உங்கள் வருகைக்கு நன்றி

என்றும் குன்றாத இளமை தரும் அமிழ்தம்’

புதன், 23 மே, 2012


என்றும் குன்றாத இளமை தரும் அமிழ்தம்என்று நெல்லிக்கனியைச் சொல்லுவது முற்றும் பொருந்தும்.  உள்ளங்கை நெல்லிக்கனிஎன்னும் சொல்தொடர் மிகவும் பிரசித்தமானது. நெல்லிக்காயினால் மனித சமூகத்துக்கு எத்தனை விதமான நன்மைகள் ஏற்படுகின்றன என்பது பொதுவாகத் தெரிந்ததே.

ஒரு மனிதனுடைய ஆரோக்கியத்துக்கு மூலக் காரணம் அவனுடைய உடம்பில் ஓடும் சுத்த ரத்தந்தான். இந்த ரத்தத்தில் அந்நியப் பொருள்கள் கலந்துவிட்டால் ரத்தம் கெட்டுவிடுகிறது. ரத்தம் கெட்டு விட்டல் வியாதிகள் உண்டாகின்றன. அவற்றைத் தடுக்கும் அல்லது எதிர்க்கும் சக்தி சரீரத்தில் குறைந்துவிடுகிறது. இதன் விளைவு, இளமையிலேயே முதுமைதென்படுகிறது. அந்த அந்நியப் பொருளே அமிலம் என்பது மனிதனின் ஆரோக்கியத்துக்குக் கடுமையான எதிரியான யூரிக் அமிலம் இதில் நிறைய இருக்கிறது.
ஆப்பிள், ஆலிவ், நெல்லிக்காய் இந்த மூன்று பொருள்களும் ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கும் பொருள்களை அப்புறப்படுத்தும் சக்தி வாய்ந்தவை என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். நெல்லிக்காய் நம் தேசத்தில் எக்காலத்திலும் எவ்விடத்திலும் ஏதோ ஓர் உருவத்தில் சுலபமாகக் கிடைக்கிறது.
ஆயிரம் வருஷங்களுக்கு முன்பே ஆயுர்வேத சாஸ்திரத்தில் நெல்லிக்காயை மிகவும் புகழ்ந்து சொல்லி இருக்கிறார்கள். இதை ஒரு ரசாயனம் என்றே சொல்லுகிறார்கள். எந்த வஸ்து எக்காலத்திலும் எந்த உருவத்திலும் எல்லாருக்கும் உபயோகமுள்ளதாக இருக்கிறதோ, எது சரீரத்தின் ஒவ்வோர் அங்கத்துக்கும் புத்துயிர் தருகிறதோ, எது எல்லா வியாதிகளையும் தீர்க்கும் சக்தி வாய்ந்திருக்கறதோ, எது ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தரக்கூடியதோ, அதை ரசாயனம் என்கிறார்கள். இந்த எல்லாக் குணங்களும் பொருந்தியது நெல்லிக்காய். ஆகையால், இதை ரசாயனம் என்று சொன்னால் மிகையாகாது.
இந்தியப் பெண்மணிகள் நெல்லிக்காயை ஆரோக்கியத்தின் சௌபாக்கியம் என்றும் 
ரத்தத்தைப் பலப்படுத்தும் ஆறு சுவைகளில் இனிப்பு, புளிப்பு, கைப்பு, துவர்ப்பு, உவர்ப்பு ஆகிய ஐந்தும் நெல்லிக்காயில் உள்ளது.
இனிப்பும் உவர்ப்பும் பித்தத்தையும், புளிப்பு வாயுவையும், துவர்ப்பு கைப்பும் கபத்தையும் போக்கக் கூடியவை. வாத-பித்த-கபம் ஆகிய மூன்று தோஷங்களையும் போக்கக்கூடிய சக்தி நெல்லிக்காயில் இருப்பதால், இது மிகவும் சிறந்தது. ஆயுர்வேத வைத்தியத்தில் இது மிகவும் பயன்படுகிறது. இதில் ஏ,பி,ஸி ஆகிய 3 வைட்டமின்றகள் இருக்கின்றன. சாத்துக்குடி ரசத்தில் இருப்பதைப்போல 20 மடங்கு இ வைட்டமின் இதில் இருக்கிறது. மற்றக் காய்கனிகளைப் போல் இல்லாமல், நெல்லிக்காய் வாடினாலும் வைட்டமின் குன்றுவதில்லை இது, இதன் தனிப்பட்ட குணமாகும்.
ஆரோக்கியமாகவும் நோயற்றும் வாழ்வதற்கு, ஒவ்வொரு மனிதனுக்கும் தினசரி 50 மில்லிகிராம் வைட்டமின் தேவை. இதற்கு 4 அவுன்ஸ் சாத்துக்குடி பழரசமோ 8 அவுன்ஸ் தக்காளி பழரசமோ சாப்பிடவேண்டும். ஆனால் இந்த 50 மில்லிகிராம் ய வைட்டமினும் 1/2 அவுன்ஸ் நெல்லிக்காய் ரசத்தில் கிடைக்கிறது. மேலும் இது சாத்துக்குடி, தக்காளி பழங்களைக்காட்டிலும் மலிவானதும்கூட. உலர்ந்த நெல்லிமுள்ளியைவிடப் பச்சை நெல்லிக்காயை உபயோகிப்பது மிகவும் நல்லது.
சில சமயம் சரீரத்தில் ஏற்படும் காயங்கள் ஆறாமல் நாளடைவில் அழுகிப்புழுத்துவிடும். அப்பொழுது நெல்லிக்காயை அரைத்து உருண்டையாக உருட்டி உலரவைத்து, அந்த மாத்திரையைச் சாப்பிட்டால் நன்றாகக் குணமாகிவிடும். இது புழுபூச்சிகளை நீக்கி அழுகுவதைத் தடுக்கும் சக்தி வாய்ந்தது.
பல்லில் ஏற்படும் பயோரியா என்னும் வியாதியைத் தடுப்பது. நெல்லிக்காயை உட்கொண்டால் இந்த வியாதிகள் சீக்கிரம் குணமாகிவிடும். குழந்தைகளுக்குக் கோணலாக முறைத்த பற்களுக்கும் காலத்தில் முளைக்காத பற்களுக்கும் கூட நெல்லிக்காய் மிகச் சிறந்தது.
கர்ப்பிணிகள் முதலிலிருந்து 9 மாதம் வரையில் காலையிலும் மாலையிலும் ஒவ்வொரு நெல்லிக்காய் அல்லது அந்த அளவு நெல்லி முள்ளி உட்கொண்டால், அந்தச் சமயத்தில் ஏற்படும் வாந்தி நின்று நன்றாகப் பசி எடுக்கும். நெல்லிக்காய் சாப்பிடுவதனால் இரும்பும் சுண்ணாம்பும் சரீரத்துக்குச் சேர்ந்து கர்ப்பிணிகள் ஆரோக்கியமுள்ளவர்களாகிறார்கள். ரத்த விருத்தியும் ஏற்படுகிறது. தவிர, கர்ப்பத்தில் இருக்கும் சிசுவுக்கும் நல்ல புஷ்டிகரமான ஆகாரம் கிடைக்கிறது.
ஒரு பெரிய நெல்லிக்காய் முட்டையைவிட அதிக சக்தி கொடுக்கும் தன்மை வாய்ந்தது. இவ்வாறே குழந்தைகளின் ஆகாரத்திலும் நெல்லிக்காயைச் சேர்த்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் அநேக விதமான நோய்கள் கிட்டவே அண்ட மாட்டா. சரீரத்தின் ஒவ்வோர் அங்கம் மலர்ச்சி அடைகிறது. ஆகையால் குழந்தை ஆயுள் முழுவதும் பலசாலியாகவும் இருக்கிறான்.
மாணவர்களுக்கு நெல்லிக்காய் மிகவும் முக்கியமானது. அவர்கள் ஞாபக சக்தியை அதிகரித்துக் கண் பார்வையையும் நன்றாகத் தெளிவாக்குகிறது. சரீரத்தை நெல்லிக்காய் ஆரோக்கியமுள்ளதாக்குவதுடன் புத்திக்கூர்மையையும் ஏற்படுத்துகிறது.
நெல்லிக்காய் மட்டுமின்றி, அந்த மரத்தின் ஒவ்வொரு பாகமும் மனித சமூகத்துக்கு உபயோகம் உள்ளது. இதன் மரப்பட்டை வீடு கட்டவும். கலப்பை முதலிய உழவு யந்திரங்கள், துப்பாக்கி முதலியவற்றுக்கும் உபயோகப்படுகிறது. இந்த மரத்தில் கிடைக்கும் டானின் ஆஸிட் என்னும் பொருள் இந்தியா முழுவதிலும் தோல் பதனிட உபயோகப்படுகிறது. இலைகளில் கிடைக்கும் வெளுத்த நீலநிறச் சாயம் பட்டுத் துணிகளில் நன்றாகப் படியும்.
நெல்லிமரம் இமய மலையின் அடிவாரத்திலும், ஜம்முவிலிருந்து கிழக்கேயுள்ள பள்ளத்தாக்கிலும் தென்னிந்தியாவிலும் இலங்கையின் காடுகளிலும் அதிகமாக இருக்கிறது. வெயில், பனியில் இபுது வாடிவதங்காது, விலங்கு, பட்சிகளாலும் இதற்கு ஆபத்து ஏற்படாது. இந்த மரம் நிதான உயரமாகவும், எக்காலமும் பசுமையாகவும் உள்ளது. ஆகையால்தான் இதைத் தோட்டங்களில் வைத்தப் பயிரிடுகிறார்கள்.
மழைக்காலத்தில்தான் நெல்லிக்கனியை நடவேண்டும். இது மிகவும் நிதானமாக வளர்வதால், காய்க்க 8 அல்லது 10 வருடங்கள் ஆகும். முற்ற முற்றக் காய்களும் அதிகரிக்கும். öந்லலிக்காயின் தோல் 1/3 அங்குலத்துக்கும் மெல்லியது.
இதன் இலை புளிய இலை வடிவத்தில் சுமார் அரை அங்குலம் வரை நீளமுள்ளது. இலை அதிகமாக உதிராது. எப்பொழுதும் மரத்தை பசுமையாகவே வைத்திருக்கும். இதன் பூ சிறியதாகவும் பச்சை கலந்த மஞ்சள் நிறமாகவும் உள்ளது. இதன் பூ இலைகளின் நடுவில் கொத்துக் கொத்தாகப் பூக்கும். இந்தப் பூக்களின் நடுவில்தான் காய்கள் ஆகஸ்ட் மாதக் கடைசியில் கொத்துக் கொத்தாகக் காய்க்க ஆரம்பிக்கும்.
நெல்லிக்காயின் எடை, அந்த மரத்தின் ஜாதியைப் பொருத்து 1/2 முதல் 2 அவுன்ஸ்வரை உளளது. உருவத்தில் பாதிப் பாக்கு அளவிலிருந்து ஒரு சிறிய ஆப்பிள் வரை உள்ளது. இதன் கதுப்பில் கெட்டியாக நார் உள்ளது. இது ஆறு பக்கங்கள் கொண்ட கொட்டையைக் கெட்டியாக மூடியிருக்கும். காய் நன்றாக உலர்ந்து போனால், கொட்டையிலிருந்து கதுப்புப் பிரிந்து விடும். நெல்லிக்காய் பச்சை-மஞ்சள் நிறமுள்ளது. நன்றாகப் பழுத்ததும் ரோஜா நிறமாகிறது. வட இந்தியாவில் செப்டம்பர் முதல் ஏப்ரல் வரையிலும், தென்னிந்தியாவில் வருடம் முழுவதும் விளைகிறது.


கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets