குழந்தைகளை பொருத்தவரை நீங்கள் தான் முதலில் ஹீரோ
சனி, 29 செப்டம்பர், 2012
பெற்றோர்களின் கவனத்திற்கு
இப்போது நமது உணவு முறை மாற்றத்தினால் நமது குழந்தைகள் சீக்கிரமே பெரியவர்களாகி
விடுகின்றனர் அதிலும் பெண் குழந்தைகள் பெரும்பாலும் எட்டு முதல் பனிரெண்டு வயதுக்குள் பெரிய
பெண்களாகி விடுகின்றனர் வயதில் சிறியவர்களாக இருந்தாலும் உருவத்தில் பெரியவர்களாக
இருக்கின்றனர் சில இடங்களில் பார்த்திருக்கிறேன் குழந்தைகள் தானே என்று சிலவிதமான
உடைகளை அணிவித்து விடுகிறார்கள் பெற்றோர்களை முதலில் புரிந்துகொள்ளுங்கள் உங்கள்
குழந்தையின் மீது உங்களுக்குள்ள கண்ணோட்டமும் மற்றவர்களின் கண்ணோட்டமும் ஒரே
மாதிரியாய் இருக்காது அன்றாடம் செய்திகளில் பார்க்கத்தானே செய்கிறோம் குழந்தைகளும்
பாலியல் தொல்லைக்கு உள்ளாவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
மேலும் நம் குழந்தைகளுக்கு நாம் ஒரு முன்மாதிரியாக இருக்கவேண்டும் உங்களுக்கு தெரியும்தானே உங்கள் குழந்தைகளை பொருத்தவரை நீங்கள் தான் முதலில் ஹீரோ உங்களிடமிருந்துதான் குழந்தைகள் நல்ல விஷயங்களையும் கெட்ட விஷய்ங்களையும் கற்றுக்கொள்கின்றனர்.