உங்கள் வருகைக்கு நன்றி

வேலையே நைட்டி தைத்து விற்பதுதான்.

வியாழன், 18 அக்டோபர், 2012


வீட்டிலிருக்கும்போது பெண்களின் வசதியான உடை நைட்டி’. குழந்தைகளும் சினிமா நடிகைகளும் மட்டுமே அணிந்த காலம் மாறி, இன்று எந்த வயதினரும் உபயோகிக்கிற தேசிய உடையானதோடு, காஸ்ட்லியாகவும் ஆகி விட்டது. நைட்டி விக்கிற காசுக்கு ஒரு சல்வாரோ, சேலையோ வாங்கிடலாம்என்கிற ஆதங்கமும் பலருக்கு உண்டு.

தையல் கலை தெரிந்தவர்களுக்கு அந்தக் கவலை தேவையில்லைஎன்கிறார் சென்னையைச் சேர்ந்த கலாவதி. இவரது முழுநேர வேலையே நைட்டி தைத்து விற்பதுதான்.

‘‘
பி.காம் முடிச்சிருக்கேன். டெய்லரிங் தெரியும். வேலையில்லாம இருக்க வேண்டாமேனு ஒரு கடைக்காக ஜாக்கெட், சுடிதார், நைட்டி, பாவாடை தச்சுக் கொடுத்திட்டிருந்தேன். இன்னொருத்தருக்கு தச்சு கொடுக்கிறப்ப கிடைக்கிற காசை விட, நாமாவே தச்சு விற்பனை செய்தா, அதிக லாபம் பார்க்கலாம்னு தோணவே, சொந்தமா பிசினஸ் ஆரம்பிச்சிட்டேன். எல்லாவிதமான உடைகளும் தைக்கத் தெரியும்னாலும், என்கிட்ட ஹாட் சேல்ஸ்னா நைட்டியும் உள்பாவாடையும்தான்’’ என்கிறவர், கற்றுக்கொண்டு தொழில் தொடங்க விரும்புவோருக்கு வழிகளைக் காட்டுகிறார்.

என்னென்ன தேவை? முதலீடு?

‘‘
நைட்டிக்கும் பாவாடைக்குமான துணி, மீட்டர் 20-25 ரூபாய்லேர்ந்து கிடைக்குது.
எக்ஸ்.எல் சைஸ்னா ரெண்டரை மீட்டரும், டபுள் எக்ஸ்.எல் சைஸ்னா 3 மீட்டரும் துணி தேவைப்படும். 40-42 இன்ச் பாவாடைக்கு ரெண்டரை மீட்டர் தேவை. மீட்டர் கணக்குல வாங்கிறதைவிட, பண்டிலா வாங்கறது சிக்கனம். தையல் மெஷின் அவசியம். சாதா மெஷின் 4,500-க்கும், பவர் மெஷின் 12 ஆயிரத்துக்கும் கிடைக்குது. மெஷின் தவிர்த்து மெட்டீரியல் உள்பட எல்லாத்துக்கும் சேர்த்து 4 ஆயிரம் ரூபாய் முதலீடு தேவை.’’

என்ன ஸ்பெஷல்? எத்தனை மாடல்?

‘‘
கடைகள்ல சுத்தமான காட்டன் துணில தச்சது கிடைக்காது. நாம தைக்கிறப்ப, வாடிக்கையாளர் விருப்பத்துக்கேத்தபடி சுத்தமான காட்டன்லயோ, சாட்டின் மாதிரி வேற மெட்டீரியல்லயோ தச்சுத் தரலாம். ஜிப் வச்சது, எலாஸ்டிக் வச்சது, ஸ்லீவ்லெஸ்னு 3 மாடல்கள்ல நைட்டியும், ஃப்ரில் வச்சது, வைக்காதது, வயசானவங்களுக்காக எலாஸ்டிக் வச்சதுனு பாவாடைல 3 மாடல்களும் தைக்கறேன். விருப்பமான மெட்டீரியல், ரெட்டைத் தையல், பாக்கெட் - இதெல்லாம் ஸ்பெஷல்.’’

விற்பனை மற்றும் லாபம்?

‘‘
தையல் அனுபவம் உள்ளவங்க ஒரு நாளைக்கு 10 நைட்டி அல்லது 20 பாவாடை தைக்கலாம். முதல்ல வீட்டுக்குப் பக்கத்துல உள்ளவங்களுக்கும், சின்னச் சின்னக் கடைகளுக்கும் கொடுத்துப் பார்க்கலாம். யாருக்கு, எப்படி வேணும்னு கேட்டும் தச்சுக் கொடுக்கலாம். 25 சதவீதம் லாபம் நிச்சயம்.’’      

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets