உங்கள் வருகைக்கு நன்றி

வீட்டுக்குள் தோட்டம்

செவ்வாய், 29 மே, 2012


 வீட்டிற்கு வெளியே காலி இடத்தில் தோட்டம் போடுவது ஒரு கலை. அதேபோல் வீட்டிற்குள் சின்ன சின்னதாய் செடிகளை வளர்த்து பார்த்து ரசிப்பது புத்துணர்ச்சி தரக்கூடியது. வீட்டிற்குள் செடி வளர்ப்பது எல்லோராலும் முடியாத காரியம். சரியான தாவரங்களை தேர்ந்தெடுத்து அவற்றை சரியான பக்குவத்தோடு வளர்த்தால் கண்ணையும், மனதையும் கவரும் தாவரங்கள் செழித்து வளரும். வீட்டுக்குள் வளர்க்கும் செடிகளைப் பற்றி சில அடிப்படை ஆலோசனைகளை கூறியுள்ளனர் தோட்டக்கலைத்துறையினர் படியுங்களேன்.

சூரிய வெளிச்சம்

தாவரங்களின் வளர்ச்சிக்கு சூரிய வெளிச்சம் மிகவும் அவசியமான ஒன்று. ஜன்னல் அருகில் காலி இடம் இருந்தால் அங்கு அழகு செடிகளை வளர்க்கலாம். சில செடிகளுக்கு குறைவான சூரிய வெளிச்சம் இருந்தாலே போதுமானது அந்த மாதிரியான செடிகளை கிச்சன், டைனிங்டேபிள், ஷோகேஸ் அருகில் வைத்து வளர்க்கலாம்.

வீட்டுற்குள் வளர்க்கும் தாவரங்களை சரியான வகையை தேர்ந்தெடுக்கவேண்டும். காக்டஸ், போன்சாய், கற்றாழை, மூங்கில் போன்ற தாவரங்களை வீட்டிற்குள் வளர்க்கலாம். சரியான இடத்தை தேர்ந்தெடுத்து அதற்குரிய இடத்தில் தாவர தொட்டிகளை வைக்கலாம்

அழகான தொட்டிகள்

இன்றைக்கு அழகழகான டிசைன்களில் தொட்டிகள் கிடைக்கின்றன. வீட்டிற்குள் வளர்ப்பதற்கு என்று சரியான வடிகால் வசதியுள்ள தொட்டிகள் விற்பனை செய்யப்படுகின்றன. அந்த மாதிரியான தொட்டிகளை தேர்வு செய்து தாவரங்களை வளர்க்க வேண்டும். தண்ணீர் வழிந்து வீட்டு தரைகளில் சேதம் ஏற்படாமல் இருக்க தொட்டிகளின் அடியில் அழகான ட்ரே, தட்டு போன்றவைகளை வைக்கலாம்.

சரியான உரமிடுங்கள்

வீட்டுத்தோட்டமோ, வெளியில் போட்டிருக்கும் தோட்டமோ எதுவென்றாலும் சரியான உரமிடவேண்டும். அப்பொழுதுதான் தாவரங்களின் வளர்ச்சி செழிப்பாக இருக்கும். வீட்டிற்குள் வளர்க்கும் தாவரங்களுக்கு இரண்டு தாத இடைவெளியில் உரமிடவேண்டும். தண்ணீர் ஊற்றும்போது எளிதாக அந்த உரம் கரைந்து தாவரங்களுக்கு கிடைக்கும் வகையில் வடிகால் வசதி அமைந்திருக்க வேண்டும். அதேபோல் காற்று வசதியும், சூரிய வெளிச்சமும் சரியான அளவு கிடைக்கச் செய்யவேண்டும். ஏனெனில் அதுவே தாவரங்களின் வளர்ச்சிக்கு ஏற்றது. தினசரி மாலை நேரத்தில் சூரியன் மறைந்த உடன் வீட்டு பால்கனியில் தொட்டிகளை வைத்து சுவாசிக்க செய்யலாம். இதனால் தாவரங்களுக்குத் தேவையான ஆக்ஸிசன் கிடைக்கும். தவாரங்களும் புத்துணர்ச்சியோடு இருக்கும். 

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets