ஆக்கமும்... அழிவும் தான் அணுசக்தி
செவ்வாய், 30 அக்டோபர், 2012
பூமியில்
கிடைக்கும் கனிமப்பொருட்களில் யுரேனியம், ப்ளூட்டோனியம்
முக்கியமானவை. இவை தான் அணுசக்திக்கு மூலப்பொருட்கள். அணுஉலையில் யுரேனியத்தை
செலுத்திய பின், அதில் இருந்து அணுக்கூறுகள் பிளக்க, பிளக்க முடிவில்லா வெப்ப சக்தி உருவாகிறது. இதில் இருந்து தான் மின்சாரமும் தயாரிக்கப்படுகிறது; அணு ஆயுதத்துக்கு தேவையான சக்தியும் கிடைக்கிறது.
அணுஉலையில்
யுரேனியத்தை செலுத்தியவுடன், அணுவை பிளப்பதால் மூன்று வித எனர்ஜி அதாவது
எரிசக்தி கிடைக்கிறது. இதைத்தான் ‘பிஷன் ப்ராடக்ட்ஸ்’ எபர். 1. கைனடிக் எனர்ஜி. 2. காமா கதிரியக்க சக்தி. 3. ப்ரீ நியூட்ரான்ஸ். இவை தான் மின்சாரம் முதல்
அணுகுண்டு வரை தயாரிக்க கைகொடுக்கின்றன.
அணுஉலையில் அணுவை
பிளக்கும் யுரேனியம், ப்ளூட்டோனியம் போன்றவை கம்பிகளாக இருக்கும்.
இவற்றில் வெளிப்படும் வெப்பம் அதிகரிக்கும் போது தான் ஆபத்தே. இதை கட்டுக்குள்
வைத்திருப்பது, இதில் பொருத்தப்பட்டுள்ள ‘கோர்’ என்ற சாதனம்.
இந்த வெப்பத்தை
தணித்து கட்டுக்குள் வைக்கவே, கனநீர், திரவ சோடியம், ஹீலியம் போன்ற ஏதாவது ஒன்று செலுத்தப்படுகிறது.
கட்டுக்குள் உள்ள
வெப்பசக்தி, அடுத்து டர்பைன் வழியாக செல்லும் போது தான்
மின்சாரம் தயாரிக்கும் பணி நடக்கிறது.
மின்சாரம்
தயாரிக்கப்பட்டதும், வழக்கமான மேல்நிலை கம்பிகள் மூலம் கப்பலுக்கும்
கூட மின்சாரம் சப்ளை செய்யப்படுகிறது. நீர்மூழ்கிக்கும் கூட ஒளியூட்டுகிறது.
ஆக்கமும்...
அழிவும் தான் அணுசக்தி
அணுவை துளைக்க, துளைக்க அதன் சக்தியில் ஆக்கமும் இருக்கிறது; அழிவும்
இருக்கிறது. மின்சாரம் தயாரிப்பது, விமானத்தை இயக்க
பயன்படுவது, நீர்மூழ்கிகளை இயக்குவது, கேன்சர் சிகிச்சைக்கு உதவுவது, மருத்துவ இமேஜிங்
பரிசோதனைகளுக்கு ஐசோடோப்களை உருவாக்குவது ஆகியவை ஆக்கமாக சொல்லலாம்.
அழிவு என்ன
தெரியுமா? அணு குண்டு மற்றும் அணு ஆயுதங்கள் தான். ஒரு
நகரத்தையே அழிக்க ஒரு அணுகுண்டு போதும். அணு உலையில் ஏற்படும் விபத்தினாலும்
கதிர்வீச்சு மூலம் அழிவு ஏற்படும்.
எப்படி
செயல்படுகிறது?
ரியாக்டரின் மையப்
பகுதியில் கோர் கம்பிகளை சுற்றி நீர் இருக்கும். அதற்கு அதிக நீர் தேவை காரணமாகவே
அணுமின் நிலையங்கள் பெரும்பாலும் ஆறு, கடலோரப்
பகுதிகளில் அமைக்கப்படும்.
அணுக்களை
பிளக்கும்போது ஏற்படும் வெப்பம் ஒரே முறையாக வெளியாகாமல் தடுக்க கருவிக்குள் 2 அடுக்கு சுற்றுச்
சுவர்கள் இருக்கும். இந்த நடைமுறையில் டர்பைன், ஜெனரேட்டரும்
முக்கிய பங்கு வகிக்கும். பயங்கர சக்தியுடன் அணுவை பிளக்கும்போது கோர் கம்பிகளில்
வெளிப்படும் வெப்பத்தால் நீர் கொதித்து ஆவியாகி, அதனுடன் டர்பைன்
செயல்பட்டு ஜெனரேட்டரில் மின்சக்தியாக மாற்றப்படும்.
கதிர்வீச்சு
ஆபத்து என்னென்ன?
அணுஉலை
கதிர்வீச்சு கசிந்து, உலையை குளிர்விக்க பயன்படுத்தப்பட நீரில்
பரவும். அதன் மூலம் கடல்நீரில் பரவும்; காற்றில் பரவும்; மண்ணில் இறங்கி, செடி, கொடி, பயிர்களை அழிக்கும். வானில் நீராவியாக பரவி, மழை தூறலில் கூட
நம் தலையில் விழும். இப்படி அணுக்கதிர் ஆபத்துக்கு அளவே கிடையாது.
சாதா காய்ச்சல், இருமலில் தான் ஆரம்பிக்கும்; காசநோய் முதல் கேன்சர் வரை வரும். உறுப்புகளை
ஊனமாக்கும். காலம் காலத்துக்கு பாதிப்பு நீடிக்கும்.
ரஷ்ய செர்னோபில்
விபத்து நடந்து 25 ஆண்டாகியும் இன்னும் அதன் பாதிப்புக்கு அளவே இல்லை.
குட்டிப்பையன்...
குண்டு மனிதன்
1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதியை
யாராலும் மறக்க முடியாது; ஆம், இரண்டாம்
உலகப்போரின் இறுதிக்கட்டத்தில், நடந்த பயங்கரம் அது. ஜப்பானிய நகரான ஹிரோஷிமா
மீது யுரேனியம் சார்ந்த துப்பாக்கி வடிவ அணுகுண்டை போட்டது அமெரிக்கா. இந்த
குண்டுக்கு பெயர் ‘லிட்டில் பாய்.’
மூன்று நாளுக்கு
பின், அதே நாட்டின் நாகசாகி நகரில் அமெரிக்கா
மீண்டும் போட்டது. இந்த குண்டுக்கு பெயர் ‘பேட் மென்.’ அப்போது ஏற்பட்ட அழிவுகளுக்கு பின் தான், அணுவை
மின்சாரத்துக்கு மட்டும் பயன்படுத்த உலக நாடுகள் உறுதி பூண்டன. நிலைத்ததா அந்த
உறுதி...?
யாரிடம் தான்
இல்லை அணுகுண்டு?
ஐம்பது ஆண்டுகளை
கடந்தாலும் ஹிரோஷிமா, நாகசாகி அழிந்த கதையை இன்னும் மறக்கவில்லை பல
நாடுகளும். ஆனாலும், குண்டுபோட்ட அமெரிக்காவில் ஆரம்பித்து, சீனா, பாகிஸ்தான், பிரான்ஸ், வடகொரியா, இஸ்ரேல், ரஷ்யா, பிரிட்டன் மட்டுமல்ல இந்தியாவும் அணு குண்டு தயாரிக்கும் திறன் படைத்துள்ளன. இதுவரை இந்த
நாடுகள் சேர்ந்து 2 ஆயிரம் முறை பூமிக்கடியில் அணுகுண்டு சோதனைகளை நடத்தியுள்ளன.