உங்கள் வருகைக்கு நன்றி

தல்கீன் ஓதுதல் வடிகட்டிய அறியாமையே _________________________________________

செவ்வாய், 29 மே, 2012


ருவரை அடக்கம் செய்து முடித்தவுடன் அவரது தலைமாட்டில் இருந்து கொண்டு மோதினார் தல்கீன் என்ற பெயரில் எதையோ கூறுவர்.

'
உன்னிடம் வானவர்கள் வருவார்கள். உன் இறைவன் யார் எனக் கேட்பார்கள். அல்லாஹ் என்று பதில் கூறு! உன் மார்க்கம் எது எனக் கேட்பார்கள். இஸ்லாம் என்று கூறு' என்று அரபு மொழியில் நீண்ட அறிவுரை கூறுவது தான் தல்கீன்.

ஒருவர் உயிருடன் இருக்கும் போது சொல்லிக் கொடுக்க வேண்டியதை இறந்த பின் சொல்லிக் கொடுக்கிறார்கள்.

இப்படிச் சொல்லிக் கொடுத்து, அது இறந்தவருக்குக் கேட்டு, அவரும் இந்த விடையைச் சொல்ல முடியும் என்றால் இதை விட உச்ச கட்ட மடமை வேறு என்ன இருக்க முடியும்?
இது போன்ற மூடத்தனத்தைத் தவிர்க்க வேண்டும்.

அடக்கம் செய்து முடித்தவுடன் அதன் அருகில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நின்று கொண்டு (மக்களை நோக்கி)

'
உங்கள் சகோதரருக்காகப் பாவமன்னிப்புத் தேடுங்கள். அவருக்காக உறுதிப்பாட்டைக் கேளுங்கள். ஏனெனில் அவர் இப்போது விசாரிக்கப்படுகிறார்' என்று கூறுவார்கள். அறிவிப்பவர்: உஸ்மான் பின் அஃப்பான் (ரலி).
நூல்: அபூ தாவூத் 2894, ஹாகிம் 1/370 பைஹகீ 4/56

எனவே மய்யித்திற்குச் சொல்லிக் கொடுக்கும் தல்கீனை ஒழித்துக்கட்டி அல்லாஹ்விடம் அவர் நல்ல முறையில் பதில் சொல்ல அனைவரும் துஆச் செய்ய வேண்டும்.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets