உங்கள் வருகைக்கு நன்றி

இளமையாக ஆரோக்கியமாக வாழ

ஞாயிறு, 13 மே, 2012


இளமையாக ஆரோக்கியமாக வாழ வைக்கும் 10 உணவு வகைகள் இதோ...

1. ஆலிவ் எண்ணெய்.... 

Olive என்பதிலேயே Live என்று ஆசிர்வாதம் செய்வதும் பொதிந்துள்ளது. 40 வருடங்கள் மேலைநாடுகளில் செய்த ஆராய்ச்சிகளில் ஆலிவ் எண்ணெயில் செறிவற்ற கொழுப்பு இருப்பதால் அது நம் உடலில் ஆக்ஸிகரணம் ஏற்படுவதை தடுத்து மூப்பு ஏற்படாமல் தடுப்பது தெரிய வந்துள்ளது. ஆலிவ் எண்ணெயை நாம் செய்யும் காய்கறி சாலட்களில் கலந்து சாப்பிடுவது நல்லது.

2. தயிர்....

ஒரு உயிருள்ள உணவு. இதிலுள்ள லேக்டோடைசில்ஸ் மற்றும் லெபிடா என்ற நல்ல கிருமிகள் நம் வயிற்றில் தீய கிருமிகள் வராமல் தடுக்கிறது. கொலஸ்ட்ரால் அளவை குறைகிறது. நோய் எதிர்ப்பு சக்தி தருகிறது. மலச்சிக்கல் இல்லாமல் வாழ ரத்தக்கசிவை தடுக்கும் விட்டமின் கே உருவாக உதவும். வழி வகுக்கிறது.

பி. காம்ப்ளக்ஸ் வைட்டமின் குறைபாட்டை தவிர்க்கிறது. வயிற்றில் அதிக வாயு ஏற்படுவதை தடுக்கிறது. உடல் எடையை குறைக்க உதவுகிறது. தோலை மினு மினுப்பாக வைக்கிறது. இதில் என்ன அதிசயம் என்றால், இந்த தயிரின் மகத்துவம் 3000 வருஷம் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பாகவே (3000 வருடங்களுக்கு) மொஹஞ்சோதாரே ஹரப்பா நகரத்தில் தெரிந்துள்ளது என்பது தான்.

தயிரிலுள்ள கால்சியம் எலும்புகள் தேயாமல் காப்பாற்றுகிறது. அமெரிக்காவில் ஜலர்ஜியா மாகாணத்தில் மட்டும் அதிகம் பேர் 100 வயதிற்கு மேல் வாழ்வதை ஆராய்ந்தபோது அவர்கள் அதிகம் உணவில் தயிர் சேர்த்துக் கொள்கின்றனர் என தெரிய வந்தது.

எலும்பில் உள்ள மஜ்ஜையில் அதிக அளவில் செல் உருவாக தயிர் உதவுகிறது. ஆக, நமது கிராம மக்கள் கூறுவது போல் "ரத்தம் செத்துப்போகாமல்'' செய்து தயிரின் ஸ்பெஷல் ஆக்ஷன் குடல் சுழற்சி, குடல் புண், பெருங்குடல் புற்றுநோய் வராமல் தயிர் காப்பாற்றும்.

3. மீன்....

மீனிலிருந்து ஒமேகா-3 என்ற செறிவற்ற கொழுப்பு கிடைப்பதால் அது ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்துகிறது. மீன் மனிதனின் ஆயுள் மற்றும் அறிவை வளர்க்கும் திறன் கொண்டது. 30 வருடங்கள் முன்பு அலாஸ்காவில் மற்றும் பின்லாந்தில் வாழும் எஸ்கிமோக்களுக்கு இதயநோய் வராமலே இருப்பது கண்டு ஆச்சரியப்பட்டு ஆராயும்போது அவர்கள் தினமும் அதிக அளவு மீன் சாப்பிடுவதுதான் காரணம் எனத் தெரிந்தது. இருதய துடிப்பை சீராக வைக்கும். திறமை மீனுக்கு உண்டு. அதற்காக, நாம் செம்மீன் என்ற இறால்களை சாப்பிடக்கூடாது. அதில் செறிவு கொழுப்பு அதிகம்.

4. சாக்லேட்....

வாழைப்பழம் வேண்டாத குரங்கும் இல்லை. சாக்லேட் வேண்டாத மனிதரும் இல்லை. சாக்லேட் மனிதனை நீண்ட நாள் வாழ வைக்கும். பனாமா நாட்டைச் சேர்ந்த சன்ப்ளாஸ் தீவில் வாழும் மக்களுக்கு உள்நாட்டு பகுதியில் வாழ்வோரைக் காட்டிலும் 6 மடங்கு குறைவாகவே இதயநோய் ஏற்படுகிறது. இதற்கு காரணம் நாம் தண்ணீர் சாப்பிடுவது போல அவர்கள் எக்கச்சக்கமாக தினம் கோகோ பானம் அருந்துவது தான்.

இதிலுள்ள இசபிளரனாய்ட்ஸ் என்ற பொருள். ரத்தக்குழாய்களை இளமையாக வைக்கிறது. இதனால் அவர்களின் உடலில் ரத்த ஓட்டம் தங்கு தடையின்றி மடை திறந்த வெள்ளம் போல் உடலின் பல பாகங்களுக்கும் பாய்வதால் அவர்களிடம் ரத்தக் கொதிப்பு, சிறுநீரகக் கோளாறு சர்க்கரை நோய் மூளைச்சிதைவு நோய் எட்டியும் பார்ப்பதில்லை. ஆனால் கறுப்பு சாக்லேட்தான் சாப்பிடவேண்டும். மில்க் சாக்லேட்டில் செறிவு கொழுப்பு இருப்பதால் அதனால் இதுபோன்ற நன்மைகள் கிடைக்காது.

5. கொட்டை வகை உணவுகள்......

பாதாம், முந்திரி, காரைப் பருப்பு, வால்நட் ஆகியவற்றில் செறிவற்ற கொழுப்பு உள்ளதால் அவை இதயத்தை பாதுகாக்கும்.

6. கருப்பு திராட்சை......

இதிலுள்ள சில சத்துக்கள் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படுவதை தடுக்கும் உடலை ஆரோக்கியமாக வைக்கும். ஞாபகசக்தியை வளர்க்கும். தினம் தினம் கறுப்பு திராட்சை சாப்பிட்டால், தலைமுடி நரைக்காமல், இரும்பு போன்ற இதயத்துடன் வாழலாம்.

7. சர்க்கரை வள்ளிக்கிழங்கு......

ஒகினாவா என்று ஜப்பானிய தீவில் 100 வயதிற்கு மேற்பட்டவர்கள் அமெரிக்காவை விட 5 மடங்கு அதிகம். வாழும் நிலை உள்ளதால், சர்க்கரை வள்ளிக் கிழங்கு ஆலிவ் எண்ணெய் அளவிற்கு உடலை ஆரோக்கியமாக வைக்கின்றன. மேலும் அவற்றில் வைட்டமின் தாதுப்பொருட்கள் மற்றும் அபூர்வமான ஆன்டி ஆக்சிடேன்ட்டு உள்ளது. முக்கிய உணவுகள் கத்தரிக்காய், பாகற்காய், சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஆகும்.

8. க்ரீன் டீம்......

ஜப்பானியர் அதிக அளவில் க்ரீன் டீ என்னும் பானத்தை பருகுகின்றனர். நம் நாட்டில் க்ரீன் டீ கிடைக்கிறது. இதில் தினம் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து பருகினால் உடலில் தளர்வு சோர்வு, மூப்பின்றி வாழலாம். தினம் இரண்டு முறை க்ரீன் டீ காப்பியில் மூளைச்சிதைவு நோய் வராது.

9. சிவப்பு நிற ஒயின்.....

இதில் அதிக அளவில் ரேஸ்ரிடோரோல் ஒரு பொருள் இருக்கிறது. இது இதயத்தை பலப்படுத்தக் கூடியது. மேலும் நம் உடம்பில் உள்ள ஆண்டிஏஜிங் ஜீன்ஸ்-யை தூண்டி விட்டு உடலை இளமையாகவும், ஆரோக்கியமாகவும் வைக்கும். சர்க்கரை நோய் ரத்தக்கொதிப்பை அறவே தடுக்கும்.

10. ஓட்ஸ் மற்றும் கம்பு ராகி வகைகள்......

தினமும் கம்பம் கூழ் சாப்பிடும் கிராம மக்களுக்கு உடல் வஜ்ரம் போல ஆகி விடுகிறது. தினமும் காலை வெறும் வயிற்றில் ஓட்ஸ் கஞ்சி சாப்பிடுவது உடலை மெலிதாகவும் ஆரோக்கியமாகவும் வைக்கும். இதிலுள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் மற்றும் குடல் புற்று நோயிலிருந்து காப்பாற்றும்.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets