதோடு, அவர்களின் உடலமைப்பை உற்றுப்பார்த்து அளவு சொல்லி துணிகளை கொடுக்கின்றனர். 

இந்த செயலால் பெண்கள் மிகவும் மன உளைச்சல் அடைகின்றனர்.  சில கடையில் ஆண் விற்பனையாளரே குறிப்பிட்ட சைசில் உள்ளாடை கொடுத்து விடுகிறார். பெண் வாடிக்கையாளர் வீட்டுக்கு சென்று பயன்படுத்தும் போது பொருந்தாமல் போய்விடுகிறது. இது போன்ற சூழ்நிலைகளை தவிர்க்கவும், கடைகளில் ஆபாச நிகழ்வுகளை தவிர்க்கவும் பெண்களுக்கான துணிகள் விற்கும் பிரிவில் கட்டாயம் பெண் ஊழியர் மட்டுமே இருத்தல் வேண்டும். 

இது தவிர, சம்பந்தப்பட்ட பெண்கள் பிரிவு கடையின் குறிப்பிட்ட பகுதியில் இருத்தல் வேண்டும். பொதுவான ஜவுளிகளோடு பெண்களுக்கான ரெடிமேட் துணிகள் இருத்தல் கூடாது. பெண்களுக்கான பிரிவு முழுக்க முழுக்க தனியாக இருக்க வேண்டும். அந்த பிரிவில் டிரையல் ரூம் கட்டாயம் இருத்தல் வேண்டும். கடைக்கு வரும் வாடிக்கையாளர் சுடிதார், மிடி அல்லது உள்ளாடைகள் வாங்கினால், அவருக்கு பொருத்தமாக இருக்கிறதா என்பதை அவர் போட்டுப்பார்த்து சரி செய்து கொள்ளும் வகையில் டிரையல் ரூம் இருத்தல் வேண்டும்.

அதில் ஆளுயுர கண்ணாடி, உள்பக்கம் தாழ் போடும் வசதி இருத்தல் வேண்டும். எந்த சூழ்நிலையிலும் டிரையல் ரூமில் கேமரா பொருத்தக்கூடாது. டிரையல் ரூமுக்கு பெண் வாடிக்கையாளர் செல்லும் போது கடையின் பெண் ஊழியர் ஒருவரும் அவருடன் சென்று அவருக்கு உதவி செய்ய வேண்டும். டிரையல் ரூமை விட்டு வாடிக்கையாளர் வெளியே வரும் வரை டிரையல் ரூமில் கடையின் பெண் ஊழியர் உடன் இருக்க வேண்டும். 

எந்த சூழ்நிலையிலும் கடையில் 18 வயதுக்குட்பட்ட பெண்களை பணியமர்த்தக்கூடாது. பண்டிகை காலம் நெருங்குவதால் தேவையற்ற சர்ச்சைகளை தவிர்க்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அனைத்து விற்பனையாளர்களும் இந்த விதிகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். இந்த உத்தரவு செப்டம்பர் 11 ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இவ்வாறு மத்திய அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரையல் ரூம் கட்டாயம் இருக்க வேண்டும்

சம்பந்தப்பட்ட பெண்கள் பிரிவு கடையின் குறிப்பிட்ட பகுதியில் இருத்தல் வேண்டும். பொதுவான ஜவுளிகளோடு பெண்களுக்கான ரெடிமேட் துணிகள் இருத்தல் கூடாது. பெண்களுக்கான பிரிவு முழுக்க முழுக்க தனியாக இருக்க வேண்டும். அந்த பிரிவில் டிரையல் ரூம் கட்டாயம் இருக்க வேண்டும்.
நன்றி - தினகரன்

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets