உங்கள் வருகைக்கு நன்றி

மின்சார வாரியத்தின் அட்வைஸ்ட் டிப்ஸ் சில...

வியாழன், 25 அக்டோபர், 2012


பருவமழை காலங்களில் மின்சாரம் தாக்காமல் இருக்க என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்  
1.      மின் விபத்துகளை தவிர்க்க மின்சார ஒயரிங் வேலைகளை அரசு உரிமம் பெற்ற மின்ஒப்பந்தகாரர்கள் மூலம் செய்வதுடன், ஐ.எஸ்.ஐ. முத்திரை பெற்ற மின்சாதனங்கள் பயன்படுத்த வேண்டும்.
2.      மின்சார பிளக்குகளைப் பொருத்துவதற்கு முன்னரும், எடுப்பதற்கு முன்னரும் சுவிட்சை ஆப் செய்து விட வேண்டும்.
3.      குளிர்சாதனப்பெட்டி, கிரைண்டர் போன்ற வீட்டு உபயோக மின்சாதனங்களுக்கு மூன்று பின் சாக்கெட் உள்ள பிளக்குகளை பயன்படுத்துவது, ஈ.எல்.சி.பி. என்ற மின்கசிவு கருவியை மெயின் ஸ்விட்ச் போர்டில் பொருத்துவது, உடைந்த மின்சாதனங்களை உடனடியாக மாற்ற வேண்டும்.
4.      மேல்நிலை மின்கம்பிகளுக்கு அருகில் கேபிள் டி.வி. வயர்களை கட்டுவதை தவிர்க்க வேண்டும்.
5.      எர்த் பைப் பக்காவாக போடுவது, 5 ஆண்டுக்கு ஒரு முறை வீட்டின் ஒயரிங்குகளை மாற்றுவது,
6.      மின்சார கம்பத்திற்கு போடப்பட்ட ஸ்டே கம்பி மீது துணி கயிறு கட்டுவது, கால்நடைகளை கட்டுவது, விளம்பர பலகை வைப்பது, மழைகாலங்களில் மின்சார கம்பங்களுக்கு அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
7.      மின்கம்பிகள் அறுந்து விழுந்தால் உடனடியாக மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் அளிக்க வேண்டும். அத்துடன் ஈரமான இடங்களில் சுவிட்சுகள் பொருத்துவது, மின் சர்க்யுட்டை அளவுக்கு மீறி பளு ஏற்றுவதை தவிர்க்க வேண்டும்.
8.      தீ விபத்து ஏற்பட்டால் தண்ணீர் விட்டு அணைக்காமல், தீயணைப்பான்களை பயன்படுத்துவது,
9.      இடி, மின்னலின் போது வெட்ட வெளி, குடிசை, மரத்தின் அடியிலோ, பஸ் நிறுத்த நிழற்குடையின் கீழே தஞ்சம் புகாமல், கான்கிரீட் கூரையிலான பெரிய கட்டிடம், வீடு போன்ற பெரிய கட்டிடங்களிலோ, உலோகத்தால் மூடப்பட்ட பஸ், கார், வேன் போன்ற வாகனங்களில் தஞ்சமடையுங்கள்.
10.  இடிமின்னலின் போது டிவி, மிக்ஸி, கிரைண்டர், கம்ப்ïட்டர் மற்றும் தொலைபேசிகள் பயன்படுத்துவதை தவிர்க்கலாம். 

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets