சோம்பேறித்தனம் ஆபத்தானதா ?
திங்கள், 22 அக்டோபர், 2012
சோம்பேறித்தனம் என்பது ஒரு
ஒழுங்கீனமாக மட்டுமல்லாமல், மனிதனை நோயாளியாக்கும்
அபாயம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
சோம்பேறியாக இருக்கும் நபர்,
சுறுசுறுப்பாக
இயங்கும் நபரை விட அதிக நோய்த்தன்மை கொண்டவராக இருப்பதாக மருத்துவ ஆய்வு
கூறுகிறது.
அதாவது, சோம்பேறியாக இருப்பவர்கள்
உடலுக்குத் தேவையான போதுமான சத்துணவை உண்ண மாட்டார்கள். உடல் உழைப்பு இல்லாததால்
அவர்களுக்கு பசிக்கும் ஆற்றல் குறைவதே இதற்குக் காரணம்.
மேலும், சோம்பி
உட்கார்ந்திருப்பதால், ஒன்று நொறுக்குத்
தீணிகளுக்கு அடிமையாக இருப்பார்கள். இதனால் அவர்களது உடல் பருக்கும் அபாயம்
உள்ளது.
சில தேவையற்ற பழக்கவழக்கங்கள்,
புகைத்தல், நகம் கடித்தல், எதையாவது
மெல்லுதல் போன்ற பழக்கங்களுக்கும் அடிமையாவதாகக் கூறுகிறார்கள் மருத்துவர்கள்.
உடல் இயக்கம் இல்லாமல் இருப்பதால், உடலுக்கு
வரும் குளுக்கோஸ் அளவை இயற்கையாகக்
கட்டுப்படுத்தும்
ஆற்றல் குறைவதாகவும், இதனால் நீரிழிவு, இதய நோய்கள் தாக்குவதாகவும் கூறுகிறது மருத்துவக்
குழு.
எனவே, எப்போதும் சுறுசுறுப்பாகவும், தங்களது வேலையை தாங்களே செய்து நோயற்ற வாழ்வை
வாழ்பவர்களாகவும் அனைவரும் மாற வேண்டியது அவசியம் என்று இந்த ஆய்வு மூலம் தெரிய
வந்துள்ளது.