உங்கள் வருகைக்கு நன்றி

எரிவாயு சிக்கனம் தேவை

ஞாயிறு, 28 அக்டோபர், 2012


தாளிப்பதற்கு வாணலியை அடுப்பில் வைக்கும்போதுஅதில் எஞ்சியிருக்கும் தண்ணீரை நன்கு துடைத்துவிட்டு வைத்தால்எரிவாயு மிச்சமாகும்.
கடைசி தோசை அல்லது சப்பாத்தி கல்லில் இருக்கும்போதே அடுப்பை நிறுத்திவிடலாம். கல் சூட்டிலேயே அவை ரெடியாகிவிடும்.
எண்ணெய் நன்கு காய்ந்த பின்பு அடுப்பை அணைத்துவிட்டு தாளிக்கத் தேவையான பொருள்களை எல்லாம் போட்டால் அந்தச் சூட்டிலேயே தாளித்துவிடலாம்.
காபிடீபால் போன்றவற்றை வீட்டில் அனைவரும் ஒரே நேரத்தில் அருந்தலாம். முடியாத பட்சத்தில் ஃப்ளாஸ்கில் ஊற்றிவைக்கலாம். இதனால் ஒவ்வொருத்தருக்கென்று தனித்தனியாக சூடாக்குவதை தவிர்க்க முடியும். சாப்பாட்டுக்கும் இதே முறையைப் பின்பற்றலாம் அல்லது ஹாட்பேக்கில் போட்டு வைத்துவிடலாம்.
இட்லி பாத்திரத்தில் இட்லி அவிக்கும்போது அதன் அடியில் பருப்புஉருளைக்கிழங்கு போன்றவற்றை வைத்தால் அருமையாக வெந்துவிடும்.
தோசையை இருபக்கமும் வேக வைக்காமல் ஆப்பம் மாதிரி மூடிவைத்து எடுக்கலாம். எரிவாயுவும் மிச்சமாகும்புதிய சுவையும் கிடைக்கும்.
யாராவது வீட்டின் அழைப்பு மணியை அடித்தாலோ அல்லது தொலைபேசி அழைப்பு வந்தாலோ காஸ் அடுப்பை அணைத்துவிட்டுச் செல்லுங்கள். எரிவாயு மிச்சமாவதுடன் மறதியால் ஏற்படும் சில விபத்துகளையும் தவிர்க்கலாம்.
வாரத்தில் ஒரு நாள் ஒரு நேரமாவது சமைக்காத இயற்கை உணவுஅவல்முளைகட்டிய பயறுபழங்கள் போன்றவற்றைச் சாப்பிடலாம்.
பருப்புசாதம் போன்றவற்றை குக்கரினுள் மற்றொரு பாத்திரத்தை வைத்து சமைக்காமல்குக்கரிலேயே நேரிடையாக சமைத்தால் எரிவாயு மிச்சமாகும்.
அவ்வப்போது குடிப்பதற்கான நீரை காய்ச்சுவதை தவிர்த்துஅகலமான பாத்திரத்தில் ஒரு நாள் முழுவதற்கும்,தேவைப்படும் தண்ணீரை மொத்தமாகக் காய்ச்சி வைத்துக்கொள்ளலாம்.
சமையல் தொடங்குவதற்கு முன் அதற்குத் தேவையான அனைத்துப்பொருள்களையும் தயார் நிலையில் வைத்துக்கொண்டால்எரிபொருள் விரயமாவதைத் தடுக்கலாம்.
*காய்குழம்பு வகைகளை முடிந்தவரை மூடி வைத்தே சமைக்க வேண்டும்.
குழம்புகூட்டுபொரியல் எனத் தனித்தனியாக தாளிக்காமல் அனைத்தையும் மொத்தமாக தாளிக்கலாம்.
அடுப்பின் பர்னர்களை அவ்வப்போது நன்கு சுத்தம் செய்து எப்போதுமே நீல நிற ஜூவாலை எரியுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets