உங்கள் வருகைக்கு நன்றி

அந்தரங்கத்தை படமாக்குவது தவறான செயல்.

வியாழன், 18 அக்டோபர், 2012


அந்தரங்கத் தருணங்களை காமிராவில் பதிவு செய்யும் ஆசை ஆண்களிடம் அதிகரித்து வருகிறது. அது தங்கள் நெருக்கத்தின் அடையாளம் என்று கருதி பெண்களும் அதற்கு அனுமதித்து விடுகிறார்கள். ஆனால் பல நேரங்களில் ஆண்கள் `அதை'த் தங்கள் நண்பர்களிடம் காட்டி மகிழ்கிறார்கள். இணையத்திலும் ஏற்றுகிறார்கள். செக்ஸ் காட்சி களான அவைகளை விற்று சிலர் பணமாக்கவும் செய்கிறார்கள்.

காதலி தன்னைப் பிரிந்து சென்றால், அவளைப் பழிவாங்கவும் அதை பயன்படுத்துகிறார்கள்''- தங்களுக்குள் எப்படிப்பட்ட உறவு இருக்கிறது என்பதை பட மாக முதலில் மனிதன் குகைகளிலும், மலைகளிலும் வரைந்து வைத் தான். பின்பு எழுதி வைத்தான். நாகரீகம் வளர்ந்த பின்பு கடிதம் வாயி லாக தங்கள் அந்தரங்கங்களை பதிவு செய்து அதை அத்தாட்சியாக பாதுகாத்தனர். பின்பு நாகரீகமான உடையோடு இருவரும் நெருக்கமாக இருந்ததை படம் பிடித்து வைத்தனர்.

தான் விரும்புவதை சேகரித்து பாதுகாத்துவைத்து பார்த்து மகிழும் எண்ணம் இயல்பாகவே ஆண் களுக்கும், பெண்களுக்கும் உண்டு. இப்போது கிட்டத்தட்ட எல்லோர் கைகளிலும் செல்போனிலோ, வேறு வகையிலோ கேமிரா இருக்கிறது. அதை பயன்படுத்திப்பார்க்க விரும்புகிறார்கள். அதில் நண்பர்களோடு நிற்பது, ஓடுவது, ஆடுவது போன்றவற்றை படம் பிடிப்பதைவிட, வயதுக்கு தகுந்தபடியான அந்தரங்க விஷயங்களை படம்பிடிக்கவே சிலர் விரும்புகிறார்கள்.

முதலில் வேறுயாரையாவது அந்தரங்கமாக படம் பிடிப்பார்கள். பின்பு தம்மையே படம் பிடித்தால் என்ன என்ற எண்ணம் தோன்றும். அதற்கு தக்கபடி தன் காதலியை அணுகுவார்கள். முதலில் அவளிடம் நெருக்கமாக பழகிவிட்டு, அவளை தன்னோடு சேர்ந்து ஆபாச படம் பார்க்கவைக்கும் அளவிற்கு ஈடுபாடுகொள்ளச் செய்வார்கள். பின்பு, `திருமணத்திற்கு முந்தைய உறவை இப்போது பலரும் தவறாக கருதுவதில்லை' என்று வசீகரமாக பேசி, அதற்கான சம்மதத்தை பெற்றுவிடுவார்கள்.

அது தொடரும் போதே, `யார் யாரோ தோன்றும் அந்தரங்க படங்களை நாம் பார்க்கிறோம். அடுத்தவர்களை அந்த கோணத்தில் பார்ப்பதைவிட நாமே அப்படி இருக்கும்போது அதை படம் பிடித்துவைத்து விரும்பும்போதெல்லாம் பார்க்கலாமே. நாம் நம்மீது வைத்திருக்கும் காதலுக்கும், நம்பிக்கைக்கும் அதை ஒரு ஆவணமாக்கலாமே என்று சொல்வார்கள். இப்படித்தான் பெண்களை `படப்பிடிப்பிற்கு' சம்மதிக்கவைக்கிறார்கள்.

ஆனால் மனித மனதிற்கு ரகசியங்களை பாதுகாக்கும் பலம் கிடையாது. மனித மனம், `ஒரு ரகசியத்தை பாதுகாப்பதால் தனக்கு சுவாரஸ்யம், சந்தோஷம் அதிகமா? அதை வெளியிடுவதால் தனக்கு சந்தோஷம் அதிகமா?' என்று தனக்குள்ளே அடிக்கடி கேள்வி கேட்கும். அதில் வெளியிடுவதுதான் சந்தோஷம் என்ற முடிவை எடுத்துவிடும்போது, தான் பிடித்துவைத்திருக்கும் படங்களை தன்னோடு நட்பில் இருப்பவர்களிடம் காட்டுவார்கள்.

அந்த படத்தை அடுத்தவர்களுக்கு காட்டுவதன் மூலம், தனக்கு அழகான காதலி இருப்பது- அவளை தான் உறவு கொள்வது- அதை படம்பிடித்து தன்னை ஒரு சாதனையாளன் போல் காட்டிக்கொள்வது போன்றதெல்லாம் ஈடேறும் என்று நினைப்பார்கள். அப்படி சிலரிடம் அந்த படம் பரிமாறப்படும்போது, அவர்கள் வேண்டும் என்றோ, அஜாக்கிரதையாலோ அதை பலரும் பார்க்கும் அளவிற்கு இணையங்களில் சேர்த்துவிடுகிறார்கள்.

இதுதான் ஆபத்தாக மாறுகிறது. தம்பதிகளிடம் வெளி மாநிலங்களுக்கோ, வெளிநாட்டிற்கோ செல்லும் போது அங்கு ஹோட்டல்களில் செக்ஸ் வைத்துக்கொள்ளாதீர்கள். அங்கு பல இடங்களில் கேமிரா வைத்து சாதாரணமான ஊழியர்களே படம்பிடித்து, தம்பதிகள் சொந்த ஊர் வரும் முன்பே அந்த காட்சிகள் வந்துவிடுகின்றன. அந்தரங்கத்தை படமாக்குவது தவறான செயல். அதைவைத்து பெண்களை ஆண்கள் மிரட்டுவது கடுமையாக தண்டிக்கபட வேண்டியது.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets