போலீசாரின் எச்சரிக்கை நோட்டீஸ் !
வியாழன், 25 அக்டோபர், 2012
வீட்டின்
முன்பக்க கதவில், "டோர்
லென்ஸ்' "டோர் லாக் சங்கிலி' இணைக்க வேண்டும். அருகிலுள்ள வீட்டாரிடம்
நன்றாக பழகி, அவர்களது
போன் எண்களை குறித்து வைத்திருங்கள். அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷன் மற்றும் அவசர உதவி
எண்களை தெரிந்து வைத்திருங்கள். "டிவி', கேபிள்
கனெக்ஷன், பிரிட்ஜ், வாஷிங்
மெஷின் ரிப்பேர் என வரும் நபர்களை நன்றாக விசாரித்து, உறுதிப்படுத்திய பின்னரே, வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டும்.அவ்வாறான
நபர்கள் மீது சந்தேகம் வந்தால், உடனே
போலீசை தொடர்பு கொள்ள வேண்டும். நன்றாக அறிமுகமானவர்களை, அதுவும் போட்டோ, நிரந்தர முகவரியை வாங்கிய பின்னரே வீட்டு
வேலைக்கு அமர்த்த வேண்டும். நீங்கள் தனியாக இருக்கும் மற்றும் வெளியூருக்கு
செல்லும் விவரங்களை யாரிடமும் சொல்லாதீர்கள். வெளியூருக்கு செல்லும்போது, அருகிலுள்ள ஸ்டேஷனுக்கு சென்று, "லாக்ட் ஹவுஸ்' என்ற ரெஜிஸ்டரில் கையெழுத்திட்டு, மொபைல் எண்ணை பதிவு செய்து செல்ல
வேண்டும். வாகனங்களில் இருந்து வீட்டுக்குள் மற்றும் பிற இடங்களுக்கு செல்லும்போது, மறக்காமல் கைப்பை எடுத்துச் செல்லுங்கள்.
தங்க, வெள்ளி நகைகள், ரொக்கப்பணத்தை வீட்டில் வைக்காமல் வங்கி
லாக்கரில் பாதுகாப்பாக வையுங்கள். அன்னிய மற்றும் சந்தேக நபர்களை எக்காரணத்தை
கொண்டும் வீட்டுக்குள் அனுமதிக்காதீர். இரவு நேரங்களில் வீட்டை சுற்றியும், கடைகளின் முன்புறமும்
விளக்குளை ஒளிரவிடுங்கள். உங்கள் பகுதியில் ஏதேனும் பேன்ட் பிட், ஜமுக்காளம், மெத்தை
விற்பவர்கள், தங்கம், வெள்ளி முலாம் பூசுபவர்கள்போல், எவரேனும் நடமாடினால் வீட்டுக்குள்
விடாதீர். போலீசுக்கு போன் செய்யுங்கள். கூரியர், பார்சல்
வந்துள்ளது; பரிசு
விழுந்துள்ளது என யாராவது கதவை தட்டினாலும், சரியாக
விசாரிக்காமல் திறக்காதீர். திருட்டு, சந்தேக
நபர்கள் குறித்து தகவல் தெரிவிக்க, ஸ்டேஷன் எண்களில் தொடர்பு
கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.