உங்கள் வருகைக்கு நன்றி

அயோடின் பற்றாக்குறையால் ஆபத்துகள்'

திங்கள், 22 அக்டோபர், 2012


ஆண்டுதோறும் அக்டோபர் 21ஆம் நாள் உலக அயோடின் தினம் கொண்டாடப்படுகிறது. அயோடின் பற்றாக்குறை குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அயோடின் சத்து என்பது வைட்டமின்கள், இரும்புச்சத்து போன்று உடலுக்கு சிறிய அளவில் தேவைப்படும் ஊட்டச்சத்து ஆகும்.

 உடலில் பல நாளமில்லா சுரப்பிகள் உள்ளன. அவற்றில் முக்கியமானது கழுத்துப் பகுதியில் உள்ள தைராய்டு. இதிலிருந்து தைராக்ஸின் சுரக்கிறது. அயோடின் சத்து குறைபாடு ஏற்பட்டால் தைராக்ஸின் குறைந்த அளவிலேயே சுரக்கும். இதனால் இளம் வயதினரின் அறிவுத்திறன் பாதிக்கப்படும். குழந்தைகளும், மாணவர்களும் படிப்பில் கவனம் செலுத்தமுடியாது. பெரியவர்களுக்கு நரம்புத் தளர்ச்சி ஏற்படும். எனவே தினமும் அயோடின் கலந்த உப்பினை பயன்படுத்தவேண்டும்.
மேலும் கடைகளில் அயோடின் கலந்த உப்பை மட்டுமே விற்பனை செய்யவேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 10 சதவிகிதத்தினர் அயோடின் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சக்தியும், அறிவுத் திறனும் தடைபடாமலிருக்க அயோடின் உப்பினை கண்டிப்பாக நமது உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும் 

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets