உங்கள் வருகைக்கு நன்றி

கிளிஞ்சலில் கிடைக்கும் கடலளவு லாபம்!

செவ்வாய், 30 அக்டோபர், 2012


சுவரை அலங்கரிக்கும் ஓவியத்தில் தொடங்கிதிரைச்சீலைபூச்சாடிடேபிள் அலங்காரம்... இன்னும் கற்பனை கூட செய்து பார்த்திராத பல பொருள்கள்அத்தனையும் கிளிஞ்சலில் செய்தவை! நீலாங்கரையில் இருக்கும் ஷம்சியா பானுவின் வீட்டினுள் எந்தப் பக்கம் திரும்பினாலும் கிளிஞ்சல் மயம்! பயோ கெமிஸ்ட்ரி பேராசிரியையாக இருந்து ஓய்வுபெற்ற ஷம்சியா பானுவுக்கு இன்று முழுநேர வேலையே கிளிஞ்சல் கலைப் பொருட்கள் உருவாக்குவதுதான்.


‘‘எங்க வீடு இருக்கிறது நீலாங்கரை ஏரியாவுல கடற்கரை ஓரம். பீச்சுக்கு போகும்போதெல்லாம் கிளிஞ்சல் சேகரிக்கிறது வழக்கம். ஓவியமும்கைவினைக் கலைகளும் தெரியும். அதை அடிப்படையா வச்சு கிளிஞ்சல்கள்ல கலைப் பொருட்கள் செய்ய ஆரம்பிச்சேன். கற்பனை சக்தி இருக்கிறவங்கஇதுல விதம் விதமா முயற்சி பண்ணலாம்.  பிசினஸா பண்ண நினைக்கிறவங்க துணிஞ்சு செய்யலாம்’’ என்கிற ஷம்சியா,கற்றுக் கொள்ள விரும்புவோருக்கு வழிகாட்டுகிறார்.

என்னென்ன தேவைமுதலீடு?
‘‘கிளிஞ்சல்கள்தான் அடிப்படை. கடற்கரைகள்ல சேகரிக்கலாம். வண்ணாரப்பேட்டைல மொத்த விலைக் கடைகள்ல எல்லா நாட்டு கிளிஞ்சல்களும் கிடைக்கும். ஒட்டறதுக்கு பசைஅலங்கரிக்க மணிகண்ணாடிமுத்து மாதிரியானவைகயிறு... அவ்வளவுதான். ரூ.2ஆயிரம் முதலீடு போதுமானது.’’

என்னென்ன செய்யலாம்என்ன ஸ்பெஷல்?
‘‘பேப்பர் வெயிட்பூச்சாடிசுவர் அலங்காரம்தோரணம்கண்ணாடிநகைப் பெட்டிஃப்ரிட்ஜ் மேக்னட்... இன்னும் என்ன வேணாலும் பண்ணலாம். கிளிஞ்சல் பொருட்கள் 50 வருஷம் ஆனாலும் அப்படியே இருக்கும். கலர் மாறாது. தூசி படிஞ்சு அழுக்கு ஆகாது.’’

விற்பனை வாய்ப்புலாபம்?
‘‘குழந்தைகள் முதல் பெரியவங்க வரைக்கும் எல்லா வயசுக்காரங்களுக்கும்எல்லா விசேஷங்களுக்கும் தரமுடியற அன்பளிப்புகளை இதுல பண்ண முடியும். குட்டி பூவை 40ரூபாய்க்கு விற்கலாம். சுவர் அலங்காரம் ஆயிரம் ரூபாய். ஒரு பாக்கெட் கிளிஞ்சலோட விலை 60 ரூபாய். நாம பண்ற பொருளுக்கேத்தபடி தேவை மாறும். கைவினைப் பொருள் கண்காட்சிகள்அன்பளிப்புப் பொருள்கள் விற்கிற கடைகள்ல நல்லா விற்பனையாகும். கிளிஞ்சல் வச்சா வீட்டுக்கு நல்லதுங்கிற நம்பிக்கையிலசாதாரணமாகவே ஏதாவது ஒரு கிளிஞ்சல் பொருளை வாங்கி வீட்ல வைக்கிறாங்க மக்கள். 50 சதவீத லாபம் நிச்சயம்.’’

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets