ஆசிரியை இப்படியா நடந்து கொள்வது?
ஞாயிறு, 16 செப்டம்பர், 2012
பள்ளியில்
எல்லோர் முன்னிலையிலும் ஹோம் ஒர்க் செய்யாத, லீவு
போட்ட மாணவ, மாணவிகளை
ஆசிரியர்கள் கேவலமாக திட்டுவதும் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் தற்கொலையில்
ஈடுபடுவதும் அதிகரித்துள்ளது. பெற்றோர் கஷ்டப்பட்டு தங்கள் பிள்ளைகளை படிக்க
வைக்கின்றனர். பிள்ளைகளும் பெற்றோர் கஷ்டம் உணர்ந்து நன்றாக படிக்கிறார்கள்.
அப்படி இருக்கும்போது, வகுப்புக்கு
வராத மாணவியை பார்த்து யாருடன் சுற்றிவிட்டு வருகிறாய்? எனக் கேட்டு திட்டியிருக்கிறார்
பெண் விரிவுரையாளர். அவமானமடைந்த மாணவி
தூக்குப் போட்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். காஞ்சிபுரம் மாவட்டம்
மேலகோட்டையூரில் தமிழ்நாடு உடற்பயிற்சி விளையாட்டு பல்கலைக்கழகம் உள்ளது. இங்குள்ள
விடுதியில் தங்கி நாகை மாவட்டத்தை சேர்ந்த கலியமூர்த்தி என்பவரின் மகள்
கிருஷ்ணவேணி பிபிஎட் படித்து வருகிறார். கிருஷ்ணவேணி, இரண்டு நாள் வகுப்புக்கு
செல்லவில்லை. மறுநாள் காலை வகுப்புக்கு சென்றார். விரிவுரையாளரும் விடுதி
காப்பாளருமான லில்லி புஷ்பம், கிருஷ்ணவேணியை
வகுப்புக்குள் அனுமதிக்காமல் வெளியே நிறுத்தியுள்ளார். பின்னர், மற்ற மாணவிகள் முன்னிலையில் ‘யாருடன் சுற்றிவிட்டு வருகிறாய்‘ என்று கேட்டு அசிங்கமாக
திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் கிருஷ்ணவேணி மன உளைச்சல் அடைந்தார். ‘‘அப்பா, அம்மா மிகவும் கஷ்டப்பட்டு என்னை
படிக்க வைக்கிறார்கள். பெற்றோரை சந்தோஷமாக வைக்க வேண்டும் என்பதற்காக நன்றாக
படித்து வருகிறேன். என்னைப் போய் ஆசிரியர் அசிங்கமாக திட்டிவிட்டாரே‘‘ என்று தோழிகளிடம் சொல்லி
அழுதுள்ளார். இந்நிலையில், அதிகாலை
நேரத்தில் மாணவி ஒருவர் தற்செயலாக எழுந்தபோது, விடுதி
அறையில் உள்ள மின் விசிறியில் துப்பட்டாவால் தூக்குப் போட்டு கிருஷ்ணவேணி
உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அதை பார்த்த மாணவி அலறினார். சத்தம் கேட்டு, அனைத்து மாணவிகளும் ஓடிவந்தனர்.
துப்பட்டாவை அறுத்து கிருஷ்ணவேணியை காப்பாற்றினர். அவரை தனியார் மருத்துவமனையில்
சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
அடுத்தவரின் நிலைமை, கஷ்டம், வலியை நாம் உணர முடியாது. வகுப்புக்கு வராததற்கு எத்தனையோ காரணம் இருக்கலாம். அதை உணராமல் விடுதியில் தங்கி படிக்கும¢ மாணவிகளுக்கு தாய் போல் இருக்க வேண்டிய பெண் காப்பாளர், கேவலமாக பேசி மாணவியின் மனதை புண்படுத்தியிருக்கக் கூடாது. அந்த வேதனையில் தவறான முடிவை எடுத்திருக்கிறார் மாணவி. நல்லவேளையாக பிழைத்துக் கொண்டார். பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது என்பதை மாணவியும் புரிந்து கொள்ள வேண்டும்.