தைய்ராடு சுரப்பியின் முக்கிய பணி!
புதன், 30 மே, 2012
நமது உடலில் பல்வேறு சுரப்பிகள் சுரக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு பணிகளை
சிரமேற்று செய்து வருகிறது. இதில் பலரும் அறிந்த சுரப்பிகளில் முதல் இடத்தில்
இருப்பது தைராய்டு சுரப்பியாகும்.
இது கழுத்தின் முன் பக்கம் ஒரு பட்டாம்பூச்சி வடிவத்தில் அதாவது, கழுத்தின் இரு பக்கத்திலும்
அமைந்துள்ளது. இது பொதுவாக ஒரு அவுன்ஸ் (28.5 கிராம்) எடை கொண்டதாக உள்ளது.
உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை நிர்ணயிக்கும் பொறுப்பு தைராய்டு சுரப்பிக்கு
உள்ளது. தைராய்டு சுரப்பிக்கு அடிப்படையாக இருப்பது அயோடின் எனப்படும் ரசாயனம்.
இது பொதுவாக நாம் உண்ணும் உணவின் மூலம் உடலுக்குக் கிடைக்கும். ஒவ்வொரு மனித
உடலிலும் 50 மில்லி கிராம் அளவிற்கு அயோடின்
இருக்கும். இதனை சேமித்து வைத்து உடலுக்குத் தரும் பணியைச் செய்வது தைராய்டு
சுரப்பிதான்.
தைராய்ட் சுரப்பி சுரந்ததும்,
அது ரத்தத்தின்
மூலம், உடலின் அனைத்து செல்களுக்கும் செல்கிறது.
இதன் மூலம் நமது உடலின் வளர்ச்சி, எலும்புகளின் அமைப்பு,
பாலுறுப்புகளின்
வளர்ச்சி மற்றும் பல்வேறு பணிகளை நடைபெறுகிறது.
எனவே, தைராய்டு சுரப்பியில் ஏதேனும் பாதிப்பு
ஏற்பட்டால், மனிதனுக்கு பல்வேறு உடல் நலக் கோளாறுகள்
ஏற்படும்.
தைராய்டு சுரப்பியில் அதிகமாக சுரந்தால் ஒருவித பிரச்சினையும், குறைவாக சுரந்தால் வேறுவித
பிரச்சினைகளும் ஏற்படுகிறது.
பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும் போது மருத்துவர்கள் கூறுவது தைராய்டு டெஸ்ட்
எடுங்கள் என்பதுதான். எனவே,
தைராய்டு
பிரச்சினையை சரி செய்தால்,
உடல் நலப்
பாதிப்புகள் கட்டுப்படும்.
சிலருக்கு வெளிப்படையாக தைராய்ட் சுரப்பியில் ஏற்படும் பாதிப்பு தெரியும்.
அதாவது கழுத்துப் பாகம் சற்று வீங்கியபடி காணப்படும். இதனை வைத்தே தைராய்டு
பிரச்சினையை அறிந்து கொள்வார்கள்.
எனினும், காலையில் சாப்பிடுவதற்கு முன்பு ரத்த பரிசோதனை எடுத்து அதன் மூலமே தைராய்டு
பிரச்சினையை அறிந்து கொள்ள முடியும். ஒரு சில மருந்துகளே இதற்குத் தீர்வாக உள்ளது.
சிலர் வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டிய நிலையில் உள்ளனர். சிலருக்கு
உணவுக் கட்டுப்பாட்டிலேயே இதனை சரி செய்து விட இயல்கிறது. சில பெண்களுக்கு
குழந்தைப் பேறு தள்ளிப்போகவும் தைராய்டு சுரப்பி காரணமாக அமைகிறது.